From Sat Oct 2 19:41:50 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 03 Oct 1999 02:44:56 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 14866 invoked from network); 3 Oct 1999 02:44:54 -0000
Received: from copper.singnet.com.sg (165.21.7.30) by qh.egroups.com with SMTP; 3 Oct 1999 02:44:54 -0000
Received: from sanjay01 (qtns02455.singnet.com.sg [165.21.165.245]) by copper.singnet.com.sg (8.9.1a/8.9.1) with SMTP id KAA29602 for ; Sun, 3 Oct 1999 10:44:51 +0800 (SGT)
Message-ID: <001201bf0d45$810bc540$f5a515a5@sanjay01>
From: "sankar"
To:
Date: Sun, 3 Oct 1999 10:17:43 +0800
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Kalki--1
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2402

அன்புள்ள இணைய அகஸ்தியர்களுக்கு,
வணக்கங்கள்.

கல்கி அவர்கள் வாசகர் வட்டத்தை விரிவு படுத்த நினைத்துச்
சாதித்தும் இருக்கிறார். அவர் படைப்புக்கள் காலத்தைக்
கடந்தவையோ இல்லையோ நிச்சயம் அதிகமானோரால்
வாசிக்கப்பட்டவை. இதற்கு நிச்சயம் அவருடைய தெளிவான,
எளிய நடையும் மற்றும் நகைச்சுவையுமே காரணமாய் இருந்திருக்கும்
என்று நான் நினைக்கிறேன்.அவை கவரும் வண்ணம்
இல்லாதிருந்தால், 'ஏட்டிக்குப் போட்டி' மறு
பதிப்பு கண்டிருக்க வாய்ப்பில்லை. ஏன்றால்
உச்சகட்ட நையாண்டியுடன் பலரையும்
போற்றுவது போல தூற்றியுள்ளாரே!

எல்லா கட்டுரைகளிலுமே, அவருடைய கொள்கைகள்பின் புறத்தில்
படிப்பவர் மனதில் ஓடியவண்ணம் இருக்கிறது எனலாம்.
ஆசிரியர் நோக்கமே அது தான் என்பது என் எண்ணம்.
எனில், கல்கி அவர்கள் வெற்றி கண்டுள்ளார்.
இவ்விஷயத்தில் கல்கி ஏனோ எனக்கு
புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனை
நினைவு படுத்தினார்.


பாரதிதாசன் எதைப்பற்றி(:-) எழுதினாலும்,
காதல் உள்பட அதில் 'தமிழ்' க்கு
சரிசமமான (அல்லது சற்று கூடுதலாயோ)
முக்கியத்துவம் கொடுத்திருப்பார்.
ஒரு முறை அவருடையை படைப்புக்களை
பற்றிய கட்டுரை ஒன்றுக்காக சில புத்தகங்களைப்
படிக்க நேர்ந்தது. எங்கும் எதிலும்
'தமிழ்', மற்ற எந்த ஒரு கவிஞனும்(நான்அறிந்த வரை:-))
வலியுறுத்தாத அளவு தமிழ் மொழியில்
பற்று கொண்டிருந்ததை நான் அறிந்தேன்.

ஆனால், கல்கியிடம் ஒரு வித்தியாசம்.
அவர் அதுபோல் ஒரே ஒரு நோக்கம்
மட்டுமில்லாமல், ஒவ்வொன்றுக்கும்
ஒரு கொள்கையை பின்னணியில்(:-))
கொண்டிருக்கிறார்.

கல்கி அவர்களின் நோக்கங்களில் ஒரு சில:-
காங்கிரஸ் (இல்லை ராஜாஜியா:-))கொள்கைகள்
சமுதாய சிந்தனை/விழிப்புணர்வு,
பத்திரிக்கை உலகை விரிவாக்குதல்
போன்றவை என்று தெரிகிறது.
இதில் கடைசியில் உள்ளதில் அதிக
கவனம் கொண்டுள்ளார். மற்ற கொள்கைகளைப்
பரப்ப பத்திரிக்கையைக் கருவியாய்
பயன் படுத்தி அதே நேரம் வாசகர்
வட்டத்தையும் பெருக்கி,
ஒரே கல்லில் இரண்டு:-) மாங்காய்
அடித்திருக்கிறார்.

நாளை மீண்டும் தொடரும்,...........
அன்புடன்,
ஜெயந்தி.