From Sat Oct 2 19:30:13 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 03 Oct 1999 02:33:18 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 11261 invoked from network); 3 Oct 1999 02:33:11 -0000
Received: from giasmd01.vsnl.net.in (202.54.6.1) by qh.egroups.com with SMTP; 3 Oct 1999 02:33:11 -0000
Received: from giasdmd01.vsnl.net.in (m38.chn.vsnl.net.in [202.54.35.126]) by giasmd01.vsnl.net.in (8.9.3/8.9.3) with SMTP id IAA13989 for ; Sun, 3 Oct 1999 08:03:12 +0530 (IST)
Message-Id: <199910030233.IAA13989@...>
Date: Sun, 3 Oct 1999 8:0:15 +0500
From: "RM.Krishnan"
To: "agathiyar@egroups.com"
Organization: poosoft
X-mailer: FoxMail 2.1 [en]
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Tamil for cordless phone
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="us-ascii"
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 2401

At 10/2/99 12:08:00 PM, you wrote:
>
>அன்புள்ள ராமகி,
>
>At 08:08 AM 10/2/99 +0500, you wrote:
>>At 10/2/99 7:38:00 AM, you wrote:
>>>>
>>>>அதிட்டமில்லாத வகையாக, இன்றைக்கு சரடு என்பது ஆகுபெயரில் (பொய்யெனும்) இழிவான பொருளில்
>>>பழக்கத்தில்
>>>>வந்து விட்டது.
>>>
>>> "கயிறு திரித்தல்" என்பதுவும்கூட அதே போன்ற பொருளைக்
>>> கொடுக்கக்கூடிய சொல்தான்.
>>> சில சமயங்களில் இந்த மாதிரியான சூழ்நிலைகள் தவிர்க்கப்
>>> படமுடியாதவைதான்.
>>> ரொம்பவும் கூட்டிக்கழித்துப்பார்த்தால், "வைத்தியர்
>>> காய்கறி வாங்க சந்தைக்குச் சென்ற" கதையாகிவிடும்:-)
>>>
>>> அன்புடன்
>>>
>>> ஜெயபாரதி
>>>
>>அது என்னங்க, வைத்தியர் காய்கறி வாங்க சந்தைக்குச் சென்ற கதை; கொஞ்சம் சொல்லுங்களே,
>தெரிஞ்சுக்குறோம்.
>>
>>அன்புடன்,
>>இராம.கி.
>
>
> அப்படிக்கேளுங்க, சொல்றேன்.
> சந்திரா சேகரிக்கும் folk-lore செவிவழிமரபுக்கதைகள்
> ஆவணத்திற்கும் ஆகுமே.
>
> ஒரு வைத்தியரின் மனைவிக்கு வாரச்சந்தையன்று சந்தைக்குப்
> போகமுடியவில்லை. ஆகவே வைத்தியரையே போய் காய்கறிகள்
> வாங்கிவருமாறு அனுப்பிவைத்தாள்.
> சந்தைக்கு வைத்தியர் சென்றார்.
> பார்த்தால், எங்கும் கறிகாய்கள் ஆங்காங்கு குவிந்து கிடந்தன.
> அப்படியே வட்டமிட்டவாறு நோட்டமிட்டார்.
> உருளைக்கிழங்கு.....
> ஊஹூம் வாய்வு. ஆகாது.
> பறங்கிக்காய்?
> வாதமாச்சே! கூடாது.
> அது என்ன அங்கே கிடப்பது?
> சே சே! பயிற்றங்காய். பித்தத்தைக் கிளப்புமே!
> முட்டைக்கோசு....
> ஏப்பமாகப் பரியும். வேண்டாம்.
>
> இப்படியே ஒரு சுற்றுசுற்றிவந்தார். நெடுநேரமாகியும் ஒன்றும்
> தேறவில்லை.பதார்த்தகுண சிந்தாமணியில் சொல்லப்பட்ட முப்பத்திரண்டு
> வகையான உணவுப்பதார்த்தக் குற்றங்களை நீக்கி, எதையும் அவரால்
> வாங்கமுடியவில்லை.அப்படியே பொடிநடையாக வீடு வந்து சேர்ந்து,
> வெறும் பையை மனைவியிடம் கொடுத்தார்.
> அன்றும் அடுத்த சில நாட்களுக்கும், வைத்தியருக்கு ஆகாரம்
> வெந்தயக்குழம்பு, சுண்டைவற்றல் குழம்பு. சுட்ட அப்பளம், வாட்டிய
> கருவாடு....இப்படியாக நடந்தது.
>
> (இந்த மாதிரி கதைகளை நான் சொல்லும்போதெல்லாம்
> உங்கள் தந்தையார் அவருக்கே உரித்தான ஒரு முறையில்
> சிரிப்பாரே! இப்போதும் அதே சிரிப்பு உண்டுமா?)
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
அவருக்குப் பதிலாக நான் சிரித்தேன். மரபியல் (genetics) என்று ஒன்று இருக்கிறதல்லவா? வாழையடி வாழையாக.

அன்புடன்,
இராம.கி.