From Periannan Chandrasekaran Sat Oct 2 20:06:23 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 03 Oct 1999 03:09:28 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 23144 invoked from network); 3 Oct 1999 03:09:27 -0000
Received: from web701.mail.yahoo.com (128.11.23.21) by qh.egroups.com with SMTP; 3 Oct 1999 03:09:27 -0000
Message-ID: <19991003031243.26994.rocketmail@...>
Received: from [209.86.48.122] by web701.mail.yahoo.com; Sat, 02 Oct 1999 20:12:43 PDT
Date: Sat, 2 Oct 1999 20:12:43 -0700 (PDT)
From: Periannan Chandrasekaran
To: agathiyar@egroups.com
MIME-Version: 1.0
Subject: [agathiyar] caivas destroyed ciththar works - references I
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
Content-Transfer-Encoding: 7bit
X-Yahoo-Message-Num: 2403



சின்னாட்கள்: முன்னர்ச் சித்தர்நூல்கள்ச் சைவர்களே அழைத்தனர் என்னும் செய்திக்கான நேரடிச் சான்றை
இங்கு
இடுகின்றேன்.
[இண்டி இராமின் முழக்கத்தின்படித் தமிழில் தற்காலக் கருத்துகளும் பயில எழுத ஆங்கில முதலை
மொழிபெயர்த்துப் படிக்கிறேன்.
அவர்க்கு எம் எஅன்றி. அவர் இரண்டாம் முறையும் அண்மையில் அவ்வாறு சொல்லவும் என் மண்டையில் ஏறி
வேளை செய்யத் தொடங்கியுள்ளது:-))
ஆங்கில முதலைப் பின்னர்க் காட்டுகிறேன்; அக்காப் பையன் என்னைப் "பராசக்தி" படத்தின் மீதமும்
பார்க்க அகவிக்கொண்டே இருக்கிறான்.
:-))] கலைஞர் 47 ஆண்டுகட்கு முன்னரே பண்ணித்தமிழ்கூட்டி வசனம் படைத்துத் தமிழ் நெடுநாள் வாழ
வழிவகுத்துள்ளார் என்பது இதுவரை
தெளிவு.]


கமில் சுவெலெபிலின் "ஆற்றல்களின் கவிஞர்கள்"
["The Poets of the Powers" by Kamil Zvelebil]

பக்கம்: 19-20:
"...இது நாள்வரை ஆய்வாளர்கள் தமிழ்ச் சித்த மரபைப் பற்றி அறியாமல் இருந்ததற்குக் குறைந்தது
இரண்டு வெகு நல்ல
காரனங்கள் உண்டு: முதலாவதாகச் சித்தர்களுக்கு எதிராகத் தமிழ்நாட்டு மரபு (வைதீக?) இந்துக்களே
கொண்டிருந்த மனச்சாய்வு
(prejudice); இரண்டாவது, சித்தர்களின் தத்துவங்கள் மறைகளாகக் (esoteric teaching)
காக்கப்பட்டு வந்துள்ளன.

தென்னக மரபு இந்துக்கள் (பொதுவாக வடநாட்டு இந்துக்களைவிட மரபினராக (orthodox)
இருப்பவர்கள்) சித்தர்த்
தத்துவங்களைப் புறக்கணிக்க முயன்றது மட்டுமன்றி அவற்றை அடக்கவும் முயன்றுள்ளனர். சித்தர் நூல்களைக்
காக்காமலும்
போலிகள் படைத்தும் அவற்றை அழிக்கவும் முயன்றனர். டெய்லர் என்பார் தம்முடைய "கீழைச் சுவடிகளின்
அட்டவணை*
(3 தொகு. சென்னை, 1857-62) என்னும் நூலில் "சில ஆண்டுகட்கு முன்னர்ச் சைவ வகுப்பைச் சார்ந்த
துறவிகள் (பண்டாரங்கள்)
இக் கவிதையின் (அதாவது, சிவவாக்கியரின் பாடலின்) ஒவ்வொரு பிரதியையும் முனைப்புடனும்
சீராகவும் துழவிக் கண்டுபிடித்து
அழிக்கின்றனர் என்று எனக்குச் சொல்லப்பட்டது. அதன் விளைவாக அந்நூல் அரியதொன்றாகிவிட்டது;
பெரும்பான்மை யும்
தமிழ்க் கிறித்தவர்கள்தாம் அதைப் போற்றிவருகின்றனர்."
மேலும் மேற்காட்டிய கட்டுரையில் அ.வ.ஐயர் என்பார் சொல்வார்:"மரபுச் சைவர்கள் தமிழ்ச்சித்தர்க்ள்
எதிராகக் கொண்டிருந்த
மனச்சாய்வு வேரூன்றியருந்த்தது. சித்தர்க்ளும் சிவனை முதற் பெருங்கடவுளக் கொண்டிருப்பினும் அவர்களைப்
புறக்கணித்தோ
இழிவாகக் கருதியோதாம் வந்தனர். ..அச் சாய்வின் விளைவாகத் திருமூலரின் நூலைத் தவிர்த்த பிற
அனைத்துச் சித்த நூல்களும்
கேட்பாரற்று உழன்றன..." (பக். 7)


*= A Catalogue Raisonnee of Oriental Manuscripts

பெ.சந்திரசேகரன்
அட்லாண்டா, அமெரிக்கா
__________________________________________________
Do You Yahoo!?
Bid and sell for free at http://auctions.yahoo.com