From Periannan Chandrasekaran Sun Oct 10 07:30:33 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 10 Oct 1999 14:33:43 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 32183 invoked from network); 10 Oct 1999 14:07:27 -0000
Received: from web703.mail.yahoo.com (128.11.23.23) by qg.egroups.com with SMTP; 10 Oct 1999 14:07:27 -0000
Message-ID: <19991010141604.6391.rocketmail@...>
Received: from [209.86.49.126] by web703.mail.yahoo.com; Sun, 10 Oct 1999 07:16:04 PDT
Date: Sun, 10 Oct 1999 07:16:04 -0700 (PDT)
From: Periannan Chandrasekaran
To: agathiyar@egroups.com
MIME-Version: 1.0
Subject: [agathiyar] Re: semantic similarity - 2
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
Content-Transfer-Encoding: 7bit
X-Yahoo-Message-Num: 2516



--- "Dr.RM.Krishnan" wrote:
-
>
> எ.கா: தமிழர் நாகரிகத்தில் முதலில் நெய் எனும் பொருளைக் கண்டது விலங்குகளின்
> பால்/கொழுப்பில் இருந்தே என்று
> சொல்லாய்வின் மூலம் உணரமுடியும். பின் அறிவு வளர்ந்து, நுட்பம் துலங்கிய போது தான் எள் எனும்
> நிலத்திணையில்
> இருந்து நெய் எடுக்கத் தெரிந்த மனிதன், அதையும் எள்நெய் (எண்ணெய்) என்றே சொல்லத் தலைப்
> பட்டான்.
> பின்னாளில் கடலையிலிருந்தும், தேங்காயிலிருந்தும், ஏன் மண்ணில் இருந்தும் கிட்டியவுடன்
> அவைகளையும்
> எண்ணெய் எனும் பொதுமைப் பொருளைக் கொண்டு, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், மண் எண்ணெய்
> எனும்
> விதுமைச் சொற்களால் அழைக்கத் தொடங்கி இருக்கிறான். நுணுகி அறியாவிடின் எண்ணெய் என்ற
> பொதுமைப்
> பொருளின் வேரடிப் பொருள் தெரியாமலே போய்விடும்.

ஆழ்ந்த சுவாரசியமான கட்டுரை. பாராட்டுகள்.

நெய் என்னுஞ்சொல் தடித்த பிசின நீர்மங்களுக்குப் பொதுவாக ஆள்கிறது.
தேனும் நெய்யெனவே அழைக்கப்படுகின்றது.

பரிபாடல் 11 (அடி 120?)
"
நீல்நெய்தாழ் கோதை அவர்விலக்க நில்லாது
பூஊது வண்டினம் யாழ்கொண்ட கொளைகேண்மின்"
நீல் நெய் = நீலநிறத் தேன் = ஓரி யெனவும் வழங்கும்.


>.> என்னும் சொல் தான் "animal" என பொதுமைப் பெயராக ஆங்கிலத்தில் வருகிறதோ என்று
> தோன்றுகிறது. ஏனெனில்
> இதற்கு முறையான வேர்ச்சொல் வரலாறு ஆங்கிலத்தில் யாருங் காட்டவில்லை.

இவ்வாராய்ச்சிக்குக் கிரேக்க இலத்தீனச் சொல்லாய்வும் இன்றியமையாதது.
ஏனெனில் அச்செவ்விய மொழிகளில் (classical) தொன்மையான சொல்லொலி வடிவங்கள்
சிதைவு குன்றாமற்போற்றப்பட்டுள்ளன.
அதற்குப் பெர்சியஸ் திட்டத்தின் தேடற் கருவிகள் துணைபுரியும். அதன் சுட்டி:
http://www.perseus.tufts.edu/

நான் சுருள், புரி, திரி,திருகு என்னும் பொருட்கொத்தின் மீதான பல சொற்களைக் கண்டுள்ளேன்.

curl: சுருள், குழல்
curve: குடவு

புரி: spiro
திரி/திருகு: thread, torque

----
குழு என்னும் பொருள்பட:
குரல், குழு: crew, group
தொழு, தொழும்பு, தொழுதி: troop, troupe
----
கோல், கழி என்னும் பொருட்கொத்து:
column, kaulos (கிரேக்கம்).
கோல், காழ், கழி = column, kaulos

----
தெறு (வெப்பம், சூடு) = therios, thermos
"தீயினுள் தெறல் நீ" (பரிபாடல் 3/4: திருமால்)
-->"நெருப்பில் சூடு ஆனாய் நீ"
----
helios என்பதற்குத் தமிழில் எல் என்னுஞ் சொல் இணை.
-----
நிழல்: இன்மை யென்னும் பொருள்பட
நிழல் = nihil, nil
நிழத்து (அழி) = annihilate
நூழிலாட்டு (கொன்று குவி) = annihilate

ஆகவே என் கருத்து: நிழல் எனும் சொல் ஒளியில்லாமை யென்னும் பொருள்படவே
வழங்கப் படுகிறது!
இது புல்லரிக்கக் கூடிய செய்தி...ஏன்?
தொல்காப்பியன் சொன்னான்: "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே"!

அதன் ஆழம் என்ன? தமிழன் பொருளின்றி எந்தப் பெயரும் இடவில்லை யென்பதே!
அதாவது ...அவன் ஆழ்ந்து சிந்திக்காமல் ஒரு வழக்கத்தைக் கைகொள்வதில்லை!
மொழிக்கே யிப்படி யென்றால் கற்புப் போன்ற சமுதாய வொழுக்க நெறிகட்கு எத்தகைய ஆழம்
இருந்திருக்கும்
என்பது பலபிறவிகள் எடுத்தாற்றான் உணரமுடியும்.

அன்புடன்,
பெ.சந்திரசேகரன்.

=====

__________________________________________________
Do You Yahoo!?
Bid and sell for free at http://auctions.yahoo.com