From krishnan Mon Oct 4 18:25:12 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 05 Oct 1999 01:28:15 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 2615 invoked from network); 5 Oct 1999 01:28:08 -0000
Received: from snoopy.pacific.net.sg (203.120.90.116) by qh.egroups.com with SMTP; 5 Oct 1999 01:28:08 -0000
Received: from pop1.pacific.net.sg (pop1.pacific.net.sg [203.120.90.85]) by snoopy.pacific.net.sg with ESMTP id JAA28401 for ; Tue, 5 Oct 1999 09:28:05 +0800 (SGT)
Received: from default (ppp44.dyn79.pacific.net.sg [210.24.79.44]) by pop1.pacific.net.sg with SMTP id JAA06825 for ; Tue, 5 Oct 1999 09:26:43 +0800 (SGT)
Message-Id: <3.0.6.32.19991005093319.007b12d0@...>
X-Sender: kisna@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Tue, 05 Oct 1999 09:33:19 +0800
To: agathiyar@egroups.com
From: krishnan
In-Reply-To: <003201bf0ec0$c1206a60$12a815a5@sanjay01>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: vaLLalaar Birthday
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2435


At 07:32 AM 10/5/99 +0800, you wrote:
>அன்புள்ள அகஸ்தியர்களுக்கும்
>திரு கிருஷ்ணன் அவர்களுக்கும்
>வணக்கம்.
>
>இன்று வள்ளலார் பிறந்த தினமென்றுஅறிகிறேன்.
>இந்த புனித நாளில் வள்ளலார் பற்றிஎழுதினால்
>இணையத்தினருடன், (நானும் தான்:-))
> தெரிந்துகொள்ளலாம்.
>
>நன்றி,
>அன்புடன்,
>ஜெயந்தி.

வள்ளலான் சன்மார்க்கம் பகுதி 1

திருவள்ளுவர், திருமூலர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், பட்டினத்தார்,
தாயுமானவர் என்று வாழையடி வாழையடியாக வரும் திருகூட்ட மரபில்,சென்ற
நுற்றாண்டில், தமிழ் நாட்டில் வந்து உதித்தவர், திருவருட் பிரகாச வள்ளலார்
இராமலிங்க அடிகளார்.
தமிழ் நாட்டில் தென்னார்க்காடு மாவட்டத்தில் சிதம்பரத்திற்க்கு வட மேற்கே
சுமார் 16 கிலோ மீட்டர் துரத்தில் உள்ள மருதூர் என்ற கிராமத்தில்
1823 ம் ஆண்டில் அக்டோபர் திங்கள் ஐந்தாம் நாள் ஞாயிற்றுகிழமை இராமலிங்க
அடிகள் அவதாத்தார்.
தந்தையார் இராமையா பிள்ளை, தாயார் சின்னம்மை. இவர்களுக்கு அருட்
பிரகாச வள்ளலார் ஐந்தாவது பிள்ளை.
இராமலிங்கம் தன் சிறு வயதில் தன் தமையன் சபாபதியிடம் ஆரம்ப கல்வி
கற்றார். உலகியல் கல்வியில் வள்ளலாருக்கு நாட்டம் இல்லை. இறைவனைப்பற்றி
பாடுவதிலேயே ஈடுபட்டார். கற்க வேண்டுயவற்றை இறைவனிடமே கற்றார்.
ஒன்பதாவது வயதில் திருத்தகை முருகப்பெருமானால் ஆட்கொள்ளப்பட்டார்.

வாலிப வயதில் இராமலிங்க அடிகளுக்குத் திருமணம் நடந்தது.
திருமணத்துக்குப் பின்னரும் அடிகள் இல்லறத்தில் ஈடுபடாது இறைவன்
நெறியிலேயே ஈடுபட்டுவந்தார்.
இந்தக் காலத்தில் இராமலிங்க அடிகளின் புகழ் பரவத் தொடங்கியது.
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை 1865 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார்.
1867 ஆம் ஆண்டில் சமரச சுத்த சன்மார்க்கசத்திய தருமச்சாலையைத் தொடங்கினார்
1872 ஆம் ஆண்டில் சமரச சுத்த சன்மார்க்கசத்திய ஞான சபையை நிறுவினார்.
1870 ஆம் ஆண்டு முதல் அடிகளார் மேட்டுக்குப்பம் என்ற சிறு கிராமத்தில் இருக்கும்
சித்திவளாகத் திருமாளிகை இன்னும்சிறுகுடிலில் தங்கி வரலானார்.
இங்கு அவர்இதுவரை எந்த ஞானிகளும்பெற்றிராத ஞான்யோக அனுபங்களை பெற்று
மரணமில்லா பெரு வாழ்வை அடைந்தார்
இந்த மூன்று சன்மார்க்க நிறுவனங்களையும் சித்திவளாகத்தையும் இன்று
" திருவருட் பிரகாச வள்ளலார் தெய்வநிலையங்கள் " என்ற பெயால் இந்து சமய
பாதுகாப்பு துறையினர் நிறுவகித்துவருகிறார்கள்.

இந்தக் காலத்தில் இராமலிங்க அடிகளின் புகழ் பரவத் தொடங்கிவிட்டது.
அதனால் அவரைச் சுற்றி எப்போதும்பெருங்கூட்டம் இருந்து வந்தது.
சென்னை வாழ்க்கை தமது ஞான வாழ்க்கைக்கு ஒத்துவாரது என்பதை
கண்ட அடிகள் சிதம்பரத்திற்குச் சென்றார். சிதம்பரத்திற்கு வடக்கே உள்ள கருங்
குழி என்ற ஊல் தங்கினார். தினந்தோறும் சிதம்பரத்திற்க்கு சென்று இறைவனை
வழிப்பட்டார். இந்த நாட்களில் அவாடம் சமரச சுத்த சன்மார்க்க கொள்கை
வலுப்பெற தொடங்கியது. தெய்வம் ஒன்றே என்னும் கொள்கையை வற்புறுத்தி
வந்தார்

"தெய்வங்கள் பலபல சிந்தை செய்வரும்
சேர்கதி பல பல செப்புகின்றோரும்
பொய் வந்தகலை பல புகன்றிடுவரும்
பொய்ச் சமயாதியை மெச்சுகின்றாரும்
மெய்வந்த திருஅருள் விளக்கம் ஒன்றில்லார் "

என்று இறைவன் ஒருவனே என்பதை வற்புறுத்திப் பாடினார்.சாதி வேறுபடும்
சமுதாயத்திலே சமரச சன்மார்க்க வாழ்வைக் கடைப்பிடிக்க முடியாமல் தடைகளாக
கண்டார்.அந்த தடைகளை எல்லாம் நீக்குவதற்க்கு அரும்பாடுப்பட்டார்.
" சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
சகதியிலே அபிமானித் தலைகின்றஉலகீர்!
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் ஆழகலவே !

" பொறித்த மரம் சமயமெலாம்
பொய் பொய்யே
அவற்றில் புகுதாதீர்..." என்று அறை கூவினார்.

புலால் மறுத்தலை வலியுறுத்தினார். எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணி
அன்பு செய்யவேண்டும். இப்படிச் செய்வோர்உள்ளத்திலேதான் இறைவன் தங்கி உறைவன்
என்று தம் கருத்துக்களை வல்லளார் வலியுறுத்தி வந்தார்.
தாம் கண்ட இந்த நெறிக்கு 'சமரச சுத்தசன்மார்க்கம்' என்று பெயாட்டார்.
இந்த சன்மார்க்கக்கு நிறுவினார்.
இதுதான் 'சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'
இதன் பின்னர் 'சத்தியதருமச்சாலை' சத்திய ஞான சபை' முக்கிய நிலையங்களை
நிறுவியும் நிறுவித்தார்.

சன்மார்க்க சத்திய சங்கம் : தம்மைச்சுழ்ந்திருந்த அன்பர்களை கூட்டியே சமரசசுத்த
சன்மார்க்க சத்திய சங்கத்தை வடலூல்அமைத்தார். தமிழ் நாட்டில் முன்பிருந்தஅருளார்கள்
மடங்களை அமைத்து மக்களுக்கு தொண்டுசெய்தார்கள். ஆனால், வள்ளலார் மடம்
கட்டவில்லை. சங்கம் கண்டார். மடம் என்பது எல்லா மக்களுக்கும் சமமாக இடம்
தரும் ஆலயம் அல்ல. சமயத்துறையில் பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கும், குறிப்பிட்ட
இனத்தார்க்கு மட்டுமே இடம் தரக்கூடியது.சங்கத்தில் இந்த தொல்லை இல்லை.
இதில்யார் வேண்டுமானாலும் சேர்ந்துபயனாற்றலாம். இதற்கென்றே வள்ளலார்
"சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் "என்ற பெயால் ஒரு சங்கம் கண்டார்.

இச் சங்கத்திற்க்குத் தலைவர் இறைவன்தான்" என்றும் குறிப்பிட்டார்.

"சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்"இன்று தமிழ் நாட்டில் நூற்றுக்கணக்கான
இடங்களில் கிளைத்து படர்ந்து மிக அருமையான பணிகளைச் ஆற்றி வருகிறது.
தமிழ் நாட்டிலும் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, தென் ஆப்பிக்கா, இலண்டன்
ஆகிய நாடுகளிலும் [நமக்கு தொந்தவை] சங்கம் உள்ளது.

சத்திய தருமச்சாலை:

சத்திய தருமச் சாலையும் சன்மார்க்கசங்கத்தைச் சார்ந்த ஒரு நிறுவனம்
வள்ளலான் கொள்கையில் தலையானதுஜீவகாருண்யம்.
சத்திய தருமச்சாலை, சாதி மத இனவேறுபாடுகளைக் கடந்து எல்லா
மக்களுக்கு பசி தீர்க்கும் இடமாகவும்,அவர்களுக்கு சமரச சுத்த சன்மார்க்க
சத்திய உணர்வை ஊட்டுவதற்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு புனிதமான நிலையமாகும்.
ஏறக்குறைய நூற்றுப்பத்து நூண்டுகளுக்கு முன்னால் வள்ளலார் தம் கையால் அடுப்பு
மூட்டிஏழைகளுக்கு அன்னம்ப்பலிக்கும் சத்திய தருமசாலை இன்றும்
அணையாமல் நூற்றுக்காணக்கான ஏழைக்குஅன்னம் வழங்கப்பட்டு வருகிறது.
இங்கு தங்கிதான் பல அருட்பாக்களை இயற்றி பாடினார். பல்வேறு
அருள் அனுபவங்களை இந்தத் தருமச்சாலையில்தான் பெற்றார்.
''மேலையிலே இம்மையிலே ஒருமையிலே
தவத்தால் மேவுகின்ற பெரும் பயனும்
விளைவை எல்லாம் தருமச்சாலையில்
ஒரு பகலில் இறைவன் எனக்கு தந்தான்''என்று பாடுகிறார்.

சத்திய ஞான சபை:

இறைனவன் ஒருவனே, அவன் ஒளி வடிவானவன் என்று கண்ட வள்ளலார்
அந்த இறைவனுக்கு "அருட் பெருஞ் ஜோதி "என்று பெயாட்டார். அதனை அடையும்
வழி தனிப்பெரும் கருணையே என்றார். இந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவனை வழி
படுவதற்கு அமைத்து அருளியதுதான் சத்திய ஞான சபை.
தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்த சன்மார்க்கச் சங்கமே கண்டு களிக்கவும்,
சங்கம் சார் திருக்கோயில் கண்டிடவும்
தங்கமே பெறும் சற்சங்கம் நீடுழி துலங்கவும் சங்கத்தில் அடியேன்
ஆங்கமே குளிர அன்றனைப் பாடிடவும் இச்சை எந்தாய் !
-பிள்ளை சிறுவிண்ணப்பம்.
என்னும் திருஅருட்பாவே இதற்குச் சான்றாகும். சத்திய ஞானசபை அமைக்கப்பட்ட
ஊன் பழைய பெயர் பார்வதிபுரம். இராமலிங்க அடிகள் இதற்கு வடலூர் என்றும்
உத்திர ஞான சிதம்பரம் என்றும் பெயர்ச்சூட்டினார்.
அவர் வெளியிட்டு இருக்கும் சுத்த சன்மார்க்க சத்திய சிறுவிண்ணப்பதில்
''கடவுள் வழிப்பாடு எஞ்ஞான்றும் செய்வோம்? - கடவுள் திருவருள் விளக்கம் எந்நாள்
அடைவோம்?- மரணம்,
பிணி, மூப்பு முதலிய ஆகியவை எப்போது நீங்கும்?-என்றும் அழியாத போன்பசித்தி எக்காலம்
கிடைக்கும்?- என்று எண்ணி எண்ணி வழிதுறை தொயாமல் வருந்தி நின்ற தருணத்தே,
அவைகளைப்பற்றி அறிந்து உதவும் கருணைக் கடலாகிய கடவுளே! நெடுங்காலம்
மரணம் முதலாகிய அவதைகளால் துன்பமுற்று களைப்படைந்து உங்களை இந்த
அவத்தைகளினின்றும் நீக்கிக் களைப்பும் கலக்கமும் தவிர்த்து, அழியாத
போன்ப சித்தியை அடைவித்தல் பொருட்டாகவே பூர்வஞான சிதம்பரத்தின்வடபால்
பார்வதிபுரம் என்று குறிக்கப்படுகின்றஉத்திர ஞான சித்திரத்தில் யாம அளவு கடந்த
நெடுங்காலம் சித்தி எல்லாம் விளங்கத்திருவருள் நடம் செய்வோம்" என்றும்அப்பதியினிடத்தே
யாம் அருள் நடம்புதற்கு அடையாளமாகஓர் ஞானசபை காணுதல் வேண்டும் என்றும்,
திருவருட்குறிப்பால் அறிவித்ததும் அன்றி, அருள் உருவாகி எங்கள்
அகத்தும் புறத்தும் அமர்ந்து அருளியதோர்தடைகளும் இன்றி,இத்திருசபையும்
தோன்றி விளங்கச் செய்வித்து அருளியதேவார் பெருங்கருணையைக் கருதுந்தோறும்
பெருங்களிப்பு அடைகிறோம் என்று சொல்கிறார்.

பகுதி 2

வள்ளலான் சன்மார்க்கம் பகுதி 2

வள்ளலார் வெளியிட்ட சத்திய ஞானவிளம்பரத்தில்
கடவுள் தாமே திருயுள்ளம் கொண்டு சுத்தசன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய
உண்மை விளக்கம் செய்கின்ற ஓர் ஞான சபையை இங்கே தமது
திருவருட் சம்மததால் இயற்றுவித்து, இக்காலம் தொடங்கிய அளவு குறிக்கப்படாத
நெடுங்காலம், அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்க, யாமேஅமர்ந்து
விளையாடுகின்றோம். என்னும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி அருட்பெருஞ்
சோதியராய் வீற்றிருக்கின்றார் "என்கிறார்.
இறைவன் திரு உள்ளத்தின் படியே வள்ளலார் சத்திய ஞான சபையை
வடலூல் ஏற்படுத்தி இருக்கிறார் என்பது தெளிவாகப் புகிறது.
அருட்பெருஞ் சோதியை வழிப்படுவதற்க்கு வழக்கம் போல் 'கோயில்'
கட்டாமல் "சபை" கட்டியதை நாம் இங்குசிந்திக்க வேண்டும். 'கோயில்' என்றால்
அதில் குறிப்பிட்ட சமயத்தார் மட்டுமேசெல்ல இயலும். 'சபை' யில் அது போன்ற
கட்டுப்பாடுகள் கிடையாது.
சாதி, மத, இன வேறுபாடு இன்றி மனிதகுலத்தினர் எல்லோரும் வள்ளலார்
நிறுவிய சத்திய ஞான சபைக்கு சென்றுவழிபடலாம்.
சத்திய ஞான சபை எண்கோண வடிவானது,தெற்கு நோக்கியது. கீழ்
புறத்தில் பொற்சபையும், மேல் புறத்தில்சிற்சபையும் உள்ளன. என்கோண வடிவமான
ஞான சபைக்குள் பன்னிருகால் மண்டபம் ஒன்றும் நாற்கால் மண்டபம் ஒன்றும்
உள்ளன. நாற்கால் மண்டபத்தின் கீழேபூமிக்குள் ஒரு அறையும் இருக்கிறது.
நாற்கால் மண்டபத்தில் மேலே நடுவில் ஒரு பொய அகல்விளக்கு
வள்ளலாரால் ஏற்றி அருளப் பெற்றிருக்கிறது. அருட்பெருஞ் சோதி ஆண்டவனை
நாம் காண முடியாமல் மறைத்துக் கொண்டு ஏழு வெவ்வேறு நிறத்தில் திரைகள்
தொங்குகின்றன.
ஏழும் மாயத்திரைகள்; தத்துவப் படலம்.நம்மிடம் உள்ள அறியாமை ஆகிய
திரைகள் நீங்கப் பெற்றால் ஆன்ம ஒளிஅருட்பெருஞ் சோதியைத் தாசிக்கலாம்,
என்பதை எடுத்துக் காட்டுவது சத்தியஞானசபை,அகத்தே தாம் பெற்ற அருட் பெருஞ்
சோதி அனுபவத்தை புறத்தே சத்திய ஞான சபையாக அமைத்து இருக்கிறார்.
சோதி ஆண்டவரை மறைத்து தொங்கும்திரைகளைப் பற்றி அருட்பெரு
சோதி அகவலில் வள்ளலார் மிக விவாகச் சொல்லியுள்ளார்.

''கரைவு இல்லா மாயைக் கரும் பெருந்திரையால்
அரைசு அது மறைக்கும் அருட்பெருஞ் சோதி!
பேருறு நீலப்பெருந் திரையதனால் ஆருயிர் மறைக்கும்
அருட்பெருஞ் சோதி !
பச்சைத் திரையால் பரவெளி அதனை
அச்சுற மறைக்கும் அருட்பெருஞ் சோதி !
செம்பைத் திரையால் சித்துறு வெளியை
அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ் சோதி !
பொன்மைத் திரையால் பொருள் உறு வெளியை
அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ் சோதி !
வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை
அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ் சோதி !
கருப்புத் திரையால் கருது அனுபவங்களை
அலப்புற மறைக்கும் அருட்பெருஞ் சோதி !

இப்படி சோதி ஆண்டவரை மறைத்துக்கொண்டிருக்கும் ஏழு வெவ்வேறு
திரைகளைப் பற்றி விளக்கம் சொல்லி இருக்கிறார்.
இதையே மாயை, கியை, விருப்பம், அறிவு முதலிய ஏழு வகை சக்திகளாகப்
பித்துக் காட்டி விளக்குகிறார்.
கறுப்புத் திரை மாயா சக்தி!
நீலத் திரை கியா சக்தி !
பச்சைத் திரை பாரசக்தி !
சிகப்புத் திரை இச்சாசக்தி !
பொன்மைத் திரை ஞானசக்தி !
வெண்மைத் திரை ஆதிசக்தி !
கலப்புத் திரை சிற்சக்தி !
என்று ஏழுதிரைகளைக் குறிப்பிடுகிறார்.

இந்த சத்திய ஞானசபையை 1871 ஆம் ஆண்டுஆனித் திங்களில் ஆரம்பித்து எட்டு திங்களில்
1872 ம் ஆண்டு தைத்திங்களில் முடித்துதிருக்கிறார்.
1872 ஆம் ஆண்டு சனவா திங்கள் 25-ம் நாள்தைப்பூசத்தில் சோதி தாசன
வழிப்பாடு ஆரம்பாகித் தொடங்கியுள்ளது.
தொடக்க நாள் அன்று அதன் பெருமை உணர்த்த ஒரு முக்கிய விளம்பரம்
வெளியிட்டார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த விளம்பரத்தினை காண்போம்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தவிளம்பரத்தில்:-

"தமக்கு ஒருவாற்ரானும் ஒப்பு உயர்வில்லாத தனிப்பெருந் தலைமை அருட்
பெருஞ் சோதியார் என்றும், சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள்
ஒருவரே அகம்புற முதலிய எவ்விடத்தும்நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவு
என்னும் பூரானப் பொதுவெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாம் ஆகி
விளங்குகின்றனர். அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே ஆகிய கடவுளை, அறிந்து,அன்பு
செய்து ,அருளை அடைந்து, அழிவில்லாதசத்திய சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று
பலவேறு ஆபத்தைக்களினால் துன்பத்தில்அழுந்தி இறந்து இறந்து வீண்
போகிறார்கள்."
இனி இந்த சீவர்கள் விரைந்து விரைந்துஇறந்து இறந்து வீண் போகமல்
உண்மை அறிவு, உண்மை அன்பு, உண்மை இரக்ககுணங்களைப் போற்றும்
நற்செய்கை உடையவராய் எல்லாச் சமங்களுக்கும் எல்லா மதங்களுக்கும்,
எல்லா மார்க்களுக்கும் உண்மைப் பொதுநெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப்
பெற்று சுகத்தையும்,களிப்பையும் அடைந்துவாழ உண்மை கடவுளை தாமே
திருவுளங்கொண்டு, திரு அருள் சம்மதத்தால் இயற்றுவித்து 'இக்காலம் தொடங்கி அளவு
குறிக்கப் படாதநெடுங்காலம் அற்புத சித்திகள் எல்லாம் விளங்க
யாமே அமர்ந்து விளையாடுகின்றோம் 'என்னும் திருக்குறிப்பை வெளிப்படுத்தினார்.

சத்திய ஞானசபையில் அருட்பெருஞ்சோதி ஆண்டவனை வழிபடுவதற்குச்
சில விதிகளை வகுத்து அருளினார்இராமலிங்க வள்ளலார்.
ஞானசபைக்குள் புகுந்து அருட்பெருஞ்சோதி ஆண்டவனை வழிபடுவதற்கும்
வெளியில் இருந்து வழிபடுவதற்க்கும் சாதி சமயம் முதலிய வேறுபாடுகள் ஒன்றும்
இல்லை.
மற்ற கோயில்களைப்போல மேளதாளங்கள் முதலிய இசைக் கருவிகள்
சோறு, தேங்காய்,பழம் முதலிய நைவேத்தியங்கள், இன்னும் இது போன்ற வழிபாட்டு
முறைகள் ஞானசபை வழிபாட்டில் கிடையாது.
ஞானசபை வழிபபாட்டுக்காக சன்மார்க்க சங்கத்தாருக்கு விடுத்த கட்டளை;

''இன்று தொடங்கி அருட்பெருஞ் சோதிஆண்டவரது அருட்பெருஞ் சித்தி வெளிப்படும்
வரைக்கும், ஞான சபைக்குள் தகரக் கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும். பித்தளை
முதலியவற்றால் செய்த குத்துவிளக்கு வேண்டாம். மேல் ஏற்றுகிற குளோப்பு முதலிய
விளக்குகளும் வேண்டாம்."
''தகரக் கண்ணாடி விளக்கு வைக்குங் காலத்தில் தகுதியுள்ள நம்மவர்கள் தேக சுத்திகரண
சுத்தி உடையவர்களாய், திருவாயிற்படிப் புறத்தில் இருந்துக்கொண்டு விளக்கேற்ற
வேண்டும்.பன்னிரண்டு வயதுக்கு உட்பட்டசிறுவர்கள் கையில் கொடுத்தாவது, அல்லது
ஏழுபத்திரண்டு வயதுக்கு மேற்பட்டவர்கள்உட்வாயில்களுக்குச் சமீபங்களில்
வைத்து வரச் செய்விக்க வேண்டும்.''
''நாலு நாளைக்கு ஒரு விசை காலையில்மேற்குறித்த சிறியாரைக்கொண்டோ,பொயாரைக்
கொண்டோ உள்ளே சுத்தம் செய்ய வேண்டும். நீராடி சுத்த தேகத்தோடு கால்களில்வத்திரம்
சுற்றிக் கொண்டு முழங்காலிட்டு சுத்தம்செய்விக்க வேண்டும்''
விளக்கு வைப்பவரும், சுத்தம் செய்யும் சிறுவர், பொயவர் இருபாலாரும் பொருள்,
போகம்,இச்சை சிறிதும் இல்லாமல் - தெய்வ சிந்தை உடையராய், அன்புடையவர்களாய்
இருத்தல் வேண்டும். ஒரு மனதாய் நின்று மெல்லெனத் துதி செய்தல் வேண்டும்''

இந்த கட்டளையை காணும் போது வள்ளலார்அருட்பெருஞ்சோதி ஆண்டவர் இருக்கும்
இடத்தை எவ்வாறு மக்கள் புனிதமாகப்போற்றவேண்டும் என்பதில் கவனத்துடன்
இருந்திருக்கிறார் என்பதைத் தொந்துக்கொள்ள முடிகிறது.சேதி தாசனம் சக்தியை
பெருக்கவும், சோதி தாசனத்தைப் பார்த்து மகிழ்ந்து, மதங்களின் ஆரவாரங்கள்தொலைந்து
ஒழிந்து போகும் என்றார்.

இதனை -

சித்தி புரத்தே தினந்தோறும் சீர்கொள் அருள்
சத்திவிழா நீடித் தழைத்து ஓங்க,- எத்திசையில்
உள்ளவரும் வந்தே உவகை உறுக ! மதத்
துள்ளல் ஒழிக தொலைந்து !

இவ்வாறு வள்ளலார் வகுத்த விதிகளின்படி நித்திய வழிபாடு சில மாதங்கள்ஒழுங்காக
நடந்து வந்தது. அதன் பிறகு ஞானசபையைநடத்தி வந்தவர்கள் முறைப்படி தொடந்து
வழிப்பாட்டை நடத்தவில்லை. இதை அறிந்த வள்ளலார் சத்திய ஞான சபையைப்
பூட்டி, அதன் சாவியைத் தம்முடன் மேட்டுக்குப்பம் எடுத்துச் சென்றுவிட்டார்.
ஞான சபை நித்திய வழிப்பாடு நின்றுபோயிற்று. வள்ளல் பெருமான் சித்தி பெறும் வரை
சத்திய ஞான சபை திறக்கப் படவில்லை.

சித்தி வளாகம்:

சென்னையிலிருந்து சிதம்பரம் வந்த வள்ளலார் 1858 ஆம் ஆண்டு முதல்
சிதம்பரத்துக்கு அருகில் உள்ள கருங்குழிஎன்ற கிராமத்தில் தங்க ஆரம்பித்தார்.1867 ஆம்
ஆண்டு வடலூல் சத்திய தருமச்சாலையைஆரம்பித்தார். இதன் பிறகு தருமச்
சாலையிலேயே தங்கி வந்தார்.நாளாடைவில் தருமச்சாலையில் கூட்டம்
அதிகமாகிவிட்டது.வள்ளலார் அமைதியை நாடி 1870 ஆம் ஆண்டு வடலூருக்குத்
தெற்கே நாலு கிலோ மீட்டர் தூரத்தில்இருக்கும் மேட்டுக்குப்பம் என்ற கிராமத்திற்க்குச்
சென்று அங்கேயே தங்கத் தொடங்கிவிட்டார்.
இந்த மேட்டுக்குப்பம் சித்திவளாகக் குடிலில் இருக்கும்போதே
அவரைத் தாசிப்பதற்கும், அவர் அருள்வாக்குகளைக் கேட்பதற்கும் பலர் சித்திவளாகக்
குடிலில் வந்துக்கூட ஆரபித்துவிட்டார்கள்.வள்ளளார் சித்திவளாகத் திருமாளிகையில்
பல உபதேசங்களைச் செய்திருக்கிறார்.இங்கிருந்தபோதுதான் வடலூல் சத்திய
ஞானசபையையும் அவர் நிறுவி இருக்கிறார். சன்மார்க்க உலகில் பெரும் புகழ் பெற்ற
அருட்பெருஞ்ஜோதி அகவலைப் பாடியதும்இந்த சித்திவளாகத் திருமாளிகையில்தான்.
சன்மார்க்க உலகில் பெரும் புகழ் பெற்றஅருட்பெருஞ்ஜோதி அகவலை பாடியதும்
இந்த சித்திவளாகத் திருமாளிகையில்தான். வள்ளலான் ஞானயோக
அனுபவங்களான ஆறாம் திருமுறையின்பிற்பகுதிப் பாடல்கள் பலவும் இங்கேபாடியவைகளே.
சித்திவளாகத் திருமாளிகையில்தான்வள்ளலார் அருட்பெருஞ் ஜோதி சித்திமுழுதும்
கைவரப்பெற்றார். வள்ளலார் சித்திவளாகத் திருமாளிகையில் இருக்கும்போதுதம்
உடலைப் பிறர் பார்க்காதபடி மறைத்துக்கொண்டிருக்கும் அளவு பல சித்துக்களைப்பெற்றார்.
இப்படிச் சில நாள் ஒருவர் கண்ணிலும் படாது அவர் தம்மை மறைத்துக்கொண்டு இருக்க
எண்ணியபோது தம்மை காண வரும் அடியார்கள் பயந்துவிடக்கூடாது என்பதற்காக
அவரே ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்:-
ஒருவனைப் பற்றி அனந்தம் பேர்களுக்கு நன்மை உண்டாம்
என்பதை உண்மையாக நம்பி இருங்கள். என்னால் உங்களுக்கு நன்மை கிடைப்பது சத்தியம்.
நான் இன்னும் கொஞ்ச தினத்தில் திருவருள் வலத்தால் வெளிப்படுகிறேன்."அது வரை
பொறுத்திருங்கள். நான் மிகவும் சமீபத்தில் தானே வெளிப்படுவேன். அஞ்சவேண்டாம்.
தருமச்சாலையை இலகுவாய் நடத்துங்கள்.-"திருச்சிற்றம்பலம்"

இவ்வாறு , அறிவிப்பை எழுதிவைத்துவிட்டு சில காலம் யார் கண்ணிலும்
படாமல் இருந்து வந்திருக்கிறார். உடலை மறைத்துக்கொண்டு இறை அனுபவத்தில்
மூழ்கித் திளைப்பதும், மீண்டும் மக்கள் முன் தோன்றுவதுமாக வள்ளலார் இருந்து வந்துள்ளார்.
மக்களுக்கு ஒரு நீண்ட உபதேசம் செய்திருக்கிறார்.

பகுதி 3


வள்ளலான் சன்மார்க்கம் பகுதி 3


வள்ளலான் நீண்ட உபதேசத்தில் சிலபகுதிகளை மட்டுமே போதும் வள்ளலார்
அடைந்திருக்கும் உன்னத நிலையினை தொந்துக் கெள்ளலாம்.

"... காட்டில் சென்று ஆயிரம் ஆண்டுகள் தவம்செய்வதில் பெறும் பலன்களை
அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை நினைப்பதிலும்,அவரை வழி படுவதிலுமே பெற்றுவிடலாம்.
வேதம், ஆகமம்,புராணம், இதிகாசம் முதலியவற்றில் ஆண்டவனைப்
பற்றி உண்மையைத் தெளிவாக விளக்கவில்லை.
அவைகளில் ஈடுபடுவதன் மூலமாக அற்பசித்துகளை வேண்டுமானால் அடையலாம்.
ஆனால் ஆண்டவனைக் கண்டு அனுபவிக்க முடியாது.
ஆகையால் வேதம்,ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகளில்
மனதைச் செலுத்தாமல் நேரே ஆண்டவனைவழிபடுவதற்கு முயலுங்கள்.
சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும்,வேதாந்தம்,சித்தாந்தம் முதலிய மதங்களிலும்
லட்சியம் வைக்க வேண்டாம். அவற்றில்ஆண்டவனைப் பற்றி ஏதோ ஓரளவு கோடிட்டுக்
காட்டி இருக்கிறதே ஒழிய போதுமான அளவு விளக்கமாகச் சொல்லவில்லை.
ஆதலால் அதிலும் வாழ்க்கையை வீணாக்கவேண்டாம்.

''நான் சைவ சமயத்தில் லட்சியம் வைத்திருந்தது போல, வேறு யாரும்
வைத்திருக்க முடியாது. நான் அந்த சமயப்பிடியிலிருந்து விலகிய பிறகுதான்
ஆண்டவர் ஏறா தலையில் ஏற்றி வைத்திருக்கின்றார். என்னைப் போல் நீங்களும்
சமயத் தளைகளை அறுத்துக்கொண்டு நேரேஆண்டவனை வழிபடும் வழியில் ஈடுபடுங்கள்''

நான் இந்த ஏறாத தலையில் ஏறியதற்குக்காரணம் தயவுதான். தயவு
என்னும் கருணைதான், என்னைத் தூக்கி விட்டது. அந்தத் தயவிற்க்கு மனதில் ஒருமை
வரவேண்டும். தயவு வந்தால் பொய மலைமேல் ஏறலாம்''
''தெய்வத்தைத் தொந்து கொள்ளாது என்னைத் தெய்வம் என்று மக்கள்
நினைந்து சுற்றுகிறார்களே, இந்த வேதனைத் தாங்க முடியவில்லை.''
சாதாரண மக்கள் தெய்வத்தைத் தொந்துகொள்ளாமைக்கு காரணமும்
உண்டு. அதன் சுவையைத் தொந்துக்கொள்ள, அனுபவிக்க தொயவில்லை.
தெய்வ இச்சை அனுபவிக்கத் தொந்துக்கொண்டால் தெய்வத்தினிடம் பியம்ஏற்படும்.
ஆதலால் தெய்வத்தை அனுபவிக்க தொந்துக் கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடன்
தெய்வத்தை வழிபடுங்கள்.

"...அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி !

தனிப்பெருங்கருணை!
அருட்பெருஞ்ஜோதி!...
"... அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி !

தனிப்பெருங்கருணை!
அருட்பெருஞ்ஜோதி!...

என்னும் மந்திரத்தை ஆண்டவர் வெளிப்படையாக எனக்கு அருளியிருக்கிறார்.
தயவு கருணை, அருள் என்பன ஒரு பொருளைக்குறிக்கும். அதுவே ஒப்பற்ற தயவுடைய
பேரறிவாகும். இதுதான் உண்மை. இதை உணர்ந்து செயல்படுங்கள்.
நீங்கள் அனுபவித்து மகிழும்படி ஆண்டவர்வருவார். அவர் வந்தவுடன் எல்லா
நன்மையும் பெற்றுக் கொள்வீர்கள். இதுசத்தியம்! ஆண்டவான் கட்டளை.''

இவ்வாறு வள்ளல் பெருமான் அருள் உபதேசம்செய்த மூன்று மாதங்கள் கழித்து ஒருநாள்
சித்திவளாகக் குடிலில் தாம் வழிபட்டுவந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவான்
அருஉருவமான திருவிளக்கைத் தம் குடிலில் இருந்து வெளியே எடுத்து வைத்து,
''இதைத் தடைபடாது ஆராதியுங்கள்; இந்தக் கதவைச் சாத்திவிடப் போகிறேன்.
ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில்விளங்குகிறபடியால் இனி கொஞ்ச
காலம் எல்லோரும் உங்களுடைய காலத்தைவீணாகக் கழிக்காமல் நான் பாடி இருக்கும்
நினைந்து நினைந்து' என்று தொடக்கமுடைய 28 பாசுரங்கள் அடங்கிய பதிகத்தில்
கண்டபடி தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள். நான் இப்போது
இந்த உடம்பில் இருக்கிறேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் "
என்று திருவாய் மலர்ந்து அருளினார்.

இதன் பின்னர் 1874-ம் ண்டு சனவாத் திங்கள்30 ம் நாள் வள்ளலார் தமது
சித்திவளாகக் குடிலின் கதவைச் சாத்திக் கொண்டு ஞானசித்தி பெற்றுவிட்டார்.
சில நாட்களுக்குப் பின் சித்திவளாகக்குடிலைத் திறந்து பார்த்தபோது ".. திறந்து
பார்ப்பின் வெற்று அறையாகத்தான் இருக்கும்..." என்று வள்ளலார் கூறியிருந்தது
போலவே அது வெற்று அறையாகவே இருந்தது***
இவ்வாறு மறைவதுதான் ஞானசித்தியாகும். அருட்பெருஞ் சித்தியாகும். மரணமில்லாப்
பெருவாழ்வு என்பதும் இதுதான். சித்திபெற்ற ஞான யோகியின் உடல் தரையில்வீழ்வதில்லை;
மண்ணுக்கோ, நெருப்புக்கோ இரையாவதும்இல்லை.. 1878 ஆம் ஆண்டு தென்னாற்காடு
மாவட்ட ஆட்சி இதழில் [S.A.District manual 1878- J.H.Garsteen] ஜார்ஸ்டீன்
என்பவர் தம்மை மறைத்துக்கொண்டதுபற்றிக் குறித்துள்ளார். இதுவே
நமக்குக் கிடைத்து இருக்கும் மிகப் பழமையான சான்றாகும்.

'In 1874 he locked himself in a room [Still in Existance] in
Mettukkuppam [Hamlet of Karunguli] which he used for samadhi or
mystic meditation and instructed his disciples not to open it for
sometime. He was never seen since, and this room is still locked"
என்பது அவரது குறிப்பு.
இவரை பிலிப்ஸ் என்பவரும் இதே கருத்தைக் கூறியுள்ளார்

''In 1874 he disappeared from his house and nothing
clear is known about his death''
இது 1910 ம் ஆண்டு எழுதப்பெற்றது. எனவே மிகப் பழமையான இச் சான்றுகள்
மூலம் வள்ளலார் தம்முடம்பை மறைத்துக்கொண்டார் என்பது தெளிவாகிறது.

" ஊன் செய்த மெய்யும் உயிரும் உணர்வு ஒளிமயமாக்
கோம்செயவே பெற்றுக் கொண்டேன்... "
" ஊன உடம்பே ஒளியுடம்பாய் ஓங்கிற்க
ஞான அமுதெனக்கு நல்கியதே..."
மன்னுகின்ற பொன் வடிவும் மந்திரமாம்வடிவும்
வான்வடிவும் கொடுத்தெனக்கு முடியுஞ் சூட்டி
பன்னுகின்ற தொழில் ஐந்தும் செய்திடவே பத்து..."
இங்ஙனம் காணப்பெறும் அடிகளை, வள்ளலார்தம் ஊன் உடலை மறைத்துக் கொண்டார்
என்பது முற்றும் உண்மையே என்பதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.

அருட்பிரகாச வள்ளலார் ஞானசித்தி பெற்று நான்கு ஆண்டுகள் முடிந்தன. இதன் பின்
சத்திய ஞானசபை வழிபாட்டை மீண்டும்தொடங்க சில அன்பர்கள் தொடங்கவிரும்பினார்கள்.
ஆறு பேர்கள் கொண்ட ஒரு குழு உருவாகியது. இந்த குழுவினர் தாங்கள் விரும்பிய வண்ணம்
வள்ளலார் வகுத்த வழிப்பாட்டு விதிகளுக்கு மாறாக, சில புதிய ஏற்பாடுகளைவகுத்துக் கொண்டு

ஞானசபை வழிபாட்டைத் தொடங்கினார்கள்.
இந்த புதிய வழிபாடு 1878 ஆம் ஆண்டு சத்திய ஞானசபையில் ஆரம்பிக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் குழுவினர் ஞானசபை வழிப்பாட்டில் அவர்கள்
விரும்பிய வேறு சில ஏற்பாடுகளையும்செய்துக்கொண்டார்கள்.
இதற்கு பிறகு 1881 ஆம் ஆண்டில் ஏழுபேர் கொண்ட ஒரு குழுவினர் கூடி தாங்கள்
விரும்பிய வண்ணம் சில மாற்றங்களைச்செய்துக்கொண்டு இப்போது ஞானசபையில்
நடைபெற்று வருகிற வழிபாட்டு முறைகளை வகுத்துச் செயல் படத்தொடங்கினர்.

சமீபகாலம் வரையில் ஞானசபையில் நடைபெற்று வரும் வழிபாட்டு முறைகள்வள்ளலார்
வகுத்துக்கொடுத்த வழிபாட்டு முறைகள் அல்ல. 117ஆண்டுகளுக்கு முன்னால் அமைத்த
குழுவினரால் தாங்கள் விருப்பப்படி மாற்றி அமைத்த வழிபாட்டு முறைகள்தான்.
அதன்பின் திருமுருக கிருபானந்தவாயார் வள்ளலார் அமைத்த சத்தியஞானசபைக்கு
திருப்ப செய்தார். வாயார் ஞான சபையின் மேற்கூரை அமைப்பை மாற்றி,அதைவள்ளலார்
விரும்பிய வண்ணம் போலவே மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கருதிய சன்மார்க்க
அன்பர்கள் அதன்படி அமைத்தனர். வள்ளலார்நிறுவிய சத்திய ஞான சபை சமயங்கடந்தாகும்.
இது முற்றிலும் தனித் தன்மை வாய்ந்தது.
" தருணம் தொடங்கி வந்து தாசிக்கப்பெறுவீர்களாயின் கருதிய வண்ணம்
பெற்றுக் களிப்படைந்தும் அன்றி மூப்பினர் இளமை பெற்று ஆற்றல் முதலிய பலவகை
அற்புதங்களை கண்டு பெருங்களிப்பு அடைவீர்?" என்று தாம் வெளியிட்டுள்ள விளம்பரத்தில்
தினந்தோறும் ஜோதி தாசனம் செய்யவேண்டும் என்பதை வள்ளலார் வற்புறுத்தியுள்ளார்.
இறைவன் அரு உருவானவன் என்னும் தத்துவத்தை விளக்கும் ஜோதி வழிபாட்டினை
கொண்டார். ஒளியை வெறுப்பவர் எவருமிலர். எச் சமத்தவரும் ஒளியை விரும்புவார். எனவே
ஆன்ம நேய ஒருமைப்பாடுமையைவலியுறுத்தினார்.ஒளியை உருவாகவும்கொள்ள
இயலாது,அருவாகவும் கொள்ள இயலாது. உரு கண்களால் புலனாக வேண்டும்.
கையில் பிடிபட வேண்டும். ஜோதி கண்ணுக்குப் புலனாகவும்,கையில் பிடிபடாமலும்உள்ளது.
பிடிபடாததால் அருவாகும். இப்படி உருவாகவும் அருவாகவும் விளங்குவதால் ஜோதியினை
மேலாகப் போற்றினார்.இந்த அளவிற்குஒளி வழிபாட்டைப் போற்றிய ஞானிகள்
யாருமில்லை எனலாம்.
"மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதி...." 10; சிவவாக்கியர்.

"உச்சிக்கு நேரேயுண்ணாவுக்கு மேல்தம்
வைத்த விளக்கும் எயுதடி...." -25: வாலைகும்மி
''மூடத்துள் நின்ற சோதி..."1872:திருமந்திரம்

சமயத் தொடர்புடையராக ஆன்மீக வாழ்க்கையைத் தொடங்கிய வள்ளலார்
சாதி,மதம், சமயம், சாத்திரம், கோத்திரம் அனைத்தும் பொய் பொய்யே என் வன்மையாகச்
சாடும்
உள்ளத் தெளிவும் வலிமையும் பெற்றவர்.
''கலையுரைத்த கற்பனையே கலையெனக்கொண்டாடும்
கண் மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப்போக...''
சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்

அவர் இயற்றி அருளிய திரு அருட்பா உலகம் எங்கும் பரவி மனித குலத்திற்கு
வழிகாட்டும்.

அருட்பெருஞ் ஜோதி !
அருட்பெருஞ் ஜோதி!
தனிப்பெருங் கருணை!
அருட்பெருஞ் ஜோதி!

கிருஷ்ணன்

| பிரதான பக்கம் | மின்னஞ்சல் |










At 07:32 AM 10/5/99 +0800, you wrote:
>அன்புள்ள அகஸ்தியர்களுக்கும்
>திரு கிருஷ்ணன் அவர்களுக்கும்
>வணக்கம்.
>
>இன்று வள்ளலார் பிறந்த தினமென்றுஅறிகிறேன்.
>இந்த புனித நாளில் வள்ளலார் பற்றிஎழுதினால்
>இணையத்தினருடன், (நானும் தான்:-))
> தெரிந்துகொள்ளலாம்.
>
>நன்றி,
>அன்புடன்,
>ஜெயந்தி.
>
>
>------------------------------------------------------------------------
>
>eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
>http://www.egroups.com - Simplifying group communications
>
>
>
>
>