From Mon Oct 4 17:34:43 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 05 Oct 1999 00:37:49 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 1620 invoked from network); 5 Oct 1999 00:37:22 -0000
Received: from iron.singnet.com.sg (165.21.7.29) by qg.egroups.com with SMTP; 5 Oct 1999 00:37:22 -0000
Received: from sanjay01 (qtns03308.singnet.com.sg [165.21.168.18]) by iron.singnet.com.sg (8.9.1a/8.9.1) with SMTP id IAA15684 for ; Tue, 5 Oct 1999 08:37:19 +0800 (SGT)
Message-ID: <005a01bf0ec6$479c43c0$12a815a5@sanjay01>
From: "sankar"
To:
Date: Tue, 5 Oct 1999 08:12:14 +0800
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Re: KaaykaRi#2-was Tamil for cordless phone
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2434

அகஸ்தியர்களுக்கும் டாக்டர் ஜேபி அவர்களுக்கும்,
அன்பான வணக்கங்கள்.

'மெனு' கொடுப்பதையே பாடலாய்
பாடியவரும் இருந்திருக்கிறார்
என்று அறிந்து மகிழ்ச்சி.

என் தோழி ஒருவரின் துணைவர்,
பாவம், காய்கறி வாங்கி மனைவிக்கு
உதவ எண்ணி சில சமயம் சந்தைக்குச்
செல்வாராம். இவர் முகத்தைப்
பார்த்ததுமே( அப்பாவிக்களை !:-))
சீனக் கடைக்காரன், முத்தல்,
பாதி அழுகல் இன்னும் எதெது
விற்கவில்லையோ அத்தனையையும்
பேசிக்கொண்டே பையில் போட்டு
விலையையும் 'வாயில் வந்ததை'
சொல்லி வீட்டிற்கு அனுப்பிவிடுவாராம்.
வீட்டில் வந்ததும் மனைவியின்
பாட்டை கேட்டுகொள்வாராம்.
இத்துடன் போயிற்றா என்றால்,
'என்ன சமைக்க', என்று தோழி கேட்டால்,
துளியும் தனக்குச் சம்பத்தமே
இல்லாதது போல 'ம்,...ம்..உனக்குத்தெரியாதா?
ஏதாவது சமைச்சுடேன்',என்று ஏதோ
சாப்பாடு வயிறு மட்டும் சம்பந்தப்பட்டது
போல கூறுவாராம்.தோழி ஒரு மெனு
சொன்னவுடன்,தப்பித்தால் சரியென்று, அதையே
தான் நானும் சொல்ல நினைச்சேன், நீயே சொல்லிட்ட,
என்று வலுவில் வர வழைத்துக்கொண்ட
புன்னகையுடன்,...சட்டென்று செய்தித்தாளில்
முகத்தைப்புதைத்துக்கொண்டு விடுவாராம்.
இதையெல்லாம் பொறுத்துக்கொள்ளலாம்,
விழுந்து விழுந்து, படு கவனமாய்
சமைத்துப் பரிமாரி கணவருடன்,சேர்ந்து சாப்பிட்டதும்,
கணவரின்(சாப்பாட்டுப்பிரியர்/ரசிகர்!:-)) நண்பர்
வீட்டுக்கு போனதும்,' இன்னிக்கி என்னடா
சாப்பாடு, உங்க வீட்டுல,.....' என்று கேட்டதும்,
தோழியின் கணவர் ஏதோ தான்
சாப்பிடாது பட்டினி கிடந்தது போன்ற ஒரு பாவனையுடன்,
'சவிதா, இன்னிக்கி நீ என்ன சமைச்ச?'
என்று கேட்கும் போது தான் தோழியின் கடுப்பு
உச்சத்தைத் தொடுமாம். அவருடைய கணவருக்கு
தன் தொழில் (சட்டம்:-))தவிர ஒன்றும்
தெரியாது.

சாப்பாட்டு விஷயத்தில் இப்படியும் சிலர் இருக்கிறார்கள் :-)

அன்புடன்,
ஜெயந்தி.
-----Original Message-----
>அன்பர்களே,
>
>At 05:26 PM 10/2/99 +0700, JayBee wrote:
>>
>> காய்கறி என்றவுடன் அது சம்பந்தமான ஒரு தனிப்பாடல்
>> நினைவுக்கு வந்தது. அரைகுறையாக ஞாபகந்தான்.
>
> காய்கறி வாங்குவதில் பலருக்கு பாண்டித்யம் இல்லாது
> இருக்கலாம். ஆனால் சம்பிரமமாகச் சாப்பிடுவதும் ஒரு கலைதான்.
> அதைவிட மெனு ஆர்டர் பண்ணுவது.
> சைவமடங்களில் இருந்த சந்நிதானங்கள், தம்பிரான்கள்
> ஆகியோரைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க பலருக்கு வாய்ப்பில்லை.
> அப்படியே ஏதேனும் தெரிந்திருந்தாலும்கூட அவர்கள் ஏதோ ஒரு வகை
> ஸ்டீரியோ டைப் ஆசாமிகளாகத் தோன்றக்கூடும்.
> ஆனால் அவர்களில் சிவஞானமுனிவர் சற்று வித்தியாசமான
> ஆளாகத் தோன்றுகிறார்.
> அவர் ஒரு மடத்தில் அப்ரெண்ட்டிஸ் தம்பிரானாக இருந்த
> காலத்திலேயே, ஒரு பந்தியில் பரிமாறப்பட்ட சாப்பாட்டைப் பார்த்து
> "கொங்கன் வந்து பொங்கினான்" என்ற பாடலைப் பாடியவர்.
> இவரே ஒரு பண்டாரசந்நிதானமாக விளங்கிய காலத்தில்,
> அவருடைய தவிசிப் பிள்ளை(சமையற்காரர்)யிடம் ஒரு நாள் காலை
> சமைக்கவேண்டிய மெனுவை பாடலாகவே தொடுத்துக் கொடுத்தி
> ருக்கிறார்.
>
> "சற்றே துவையல் அறை; தம்பிஒரு பச்சடிவை,
> வற்றல்ஏ தேனும் வறுத்துவை - குற்றம்இலை
> காயமிட்டுக் கீரைகடை கம்மென வேமிளகுக்
> காயரைத்து வைப்பாய் கறி."
>
> மிளகுக்காய் என்பது மிளகாயின் பழையபெயர். மிளகுக்கு
> பதிலாக நம் சமையலில் இடம் பெற்றது; போர்த்துகீசியரின் உபயம்.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
>>
>> "வெள்ளரிக்காயா விரும்பும் அவரைக்காயா,
>> உள்ளமிளகாயா, ஒரு பேச்சுரைக்காயா"
>>
>> என்று வரும். மீதி இரண்டடிகள் ஞாபகமில்லை.
>> இந்தப் பாடலை அடியொற்றியே கண்ணதாசன், "பலே பாண்டியா"
>> படத்தில்,
>>
>> "அத்திக்காய் காய் காய், ஆலங்காய் வெண்ணிலவே,
>> இத்திக்காய் காயாதே, என்னைப்போல் பெண்ணல்லவோ!"
>>
>> என்ற பாடலை எழுதினாராம்.
>> அந்த மூலப்பாடலின் முழுவடிவம் யாருக்காவது நினைவிருக்கிறதா?
>>
>> அன்புடன்
>>
>> ஜெயபாரதி
>>
>>
>>> அப்படிக்கேளுங்க, சொல்றேன்.
>>> சந்திரா சேகரிக்கும் folk-lore செவிவழிமரபுக்கதைகள்
>>> ஆவணத்திற்கும் ஆகுமே.
>>>
>>> ஒரு வைத்தியரின் மனைவிக்கு வாரச்சந்தையன்று சந்தைக்குப்
>>> போகமுடியவில்லை. ஆகவே வைத்தியரையே போய் காய்கறிகள்
>>> வாங்கிவருமாறு அனுப்பிவைத்தாள்.
>>> சந்தைக்கு வைத்தியர் சென்றார்.
>>> பார்த்தால், எங்கும் கறிகாய்கள் ஆங்காங்கு குவிந்து கிடந்தன.
>>> அப்படியே வட்டமிட்டவாறு நோட்டமிட்டார்.
>>> உருளைக்கிழங்கு.....
>>> ஊஹூம் வாய்வு. ஆகாது.
>>> பறங்கிக்காய்?
>>> வாதமாச்சே! கூடாது.
>>> அது என்ன அங்கே கிடப்பது?
>>> சே சே! பயிற்றங்காய். பித்தத்தைக் கிளப்புமே!
>>> முட்டைக்கோசு....
>>> ஏப்பமாகப் பரியும். வேண்டாம்.
>>>
>>> இப்படியே ஒரு சுற்றுசுற்றிவந்தார். நெடுநேரமாகியும் ஒன்றும்
>>> தேறவில்லை.பதார்த்தகுண சிந்தாமணியில் சொல்லப்பட்ட முப்பத்திரண்டு
>>> வகையான உணவுப்பதார்த்தக் குற்றங்களை நீக்கி, எதையும் அவரால்
>>> வாங்கமுடியவில்லை.அப்படியே பொடிநடையாக வீடு வந்து சேர்ந்து,
>>> வெறும் பையை மனைவியிடம் கொடுத்தார்.
>>> அன்றும் அடுத்த சில நாட்களுக்கும், வைத்தியருக்கு ஆகாரம்
>>> வெந்தயக்குழம்பு, சுண்டைவற்றல் குழம்பு. சுட்ட அப்பளம், வாட்டிய
>>> கருவாடு....இப்படியாக நடந்தது.
>>>
>>> (இந்த மாதிரி கதைகளை நான் சொல்லும்போதெல்லாம்
>>> உங்கள் தந்தையார் அவருக்கே உரித்தான ஒரு முறையில்
>>> சிரிப்பாரே! இப்போதும் அதே சிரிப்பு உண்டுமா?)
>>>
>>> அன்புடன்
>>>
>>> ஜெயபாரதி
>>>
>>>===========================================
>>
>
>------------------------------------------------------------------------
>MyPoints-Free Rewards When You're Online.
>Start with up to 150 Points for joining!
>http://clickhere.egroups.com/click/805
>
>
>eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
>http://www.egroups.com - Simplifying group communications
>
>
>