From Mon Oct 4 16:50:05 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 04 Oct 1999 23:53:11 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 8219 invoked from network); 4 Oct 1999 23:53:08 -0000
Received: from iron.singnet.com.sg (165.21.7.29) by qg.egroups.com with SMTP; 4 Oct 1999 23:53:08 -0000
Received: from sanjay01 (qtns03308.singnet.com.sg [165.21.168.18]) by iron.singnet.com.sg (8.9.1a/8.9.1) with SMTP id HAA09336 for ; Tue, 5 Oct 1999 07:53:06 +0800 (SGT)
Message-ID: <002e01bf0ec0$1a744380$12a815a5@sanjay01>
From: "sankar"
To:
Date: Tue, 5 Oct 1999 07:28:01 +0800
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Kalki----3
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2431

அன்புள்ள இணைய அகஸ்தியர்களுக்கு,
வணக்கங்கள்.

கல்கியவர்கள் காலத்தில் கட்டுரை மற்றும்
கதைகள் தமிழில் குறைந்திருந்ததாலும்
ஆங்கிலேயரது ஆட்சியின் ஆதிக்கத்தாலும்
மக்களுக்கு ஆங்கிலத்தில் தான் படிக்க நிறைய
கட்டுரைகள், கதைகள் கிடைத்தன போலும்.

ஆங்கில வாக்கிய அமைப்புக்களின்
பாதிப்புக்களை என்னால் படிக்கும் போது
கல்கியவர்களின் கட்டுரைகளில் உணர முடிந்தது.
இவற்றைப்படிக்கும் போது இழையோடும்
நகைச்சுவையும் சில இடங்களில் ஆங்கில
எழுத்துக்களைஎனக்கு நினைவூட்டின.

'ஏட்டிக்குப்போட்டி'யில் எடுத்துக்கொண்டுள்ள கருக்கள்
அக்காலத்தில் நிலவிய சமுதாய நிகழ்வுகளே.
கல்கி இவற்றில் சகுனம் பார்த்தல், ஓசியிலேயே
பத்திரிக்கை படித்தல், வைத்தியமுறைகளின்
வேடிக்கைகள், கோர்ட் (சட்டம்) ,தேர்தல்:-),
ஆசிரியர் தொழில்,புனைப்பெயர், ராகு காலம் பற்றி,
பாரதி:-),குழந்தைகளின் பொய் பேசாமை,
நாடகத்துறை,பொறாமை(ப்படு:-)),மதிப்புரை
(க்கு மதிப்பரையாம்:-)), போன்றவற்றை
கையாண்டுள்ளார்.

(இவை கருக்களேயன்றி தலைப்புக்களல்ல:-) !)

இவற்றில் சில கட்டுரைகளில், சில இடங்களில்
ஏதோ சிறு கதைகளாய் எழுத எண்ணி
படைப்பாளியின் நோக்கத்திற்கு எதிராய்
கட்டுரை வடிவம் பெற்று விட்டதாய் எண்ணத்
தோன்றுகிறது. இது என் சொந்தக்கருத்து.
ஒரு வேளை கட்டுரையை சுவாரஸ்யமாக்கும்
யுக்தியாய் கல்கியவர்கள் அப்படியெழுதியுமிருக்கலாம்:-)

நகைச்சுவையைக்கலந்து, எளிய நடையில்
வாசகரைக்கவரும் விதத்தில் கல்கியவர்களுக்கு
முன்னால் யாரும் எழுதியிருப்பார்களா என்று
தெரியவில்லை. தெரிந்தவர்கள் அறியத்தரலாம்.

எடுத்துக்கொண்ட கருவிலிருந்து விலகாமல்
மிகக்கவனமாய் சம்பவங்களைக் கோர்க்கிறார்.

'ஏட்டிக்குப்போட்டி'யில் முதல் கட்டுரையே
'ஏட்டிக்குப்போட்டி' என்பது தான்.

அதைப்பற்றி முதல் அஞ்சலுடன் நாளை,....
அன்புடன்,
ஜெயந்தி