From Mon Oct 4 22:11:29 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
X-eGroups-Approved-By: agathiyar@... via web
Received: (listserv 1.259); by f3; 05 Oct 1999 22:08:41 -0000
Reply-To: agathiyar@egroups.com
X-Duplicate: Duplicate(2)--647316997
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 3952 invoked from network); 5 Oct 1999 00:40:57 -0000
Received: from valluvar.uwaterloo.ca (129.97.90.29) by qg.egroups.com with SMTP; 5 Oct 1999 00:40:57 -0000
Received: from kural.UWaterloo.ca (cnts3p45.uwaterloo.ca [129.97.130.45]) by valluvar.uwaterloo.ca (8.8.8/8.8.8) with ESMTP id UAA22386; Mon, 4 Oct 1999 20:40:52 -0400 (EDT)
Message-ID: <37F94ABC.EF100D92@...>
Date: Mon, 04 Oct 1999 20:47:58 -0400
From: "C.R. (Selva) Selvakumar"
X-Mailer: Mozilla 4.01 [en] (Win95; I)
MIME-Version: 1.0
To: tamil@..., agathiyar@egroups.com, meykandar@egroups.com
CC: selvakum@...
X-Priority: 3 (Normal)
Subject: [agathiyar] paa
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset=x-user-defined
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 2437

வணக்கம்.

ஒரு பாட்டு எழுதியிருக்கிறேன். அதற்கு
இருபொருள் உண்டு. சற்று கடினமாகத்தான்
முதலில் தென்படும் என்று நினைக்கிறேன்.

பொருள் விளங்கினால் கிளர்ச்சி ஊட்டும்,
சற்றேனும் களிப்பூட்டும் என்று நினைக்கிறேன்.

தமிழிலே இரு பொருள் என்றாலே பல பொருள்கள்
உண்டு. இரு என்றால் இரண்டு, இருப்பது (உள்ளது),
பெரிய, பெருமை மிக்கது என்றெல்லாம் பொருள்கள் உண்டு.
கருப்பு (இருள்) என்றுகூட பொருள் உண்டு.

மேலே எழுதி இருப்பது பாட்டு அல்ல :-)

நான் இப்படி எழுதியதற்காக எனக்கு பாட்டு கிடைத்தாலும்
கிடைக்கலாம்.

என் பாட்டு ஒரு வெண்பா.

இதோ அந்தப் பாட்டு :

எவ்விட்டம் செம்பரிதி யாகுமென வெண்ணிதின்
முவ்வூற்றம் மாண்டொரு நான்கடைய - செவ்விதின்
ஓரைந்தின் கட்டுணர்ந்து பொள்ளுடல் ஒன்பதின்
ஈராறோய் நானார் தனி

இரண்டு நாள் கழித்துப் பொருள் எழுதுகிறேன்.
நான் கூறவரும் இருபொருள் என்னவாக இருக்கும்
என்று எண்ணிப்பாருங்கள்!

குறிப்பு: தமிழறிந்த மெய்ப்பொருள், கணக்கு, அறிவியல் அறிஞர்கள்
பொருள் கண்டு களிப்படையலாம்.



அன்புடன் செல்வா