From jaybee Mon Oct 4 05:04:30 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 04 Oct 1999 12:07:36 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 11147 invoked from network); 4 Oct 1999 12:07:35 -0000
Received: from smtp.mail.yahoo.com (128.11.68.32) by qg.egroups.com with SMTP; 4 Oct 1999 12:07:35 -0000
Received: from sp-69-9.tm.net.my (HELO user) (202.188.69.9) by smtp.mail.yahoo.com with SMTP; 4 Oct 1999 05:13:11 -0700
Message-Id: <3.0.3.32.19991004200533.00850d80@...>
X-Sender: jaybee555@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Mon, 04 Oct 1999 20:05:33 +0700
To: "agathiyar@egroups.com"
From: jaybee
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Saint Francis of Assisi#2
Content-Type: text/enriched; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2425



திருத்தொண்டர் செயிண்ட் அஸிஸி பிரான்சிஸ்


InaiMathiTSC ஃபிரான்சிஸ்கன்திருச்சபையின்
நிறுவுனராகிய செயிண்ட் ஃபிரான்சிஸ்

கி.பி.1181இல் அம்ப்ரியா நகரில் பிறந்தார். இது அஸிஸி என்னும் நாட்டுப்பிரிவில்

உள்ளது. ஆகவேதான் இவரை "அஸி ஸி பிரான்சிஸ்" என்று அழைப்பது வழக்கமாகி

விட்டது.


பியெற்றோ பெர்னடோன், பிச்சாதம்பதியரின் பலகுழந்தையரில் இவரும்

ஒருவர். கௌரவமானதொரு பிரபுத்துவக்குடி, அவருடையது. இவர் ஒரு மாட்டுத்

தொழுவத்தில் பிறந்தார் என்று பிற்காலத்தில் ஒரு செவிவழிக்கதையும் வழங்கிற்று.

ஆனால் அது ஏசு பெருமானாரின் புனிதத்துவத்தை பிரான்சிஸ் மீதும் சாற்றுவதன்

பொருட்டு ஏற்படுத்தப்பட்டது என்றுவரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

ஞானஸ்நானத்தின்போது வைக்கப்பட்டபெயர் ஜியோவானி. அதனை

"ஃபிரான்ஸெஸ்கோ" என்று தந்தையார்மாற்றிவிட்டார். பிரான்சிஸ் பிறந்த

சமயத்தில் பிரான்ஸ்நாட்டிற்கு பியெற்றோ வாணிப நிமித்தம் சென்றிருந்தார்.

அத்துடன் பிரான்ஸ்நாட்டின்மீது அவருக்குஆழ்ந்த மதிப்பும் இருந்தது.


பிரான்சிஸின் வாழ்க்கைவரலாற்றைப்பற்றி செலானோ தாமஸ் முதல்

பலர் எழுதியுள்ளனர்.



அஸிஸியின் செயிண்ட் ஜார்ஜ் திருமடத்தின் சன்னியாசிகள் அவருக்கு

ஆரம்பப் படிப்பை போதித்தனர். படிப்பில் அவ்வளவு ஆர்வமிருந்ததாகச்சொல்லமுடியாது.

பெற்றோரால் செல்லம் கொடுக்கப்பட்டவர். தந்தையின் தொழிலில் பயிற்சிகொடுக்கப்

பட்டும், அதுவும் பிடிக்கவில்லை. உல்லாசம், கேளிக்கை போன்றவற்றில் நிறைய

ஈடுபாடு இருந்தது. நல்ல நகைச்சுவைப்பேச்சு, பாடும்திறன்; இளமை, ஆண்மை,

அழகு கலந்த வடிவம்; வீரம், பணிவு, மலர்ச்சி கலந்த பண்புகள்; அழகான உடைகள்-

அவற்றைபோட்டுக்கொண்டு மிடுக்குடன்அலங்கரமாக பகட்டைக்காட்டுவது முதலிய

பழக்கங்கள் அவரை அந்த வட்டரத்தில் உள்ள இளம் பிரபுக்களின் மத்தியில் செல்வாக்கோடு

நிலவச் செய்தது.

எந்த ஒரு ஆயுதப்போர்முறையானாலும்பிரான்சிஸே முன்னணியில் ஈடற்றவராக

விளங்கினார். விருந்துகள், நாட்டியநாடகங்கள், கூத்துகள் போன்றவற்றில் அவருடைய

நிகரற்ற ரசிகத்தன்மை வெளிப்பட்டுக்கொண்டேயிருந்தது.

அந்த மேல்வட்டவாழ்க்கையின் இன்பநுகர்ச்சிக்கு நடுவிலும் ஏழைகளைப் பற்றிய

பச்சாதாபம் எப்போதுமே அவருடைய மனதில் இருந்தேவந்தது. பெரும் ஊதாரியாக

இருந்தாலும்கூட, செலவின் ஒரு பெரும்பகுதி பகுதி ஏழைகளுக்குச்சென்றுகொண்டிருந்தது.




தன்னுடைய இருபதாம் வயதினில் பெருஜியர்களுடன் ஏற்பட்ட போரில்

அஸிஸியர்கள் தோற்றனர். அப்போதுபிரான்சிஸ் போர்க் கைதியாக்கப்பட்டார்.

ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருந்தார். அப்போது அவருடைய உடல்நலம் குன்றியது.

அந்தச் சமயத்தில், அவர் அதுவரையில் வாழ்ந்து வந்திருந்த வாழ்க்கையின் உண்மையான

வெறுமை மனதைத் தாக்கியது. அப்போதுதான் அதைப் பற்றியே அவர் சிந்திக்கலானார்.

இந்த வாழ்க்கையும் நிரந்தரமானது அல்லவே? மூப்பு, நோய், இறுதியில் மரணத்துக்கு

ஆளாகும் உடலல்லவா இது? அப்படியானால்"நிரந்தரம், நித்தியத்துவம்" என்பதுதான் எது?

விடுதலையாகி வந்தபின்னர் நீடித்தநிரந்தமான புகழ் பெறவேண்டி போர்வீரரானார்.

அவருடைய பிரபுத்துவப் பின்னணி, போர்க்கலைத் திறமை ஆகியவை அவருக்கு ஒரு

Knight நைட் தரத்தைத் தந்தது. புனித ரோமப் பேரரசருக்கு எதிராக நடந்த போரூக்கு

இத்தாலியின் நியப்பாலித்திய கூட்டணியின் போர்வீரராகச் சென்றார்.

போருக்குப் புறப்படும் முதல்நாளிரவு, ஒரு விசித்திரத் தோற்றம் அவருக்குத்

தென்பட்டது. ஒரு பெரிய அரங்கத்தில்ஏராளமான ஆயுதக்கலங்கள் மாட்டியிருப்பதையும்,

அவை அனைத்தின்மீதும் புனிதச்சிலுவைக்குறியிடப்பட்டிருப்பதையும் கண்டார்.

"இவை அனைத்துமே உனக்கும் உன்னுடையவீரர்களுக்கும் உரித்தானவை",

என்ற வானொலி கேட்டது.

பிரான்சிஸுக்கு நிலைகொள்ளாதமகிழ்ச்சி.

"எனக்குத் தெரியும். நான் ஒரு பெரியஅரசனாகப் போகிறேன்".

இவ்வாறு முழங்கியவாறு அப்புலியாவைநோக்கி போர்முகமாகப் புறப்பட்டுச்

சென்றார்.


அடுத்து.................


அன்புடன்


ஜெயபாரதி


_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com