From jaybee Sun Oct 3 03:37:33 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 03 Oct 1999 10:40:39 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 28673 invoked from network); 3 Oct 1999 10:40:37 -0000
Received: from smtp.mail.yahoo.com (128.11.68.32) by qg.egroups.com with SMTP; 3 Oct 1999 10:40:37 -0000
Received: from sp-69-69.tm.net.my (HELO user) (202.188.69.69) by smtp.mail.yahoo.com with SMTP; 3 Oct 1999 03:46:09 -0700
Message-Id: <3.0.3.32.19991003183917.00884a80@...>
X-Sender: jaybee555@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Sun, 03 Oct 1999 18:39:17 +0700
To: agathiyar@egroups.com
From: jaybee
In-Reply-To: <3.0.3.32.19991002172600.00868100@...>
References: <3.0.3.32.19991002120829.0086a100@...> <199910020241.IAA23175@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: KaaykaRi#2-was Tamil for cordless phone
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2408


அன்பர்களே,

At 05:26 PM 10/2/99 +0700, JayBee wrote:
>
> காய்கறி என்றவுடன் அது சம்பந்தமான ஒரு தனிப்பாடல்
> நினைவுக்கு வந்தது. அரைகுறையாக ஞாபகந்தான்.

காய்கறி வாங்குவதில் பலருக்கு பாண்டித்யம் இல்லாது
இருக்கலாம். ஆனால் சம்பிரமமாகச்சாப்பிடுவதும் ஒரு கலைதான்.
அதைவிட மெனு ஆர்டர் பண்ணுவது.
சைவமடங்களில் இருந்த சந்நிதானங்கள், தம்பிரான்கள்
ஆகியோரைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க பலருக்கு வாய்ப்பில்லை.
அப்படியே ஏதேனும் தெரிந்திருந்தாலும்கூட அவர்கள் ஏதோ ஒரு வகை
ஸ்டீரியோ டைப் ஆசாமிகளாகத் தோன்றக்கூடும்.
ஆனால் அவர்களில் சிவஞானமுனிவர் சற்று வித்தியாசமான
ஆளாகத் தோன்றுகிறார்.
அவர் ஒரு மடத்தில் அப்ரெண்ட்டிஸ் தம்பிரானாக இருந்த
காலத்திலேயே, ஒரு பந்தியில் பரிமாறப்பட்ட சாப்பாட்டைப் பார்த்து
"கொங்கன் வந்து பொங்கினான்" என்ற பாடலைப் பாடியவர்.
இவரே ஒரு பண்டாரசந்நிதானமாக விளங்கிய காலத்தில்,
அவருடைய தவிசிப் பிள்ளை(சமையற்காரர்)யிடம் ஒரு நாள் காலை
சமைக்கவேண்டிய மெனுவை பாடலாகவேதொடுத்துக் கொடுத்தி
ருக்கிறார்.

"சற்றே துவையல் அறை; தம்பிஒரு பச்சடிவை,
வற்றல்ஏ தேனும் வறுத்துவை - குற்றம்இலை
காயமிட்டுக் கீரைகடை கம்மென வேமிளகுக்
காயரைத்து வைப்பாய் கறி."

மிளகுக்காய் என்பது மிளகாயின் பழையபெயர். மிளகுக்கு
பதிலாக நம் சமையலில் இடம் பெற்றது;போர்த்துகீசியரின் உபயம்.

அன்புடன்

ஜெயபாரதி

>
> "வெள்ளரிக்காயா விரும்பும் அவரைக்காயா,
> உள்ளமிளகாயா, ஒரு பேச்சுரைக்காயா"
>
> என்று வரும். மீதி இரண்டடிகள் ஞாபகமில்லை.
> இந்தப் பாடலை அடியொற்றியே கண்ணதாசன், "பலே பாண்டியா"
> படத்தில்,
>
> "அத்திக்காய் காய் காய், ஆலங்காய்வெண்ணிலவே,
> இத்திக்காய் காயாதே, என்னைப்போல்பெண்ணல்லவோ!"
>
> என்ற பாடலை எழுதினாராம்.
> அந்த மூலப்பாடலின் முழுவடிவம் யாருக்காவது நினைவிருக்கிறதா?
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
>
>> அப்படிக்கேளுங்க, சொல்றேன்.
>> சந்திரா சேகரிக்கும் folk-lore செவிவழிமரபுக்கதைகள்
>> ஆவணத்திற்கும் ஆகுமே.
>>
>> ஒரு வைத்தியரின் மனைவிக்கு வாரச்சந்தையன்று சந்தைக்குப்
>> போகமுடியவில்லை. ஆகவே வைத்தியரையே போய் காய்கறிகள்
>> வாங்கிவருமாறு அனுப்பிவைத்தாள்.
>> சந்தைக்கு வைத்தியர் சென்றார்.
>> பார்த்தால், எங்கும் கறிகாய்கள் ஆங்காங்கு குவிந்து கிடந்தன.
>> அப்படியே வட்டமிட்டவாறு நோட்டமிட்டார்.
>> உருளைக்கிழங்கு.....
>> ஊஹூம் வாய்வு. ஆகாது.
>> பறங்கிக்காய்?
>> வாதமாச்சே! கூடாது.
>> அது என்ன அங்கே கிடப்பது?
>> சே சே! பயிற்றங்காய். பித்தத்தைக்கிளப்புமே!
>> முட்டைக்கோசு....
>> ஏப்பமாகப் பரியும். வேண்டாம்.
>>
>> இப்படியே ஒரு சுற்றுசுற்றிவந்தார்.நெடுநேரமாகியும் ஒன்றும்
>> தேறவில்லை.பதார்த்தகுண சிந்தாமணியில் சொல்லப்பட்ட முப்பத்திரண்டு
>> வகையான உணவுப்பதார்த்தக் குற்றங்களை நீக்கி, எதையும் அவரால்
>> வாங்கமுடியவில்லை.அப்படியே பொடிநடையாக வீடு வந்து சேர்ந்து,
>> வெறும் பையை மனைவியிடம் கொடுத்தார்.
>> அன்றும் அடுத்த சில நாட்களுக்கும், வைத்தியருக்கு ஆகாரம்
>> வெந்தயக்குழம்பு, சுண்டைவற்றல் குழம்பு.சுட்ட அப்பளம், வாட்டிய
>> கருவாடு....இப்படியாக நடந்தது.
>>
>> (இந்த மாதிரி கதைகளை நான்சொல்லும்போதெல்லாம்
>> உங்கள் தந்தையார் அவருக்கே உரித்தான ஒரு முறையில்
>> சிரிப்பாரே! இப்போதும் அதே சிரிப்பு உண்டுமா?)
>>
>> அன்புடன்
>>
>> ஜெயபாரதி
>>
>>===========================================
>