From jaybee Sun Oct 3 23:15:42 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 04 Oct 1999 06:18:49 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 14097 invoked from network); 4 Oct 1999 06:18:46 -0000
Received: from smtp.mail.yahoo.com (128.11.68.32) by qg.egroups.com with SMTP; 4 Oct 1999 06:18:46 -0000
Received: from sp-69-153.tm.net.my (HELO user) (202.188.69.153) by smtp.mail.yahoo.com with SMTP; 3 Oct 1999 23:24:23 -0700
Message-Id: <3.0.3.32.19991004141701.00850100@...>
X-Sender: jaybee555@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Mon, 04 Oct 1999 14:17:01 +0700
To: "agathiyar@egroups.com"
From: jaybee
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Saint Francis of Asisi
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2421



அன்பர்களே,

"நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்,
தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான்,
தன்கடன் அடியேனையும் தாங்குதல்;
என்கடன் பணிசெய்து கிடப்பதே!"

என்று திருக்கடம்பூர் திருப்பதிகத்தில்அப்பர் பெருமானார் உறுதியாகக்
கூறுகிறார்."அவன் என்னைக் கவனித்துக்கொள்வான். ஏனெனில் அவனிடம்
அடைக்கலம் நானே. ஆகவே என்னைக் கவனித்துக் கொள்வது அவனுடைய
கடமைதான்? என்னுடைய கடமை என்னைக்கவனித்துக் கொள்வதல்ல.
அதைத்தான் அவன் செய்கிறானே? என் கடன் பணி செய்து கிடப்பது
மட்டும்தான்".
இதுதான் அவருடைய "தயாமூல தன்மம்" என்னும் அடிப்படைக்
கோட்பாட்டிற்கு செயலாக்கி(activator) ஆகஅமைந்தது.(இந்த கோட்பாடு
பிற்காலத்தில் சைவசித்தாந்த அமைப்புகள் கையோங்கிய காலத்தில் அவர்களாலேயே
மறைக்கப்பட்டுவிட்டது).
இந்த சொற்றொடரை அப்பர் பெருமான்கையாள்கிறார் என்றாலும்,
அது எந்த ஒரு சமயத்திற்கும் முழுச்சொந்தம் என்று சொல்லபடக்கூடிய
கோட்பாடு அல்ல.
உண்மையான சமயம் எதுவாகினும் அதன்அடியார்கள், திருத்
தொண்டர்களால் உலகின் பல்வேறு பாகங்களில், பல்வேறு காலங்களில்
ஒருவருக்கொருவர் தொடர்பில்லாமலேயே கடைபிடித்துப் பரப்பப்பட்டதாகும்.
அன்னை தெரசாவின் திருத்தொண்டும்,உழைப்பும், கருணையும்,
தயையும் தயாமூலதன்மத்தின் பதிப்புக்கள்தாம். தயாமூலதன்மம் ஒரு
பொதுத்துவம் கொண்ட கோட்பாடு.
அன்னை தெரசாவுக்கும் அவரைப்போன்றலட்சக்கணக்கான
கிருத்துவ சமயத்தைச்சார்ந்த திருத்தொண்டர்களுக்கும் முன்னோடியாக ஒருவர்
இருந்தார்.
அவர்தான் கிருத்துவசமயத்தில் தயாமூலதன்மத்தை கர்த்தரின்பெயரால்,
அவரின்பேரில் பரிபூரண சரணாகதியடைந்து, பக்குவப்பட்ட நிலையில் நின்று
தானும் கடைபிடித்து, அந்தவழியில் பலலட்சக்கணக்கான தொண்டர்கள்
செல்லும்வகையில் அமைப்புக்களையும்இயக்கத்தையும் தோற்றுவித்தவர்.
அவர்தான் அசிசி ஃபிரான்சிஸ் - SaintFrancis of Asisi.
Franciscan Order என்னும் தொண்டர் திருச்சபையைத்
தோற்றுவித்தவர் அவரே.
இன்று அவருடைய Feast Day.
ஆகவே அவரைப்பற்றி சில விபரங்களை தாழ்மையுடன் முன்
வைக்கிறேன்........

அன்புடன்

ஜெயபாரதி