From Sadayan Shaboo Mon Oct 4 15:50:22 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
X-eGroups-Approved-By: agathiyar@... via web
Received: (listserv 1.259); by n1; 04 Oct 1999 22:53:28 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 29963 invoked from network); 4 Oct 1999 11:37:04 -0000
Received: from web1403.mail.yahoo.com (128.11.23.167) by qg.egroups.com with SMTP; 4 Oct 1999 11:37:04 -0000
Message-ID: <19991004114049.24781.rocketmail@...>
Received: from [194.170.2.29] by web1403.mail.yahoo.com; Mon, 04 Oct 1999 04:40:49 PDT
Date: Mon, 4 Oct 1999 04:40:49 -0700 (PDT)
From: Sadayan Shaboo
To: Vassan , agathiyar@egroups.com
Cc: tamil@...
MIME-Version: 1.0
Subject: [agathiyar] Re: [tamil] sila vattArA vazakku & peyarkaL[*was* "words formed from "nedu"]
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
Content-Transfer-Encoding: 7bit
X-Yahoo-Message-Num: 2428



--- Vassan wrote:
>
>
> At 07:11 10/02/1999 PDT, Nagamanickam Ganesan wrote:
> >

அன்புள்ள வாசன்/இணைய நண்பர்களுக்கு

>கீழ்தஞ்சை பகுதிகளில்[தற்போதைய நாகை,திருவாரூர் மாவட்டங்கள் &
காரைக்கால்]
>காளைக்கன்றை 'கிடா' என்றும்,பெண்ணினமாயின் 'கிடேரி' என்றும்
அழைப்பார்கள் :)
>கிடா மார்க் சுருட்டு இப்பகுதி பெரிசுகளிடையே பிரபலம்.

எங்கள் பக்கத்து வட்டார வழக்கை படித்ததும் கோரையாற்றங்கரையில் தொபுகடிர்
என குதித்து குளித்து வந்தது போல உணர்ந்தேன்.வீட்டிலே பெண் குழந்தை
பிறந்தால் விசனப்படும் பெற்றோர்கள், கொட்டிலிலே கட்டியிருக்கும் பசு
கிடேரியை ஈன்றால் மகிழ்ச்யால் துள்ளி குதிப்பார்கள். காரணம் வீட்டிற்கு
லட்சுமி வந்து விட்டாளாம். இதில் மத வேறுபாடு கிடையாது. (தஞ்சை
முஸ்லிம் மிராசுதார் குடும்பத்தின் தலைவன் பெரும்பாலும் சிஙகையிலோ அல்லது
மலேசியாவிலோ பொருளீட்டுக் கொண்டிருப்பான். வீட்டு நிர்வாகம் அனைத்தும்
பெண்களே) முஸ்லிம் மிராசுதார் பெண்கள் பசு வை புனிதமாக கருதுவார்கள்.
சிறு வயதில் ஒரு முறை நான் சினைப்பசவை காலால் எட்டி உதைத்தேன்
என்பதற்காக உதைத்த காலில் பிரம்படி வாங்கியுள்ளேன். இன்று கூட தஞ்சை
முஸ்லிம் மிராசுதார் பெண்கள் மாட்டிறைச்சியை தொட மாட்டார்கள்.

ஈப்போ மச்சான் ஆ(ப்)ப மச்சம் என மலாய் மொழி பேசித்திரிபவர்கள் கூட
மாட்டிறைச்சிக்கு ஆசைப்பட்டால், தோப்பிற்கு போய் சமைத்து சாப்பிட்டு
விட்டுத்தான் வர வேண்டும். தஞ்சை முஸ்லிம் மிராசுதார் குடும்பத்தில் தமிழர்
திருநாளான பொங்கலை எங்கள் மத கோட்பாடுகளை உள் வாங்கி
வித்தியாசமாக கொண்டாடுவார்கள். தை மாதம் களத்திலிருந்து முதல் முதலாக
அறுத்து வரும் நெல் முட்டைகளோடு ஒரு கட்டு நெல்மணிகள் நிறைந்த கதிர்களும்
வரும். அக்கதிரகளை கட்டாக கட்டி வீட்டு முற்றத்தில் உயரமான இடத்தில்
தொங்கவிடுவார்கள். ஏனெனில் அது அங்கு வாசம் செய்யும் சிட்டுக்
குருவிகளுக்காம். அடுத்து வந்த நெல்லை அவித்தோ அவிக்காமலோ ஒரு
குறிப்பிட்ட அளவு 6 மரக்கால் அல்லது 12 மரக்காலை சோறாக்கி
அச்சோற்றை 3 சரிசமமாக பங்கிட்டு ஒரு பங்கை வாயிலிலே வந்து யாசகம்
கேட்கும் ஏழைகளுக்கும்/பள்ளி வாசலில் தங்கியிருக்கும் வழிப்போக்கர்களுக்கும்
தானமளித்து விட்டு இரண்டாவது பங்கை வறுமையின் காரணமாக வீட்டை விட்டு
வெளியே வராமல், அடுப்பு புகையாமல் வயிறு மட்டும் புகைந்து கொண்டிருக்கும்
தாயாதிகளுக்கு ( உறவினர்களுக்கு ) அளித்து விடுவார்கள் கடைசி பங்கு
அடுத்த வீடு, எதிர் வீடு, உறவினர் என அனைவரையும் அழைத்து ஆடு அறுத்து (
கவிச்சி இல்லாமல் விருந்தா ) விருந்து சாப்பிட்டு மகிழ்வார்கள். அடுத்து
மாட்டுப் பொங்கல் அன்று முஸ்லிம் மிராசுதார் பெண்கள் பயணம் செய்யும்
வில்வண்டிகளுக்கு விடுமுறை. மாட்டை வண்டியில் பூட்ட மாட்டார்கள். பண்ணையாள்
முதல் நாளிரவே கால்நடைகளை ஓட்டிக் கொண்டு போய் பொங்கல் விழா
கொண்டாடுவான். கடந்த 15 ஆண்டுகள் வரை இம்முறைதான் நடந்து கொண்டிருந்தது.


இன்று இல்லை காரணம், விசுவாசமாயிருந்த பண்ணையாள் கட்சிக் கொடி
பிடித்ததும், குத்தகைக் காரர்கள் ஒழுங்காக அளக்காததாலும், உழைப்பின் பலன்
வெளிநாட்டில் வசதியாக இருந்ததாலும், காவிரி கையை விரித்து
விட்டதாலும், கடையிலே அரிசி வாங்கி பொங்குவதை கேவலமாக கருதிய
மிராசுகள் தற்போது காசு கொடுத்து ( இரவு 10 மணிக்கு மேல் அரிசி
மண்டியிலிருந்து மாட்டு வண்டியில் அரிசி முட்டை அக்கம் பக்கம் தெரியாமல்
வந்திறங்கும் ) அரிசி வாங்கி உலை பொங்க வேண்டிய நிலை.

>சில கீழ்தஞ்சை மாவட்ட குடும்பங்களில் அண்ணி என்பவர் "அருமையாள்" அல்லது
"வரிசையாள்"
>என அழைக்கப்படுகிறார்.அண்ணியானவர் குடும்பத்தை சேர்ந்த
உறவினராயின்[cousin]
>"மச்சி" என்றழைக்கப்படுவார்.

குடும்பத்தின் மருமகளாக வருபவளும் மச்சிதான் தாய் மாமன் மகள், அத்தை மகள்
அனைவரும் மச்சிகள்தான், தாய்மாமன் மகளை மச்சி என அழைப்பதாலும்,
தகப்பன் கூட பிறந்தவள் மகளை மச்சி என அழைப்பதாலும் உறவில் குழப்பம்
வராமலிருக்க அத்தையை குப்பி ( திரு. இராம.கி அவர்களே குப்பி தமிழ்ச்
சொல்லா ) என சொல்வோம், ஆனால் இருவரையும் கூப்பிடுவது மாமி என்றே.
பிராமண சமுதாயத்தில் வீட்டு மருமகள்களை அறிமுகப்படுத்தும் போது மாட்டுப்
பெண் என்பார்கள், ஆனால் முஸ்லிம் குடும்பங்களில் ( நாகூர், நாகை,
காரைக்கால் பகுதியில் ) மருமகளை சேர்த்தமணை ( இரண்டு சுழி ன வா
அல்லது 3 சுழி ண வா தெரியவில்லை ) என்பார்கள் . அதாவது ஒரு
மணையிலிருந்து அடுத்த மணைக்கு திருமணம் முடித்து சேர்த்த மணை என்ற
பொருளில் )

அன்புடன்
ஷாபு


=====

__________________________________________________
Do You Yahoo!?
Bid and sell for free at http://auctions.yahoo.com