From Sat Oct 2 20:49:50 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 03 Oct 1999 03:52:56 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 25850 invoked from network); 3 Oct 1999 03:52:53 -0000
Received: from giasmd01.vsnl.net.in (202.54.6.1) by qg.egroups.com with SMTP; 3 Oct 1999 03:52:53 -0000
Received: from giasdmd01.vsnl.net.in (m37.chn.vsnl.net.in [202.54.35.99]) by giasmd01.vsnl.net.in (8.9.3/8.9.3) with SMTP id JAA09412; Sun, 3 Oct 1999 09:22:53 +0530 (IST)
Message-Id: <199910030352.JAA09412@...>
Date: Sun, 3 Oct 1999 9:19:57 +0500
From: "RM.Krishnan"
To: "kalaichol@egroups.com"
CC: "tamil@..." , "agathiyar@egroups.com"
Organization: poosoft
X-mailer: FoxMail 2.1 [en]
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: [kalaichol] Tamil for mindset
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="us-ascii"
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 2404

At 10/2/99 12:37:00 PM, you wrote:
>
>mindset-க்கு நேராக "உளப்பாடு" என்று தெரிவு செய்தேன்;
>
>திரு. இராம. கி. "மனநிலை" போதும் என்கிறார்கள்.
>பிறகு, mood, state of mind என்பதற்கெல்லாம் என்செய்ய?
>
>design, plan, scheme, project இவற்றுக்கெல்லாம் திட்டம் என்பதுபோல
>ஆகிவிடாதா?
>
>அன்புடன்,
>நா. கணேசன்
>
நீங்கள் சொல்லுவது உண்மைதான். மேலும் இரண்டு ஆங்கில சொல்லாட்சியை நீங்கள் கொண்டு வந்தபின் தான்
என்னுடைய முன்னீட்டின் குறை தெரிகிறது. ஒரு முடிவு காண மூன்றையும் ஒரு சேரப் பார்ப்போமே!

mindset என்பதும் state of mind என்பதும் கிட்டத் தட்ட ஒன்று போல் எனக்குத் தென்படுகிறது. வேறு பாடு என்று
பார்த்தால் mindset என்பது 'ஏற்படுவது/ஏற்படுத்தப் படுவது'. state of mind என்பது 'தானாக அமைவது'. அதை ஏற்படுத்த
முடியாது என்று நினைக்கிறேன்.

'மன நிலை' state of mind என்று சொல்லுவதற்கு மிகச் சரியாகத் தோன்றுகிறது. அப்படி அதைப் பாவித்தால், mindset -
ற்கு உளப்பாடு என்று வைத்துக் கொள்ளலாம். (உளம் படவும் முடியும்; உளத்தைப் படுத்தவும் முடியும்; எனவே உளப்பாடு
உகந்ததாக முடியும்)

(ஐயா, குமார பாரதி, உங்களின் கருத்து என்ன? உங்களோடு, மற்று யாரேனும் உளவியல் தெரிந்தவர்கள் தான் இந்த
நுணுகிய வேறுபாட்டை விளக்க வேண்டும்.)

mood என்பது frame of mind என்பதைக் குறிப்பதாக எண்ணுகிறேன். இதற்கும் state of mind -ற்கும் என்ன வேறு பாடு?
வேறாக இருக்குமானால் மனத் தோரணை என்றே சொல்லலாமா? நிலைத்தல், படுதல்/படுத்தல், என்பது போல்
தோரணித்தலும் state concepts தானே! process concepts இல்லையே! நாளாவட்டத்தில் மனத் தோரணை, மனணை
என்றே ஆகலாம் தானே!

முடிவாக,

state of mind - மன நிலை
mindset - உளப் பாடு
mood - மன(த் தோர)ணை

பயன் படுத்தம்:

With this state of mind, he can't perform - இந்த மன நிலையில் அவன் பணியாற்ற முடியாது.
With this kind of mindset, she will behave only like that - இப்படி ஒரு வகையான உளப்பாடோடு, அவள் அப்படித்தான்
நடந்து கொள்வாள்.
His mood changes time to time; one has to be careful. - அவன் மனணை, நேரத்திற்கு நேரம் மாறிக் கொள்கிறது;
யாரும் கவனமாக இருக்க வேண்டும்.

இப்பொழுது சரியா? இல்லை, இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து பார்க்க வேண்டுமா?

அன்புடன்,
இராம.கி.