From Asif Meeran Mon Oct 4 01:12:13 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 04 Oct 1999 08:15:19 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 24179 invoked from network); 4 Oct 1999 08:15:17 -0000
Received: from omail.emirates.net.ae (194.170.187.1) by qg.egroups.com with SMTP; 4 Oct 1999 08:15:17 -0000
Received: from pmail.emirates.net.ae by omail.emirates.net.ae (Sun Internet Mail Server sims.3.5.1999.03.02.17.58.p5) with ESMTP id <0FJ2007RZJQDUK@...> for agathiyar@egroups.com; Mon, 4 Oct 1999 12:03:49 +0400 (GST)
Received: from emirates.net.ae (cdc041.emirates.net.ae) by pmail.emirates.net.ae (Sun Internet Mail Server sims.3.5.1999.03.02.17.58.p5) with ESMTP id <0FJ20001SJQAER@...>; Mon, 04 Oct 1999 12:03:48 +0400 (GST)
Date: Mon, 04 Oct 1999 12:10:55 +0400
From: Asif Meeran
To: agathiyar@egroups.com
Cc: tamil@...
Message-id: <37F8610E.B9B0A07C@...>
Organization: Pax-Kent International
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.5 [en]C-CCK-MCD {Emirates Internet} (Win98; I)
X-Accept-Language: en
Subject: [agathiyar] Gandhi kaNakku(was Cordless phone?)
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 2423

அன்புள்ள நண்பர்களே,

"சுதந்திர போராட்ட காலத்தில் தியாகிகள் கடைகளில் தேனீர் அருந்தினால் 'காந்தி கணக்கு' என்று

கடைக்காரர் காசு வாங்க மறுத்து விடுவாராம்..இப்போது காந்தி கணக்கு என்றால் என்னவென்று
உங்களுக்கே தெரியும்" என்று சில் நாட்களுக்கு முன்பு எழுதியிருந்தேன்.
அது தொடர்பாக டாக்டர் ஜெயபாரதி அவர்கள் வழங்கியிருக்கும் விளக்கத்தை நண்பர்களாகிய
நீங்களும் படித்து சுவைக்க வேண்டுமென்பதற்காக இதோ உங்களுக்கும் அனுப்பி வைக்கிறேன்..
படித்து மகிழுங்கள்..



ஒரு சமயத்தில் காந்தியின் பல சத்தியாகிரகங்களுக்காகவும்,
வேறு பல சமுதாய நடவடிக்கைகளுக்காகவும் நிதிகள் சேர்த்தனர். இதற்கு
நிதி கொடுப்போர், தங்கள் கணக்கில் செலவெழுதிக்கொள்வார்கள்.
இது நன்கொடையாக கதர்நிதி, ஹரிஜனங்கள் நிதி, ஆசிரமங்கள் நிதி,
என்று பலவகையாக இருந்தாலும்கூட, மொத்தத்தில் காந்தியின் பெயரால்
அவருடைய இயக்கங்களுக்கு, பணிகளுக்குக் கொடுக்கப்பட்டது.
கணக்கெழுதுவோர் அந்த நன்கொடை நிதியை "காந்தி கணக்கு"
என்று குறிப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டனர்.
அவ்வாறு ஏற்பட்டது அந்தச்சொல்.

சில ஹோட்டல்களில் நீங்கள் சொன்ன வழக்கம் இருந்தது.
காந்தி குல்லாயும் கதராடையும் அணிந்திருக்கவேண்டும். கல்லாப்
பெட்டிக்குச் சென்று "மகாத்மா காந்திக்கு ஜே", "வந்தேமாதரம்",
"ஜேய்ஹிந்த்", "ஜேய்பாரத்", "பாரதமாதாவுக்கு ஜே", போன்ற
கோஷங்களைப் போடவேண்டும். அந்தக் குறிப்பிட்ட கடைகளில்
மட்டுமே காப்பி சாப்பாடு இலவசமாகக் கிடைக்கும்.
தப்பான கடையில் சொன்னால், விபரீதமாகிவிடும்.

என்னுடைய மனைவியின் தாயின் தந்தையார் திருப்புத்தூர்
பேருந்து நிலையத்தில் ஒரு ஹோட்டல் நடத்திவந்தார். அவர் ஒரு
பெரிய காங்கிரஸ் தீவிரவாதி. அவருடைய ஹோட்டலில் கல்லாப்
பெட்டியின் மீது காந்திக்குல்லாய்கள் தைத்து வைத்திருப்பார்.
அந்தக் குல்லாயை எடுத்து அணிந்துகொண்டு, மேலே குறிப்பிட்ட
கோஷங்களை உரக்கச் சொல்லவேண்டும்.
அவ்வாறு சொன்னால் உணவு இலவசம்.
அவரை ஒருமுறை அங்கிருந்த ஹெட்கான்ஸ்டேபில் அறைந்து
விட்டார்.அந்த ஏட்டின் பெயர் சின்னத்தம்பியா பிள்ளை. அவருக்கு
சில பற்கள் இல்லை.
அன்றிலிருந்து அந்த வட்டாரத்தில் நடக்கும் காங்கிரஸ் கூட்டங்கள்
தொடங்கும் போது, "மகாத்மா காந்திக்கு ஜே!" ஓட்டைப்பல் சின்னத்தம்பியா
பிள்ளை ஒழிக" என்று கோஷமிட்டு ஆரம்பிக்கலாயினர். இந்த வழக்கம் சில
காலம் தொடர்ந்து நடந்தது.

நன்றி ஜெயபாரதி அவர்களே!!

அன்புடன்,
ஆசிப் மீரான்