From Kumar Mallikarjunan Mon Oct 4 13:40:28 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 04 Oct 1999 20:43:35 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 21005 invoked from network); 4 Oct 1999 20:43:32 -0000
Received: from quackerjack.cc.vt.edu (198.82.160.250) by qg.egroups.com with SMTP; 4 Oct 1999 20:43:32 -0000
Received: from mail.vt.edu (gkar.cc.vt.edu [128.173.16.40]) by quackerjack.cc.vt.edu (8.8.8/8.8.8) with ESMTP id QAA08752 for ; Mon, 4 Oct 1999 16:43:31 -0400 (EDT)
Received: from kumar ([128.173.217.17]) by gkar.cc.vt.edu (Sun Internet Mail Server sims.3.5.1999.05.24.18.28.p7) with ESMTP id <0FJ3007X1IWHVF@...> for agathiyar@egroups.com; Mon, 4 Oct 1999 16:43:29 -0400 (EDT)
Date: Mon, 04 Oct 1999 16:47:12 -0400
From: Kumar Mallikarjunan
X-Sender: kumar@...
To: agathiyar@egroups.com
Message-id: <4.2.0.58.19991004162802.00a30f00@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 4.2.0.58
Subject: [agathiyar] Some more kALamEkam
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2427

அகத்தியர்காள்:

நண்பர் பழனியும் பெரியவர் ஜெயபாரதியும் சொல்லிய கவி காளமேகம் பற்றி
இன்னும் சில கொசுறு. என் உறவினர் இதைஅனுபியிருந்தார் எனக்கு. உங்களுடன்
பகிர்ந்து கொள்ள அவா.

கவி காளமேகம் தண்டிகை பரிசு பெற்றஅறுபத்து நான்கு கவிகளுடன் போட்டியிட
யம கண்டத்திற்கு சம்மதித்ததை நண்பர்பழனி அழகாகவே எடுத்துரைத்திருக்கிறார்.

அந்த போட்டியில் காளமேகம் பாடியதில் ஓரிரு பாடல்கள் பற்றியது இம்மடல்.
அவைப் புலவர்கள் கேட்ட கேள்விகளுக்கு கவி புனைய வேண்டும். இப்படி இருக்கையில்
காளமேகத்தை ஒருவர் மும்மூர்த்திகளின்பெயர், தின்னும் கறி, உண்ணும் உணவு,
ஆயுதம், அணிகலன்கள், வாகனம், வசிக்கும்இடம் ஆகியவற்றை ஒரே வெண்பாவில்
பாடக் கேட்க காளமேகம் பின்வருமாறுபாடினார்.

சிறுவன் அனைபயறு செந்நெற் கடுகு
மறிதிகிறி தண்டு மணி நூல் - பொறியரவம்
வெள்ளேறு புள்ளன்னம் வேதனரன் மாலுக்கு
கற்றாழம் பூவே கறி.

இதன் பொருள்: பிரம்மா, சிவன், திருமால் இவர்களுக்கு முறையே:
பயறு, பிள்ளை, வெண்ணை - கறி
செந்நெல், விடம், பூமி - உணவு
மான், தண்டம், சக்கரம் - ஆயுதம்
கௌஸ்துப மணி, பாம்பு, உபவீதம் - அணிகள்
அன்னம், காளை, கருடன் - வாகனம்
தாமரை, கைலாயம், பாற்கடல் - வசிக்கும்இடம் ஆகும்.

<இதில் பிரம்மனுக்குச் சொன்ன பயறு, செந்நெல், மணி அவை பற்றி மேலும்
தெரிந்து கொள்ள ஆவல். பிள்ளைக் கறிகேட்டவர் சிவன். அதென்ன வெண்ணைக்
கறி? விடம் உண்ட கண்டன் சிவன். பூமியை உணவாக இதில் அவர் என்ன
சொல்ல வருகின்றார்? - குமார்>

மற்றொருவர் 'டு' என்னும் எழுத்து ஐந்து முறைதொடர்ந்து வரும்படி பாடக்கேட்க:

ஓகாமா வீதோ டுடுடுடுடு நேரொக்க
நாகார் குடந்தை நகர்கிறைவர் - வாகாய்
எடுப்பர் நடம்புரிவர் ஏறுவரர் பர்க்குக்
கொடுப்பர் அணிவர் குழைக்கு.

இதன் பொருள்: இளமரங்கள் அடர்ந்த சோலை சூழ் குடந்தை இறைவன் கும்பேசர் (பேஜர்
இல்லை :)), ஓ, கா, மா, வீ, தோ என்றஎழுத்துக்களோடு 'டு' என்னும் எழுத்தை
தனித்தனியே பொருத்தினால் வரும் ஓடு,காடு, மாடு, வீடு, தோடு என்ற ஐந்தில்
ஒன்றை அழகாக கையில் எடுப்பார், ஒன்றில் நடனம் செய்வர், ஒன்றில் மேல் ஏறுவார்,
ஒன்றைத் தன் அன்பர்க்கு கொடுப்பார், ஒன்றைத் தன் காதில் அணிவார்.

இப்ப கும்பகோணத்தின் கும்பேசர் சோலை சூழ இருக்கிறாரா என்று அங்கு சமீபத்தில்
சென்றவர்களைத்தான் கேட்க வேண்டும்.

குமார் மல்லிகார்ஜுனன்.