From Sun Oct 3 15:58:00 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 03 Oct 1999 23:01:06 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 17430 invoked from network); 3 Oct 1999 23:01:04 -0000
Received: from copper.singnet.com.sg (165.21.7.30) by qg.egroups.com with SMTP; 3 Oct 1999 23:01:04 -0000
Received: from sanjay01 (qtns04321.singnet.com.sg [165.21.170.151]) by copper.singnet.com.sg (8.9.1a/8.9.1) with SMTP id HAA14597 for ; Mon, 4 Oct 1999 07:01:02 +0800 (SGT)
Message-ID: <001a01bf0def$0c9fb040$97aa15a5@sanjay01>
From: "sankar"
To:
Date: Mon, 4 Oct 1999 06:31:32 +0800
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Kalki ------ 2
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2417

அன்புள்ள இணைய அகஸ்தியர்களுக்கு,
வணக்கங்கள்.

கல்கி அவர்களின் வரலாற்று நாவல்களைவிட
எனக்கு அவருடைய யதார்த்தமான சமூக
கதைகள், கட்டுரைகள் மிகவும் பிடிக்கும்.

'ஏட்டிக்குப்போட்டி'கட்டுரைத்தொகுப்பில்
பதினேழு கட்டுரைகள்சேர்க்கப்பட்டுள்ளன.

சிலர் சில வேளைகளில் சீரியஸ் விஷயங்களை
விட நகைச்சுவையை விரும்புவார்கள்.
(நான் கூறுவது reading for pleasure
light reading போன்றவற்றையும்
சேர்த்துத்தான்:-))

அவர்களுக்கு உகந்தது இத்தொகுப்பு.
இதையும் மீறி ஒவ்வொன்றிலும் ஒரு
'செய்தி' இருக்கவே செய்கிறது.
படிக்கும் போது (குலுங்கிக் குலுங்கி இல்லாவிட்டாலும்)
சிரித்து விட்டு பின்னர் நிச்சயம் சிந்திப்பர் வாசகர்.
அக்காலத்தில் அச்சிந்தனையை அதிகமாகவே கல்கி
தூண்டியிருப்பார். ஏனென்றால் எடுத்துக்கொண்டு
உள்ள சமுதாய அறியாமைகள்,அறிவின்மைகள்
அப்போது நிலவியவை.

சற்று பொறுமையாகத்தான் படிக்க வேண்டும்.
இக்கால வேகம் இதில் இருக்காது.மேலும் சம்ஸ்கிருதச்
சொற்களை பல இடங்களில் கையாண்டிருக்கிறார்.
அவர் காலம் அப்படி. தூயதமிழ் மட்டுமே
பிடிப்பவர்களுக்கு இது பிடிக்காமல் போகலாம்.
இருப்பினும் செய்தி(message:-) பிடிக்கவே செய்யும்.

பழமை வாதிகளுக்கு அவர் பாணியும் நடையும்
பிடிக்கும் அளவுக்கு, அவர் கருத்துக்கள் பிடிக்குமா
சந்தேகமே :-) !

இளைய தலை முறையினர் அக்கால
நடைமுறைகளை அறியலாமே
தவிர பொறுமையாய்
படிப்பார்களா என்பது.......:-)

நாளை தொடரும்,...........
அன்புடன்,
ஜெயந்தி.