From Mon Oct 4 19:18:14 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 05 Oct 1999 02:21:20 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 4724 invoked from network); 5 Oct 1999 02:21:18 -0000
Received: from law-f307.hotmail.com (HELO hotmail.com) (209.185.130.96) by qh.egroups.com with SMTP; 5 Oct 1999 02:21:18 -0000
Received: (qmail 50044 invoked by uid 0); 5 Oct 1999 02:21:18 -0000
Message-ID: <19991005022118.50042.qmail@...>
Received: from 209.144.229.250 by www.hotmail.com with HTTP; Mon, 04 Oct 1999 19:21:17 PDT
X-Originating-IP: [209.144.229.250]
From: "Nagamanickam Ganesan"
To: tamil@...
Cc: kalaichol@egroups.com, agathiyar@egroups.com
Date: Mon, 04 Oct 1999 19:21:17 PDT
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Tamil for "party"
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Content-Transfer-Encoding: 7bit
X-Yahoo-Message-Num: 2436


party = களி
-------------------------

"party" என்பதற்குத் தமிழ் என்ன? நல்ல "feast"யை விருந்து என்போம்;
விழா குதூகலமான குடும்ப நிகழ்ச்சிகளுக்குப் பொருந்தும்; ஆனால், விருந்து, விழா
என்பதெல்லாம் கல்லூரி மாணவர் கொண்டாடுவதற்குப் பொருத்தமா??

party-கு நேர் "களி" என்பதே! கதகளி கதையைக் கேட்டுக் கேரளர் களிப்பது.
களி அல்லது களியாடல் அல்லது களியாட்டு என்பதே "party"-கு இசையும்;
கள் (beer, brandy, whisky வகையறா) பெருகினால், "களி" (party)
இன்னும் சிறப்படைகிறது.

கம்பன் ஒரு பார்ட்டி வைக்கிறான்! "party girls"-பற்றிப் பேசுகிறான்.

தாங்கிய துகிலார், மெள்ளச் சரிந்து வீழ் குழலார், தாங்கி
வீங்கிய உயிர்ப்பார், விண்ணை விழுங்கிய முலையார், மெல்லத்
தூங்கிய விழியார், தள்ளித் துளங்கிய நடையார், - வல்லி
வாங்கிய மருங்குல் மாதர், அனந்தரால் மயங்கி வந்தார்.

பானமும், துயிலும், கண்ட கனவும், பண் கனிந்த பாடல்
கானமும், தள்ளத் தள்ள, களியொடும் கள்ளம் கற்ற,
மீனினும் பெரிய, வாட் கண் விழிப்பது முகிழ்ப்பது ஆக,
வானவர் மகளிர் போனார், மழலை அம் சதங்கை மாழ்க.

மழையினை நீலம் ஊட்டி, வாசமும் புகையும் ஆட்டி,
உழை உழை சுருட்டி, மென் பூக் குவித்து, இடைக்கு இடையூறு என்னா
பிழையுடை விதியார் செய்த பெருங் குழல், கருங் கண், செவ் வாய்,
இழை அணி, மகளிர் சூழ்ந்தார், அனந்தரால், இடங்கள் தோறும்.

தேனிடை, கரும்பில், பாலில், அமுதினில், கிளவி தேடி,
மானிடை, கயலில், வாளில், மலரிடை, நயனம் வாங்கி,
மேல்நடை அனைய மற்றும் நல்வழி நல்க வேண்டி
வானுடை அண்ணல் செய்த மங்கையர் மருங்கு சென்றார்!

அண்ணா தான் சொல்வாராம் "ஏனிந்தப் புலவர்கள் கம்பனை விடாமல் இருக்கிறார்கள்
என்று புரிகிறது! கம்பரசம்தான் காரணம்". இந்த நாலு பாட்டையும் யாராவது மொழிபெயர்த்துத்
தாருங்களேன். "Tamil teens" அவற்றை வாசித்தால், கம்பன் தமிழை விடவேமாட்டார்கள்.

கம்பனின் அடிமை,
நா. கணேசன்




______________________________________________________