From Sat Oct 16 00:10:56 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 16 Oct 1999 07:14:09 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 12724 invoked from network); 16 Oct 1999 07:13:35 -0000
Received: from giasmd01.vsnl.net.in (202.54.6.1) by qh.egroups.com with SMTP; 16 Oct 1999 07:13:35 -0000
Received: from giasdmd01.vsnl.net.in (m35.chn.vsnl.net.in [202.54.35.71]) by giasmd01.vsnl.net.in (8.9.3/8.9.3) with SMTP id QAA15230; Sun, 17 Oct 1999 16:24:18 +0530 (IST)
Message-Id: <199910171054.QAA15230@...>
Date: Sat, 16 Oct 1999 12:39:36 +0500
From: "Dr.RM.Krishnan"
To: "agathiyar@egroups.com"
CC: "kalaichol@egroups.com"
Organization: poosoft
X-mailer: FoxMail 2.1 [en]
Mime-Version: 1.0
Subject: [agathiyar] effectiveness,efficacy,efficiency
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="us-ascii"
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 2594

அன்புள்ள அகத்தியர்களுக்கு,

ஒரு சென்னை நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் உள்ள நண்பர் ஒருவர் "'efficiency, efficacy, effectiveness' என்ற மூன்று
சொற்களை எப்படித் தமிழிற் சொல்லுவது?" என அண்மையில் கேட்டார். "'efficiency' என்பதற்கு 'செயல் திறன்/வினைத்
திறன்' என்ற சொல்லாட்சி இருக்கிறது," என்று கூறிய நான், "மற்றவற்றை 'வினைவலம்/வினைத்திட்பம்' என்று
சொல்லலாம்," என்பதாக அப்பொழுது சமாளித்தேன்.

இருப்பினும், இந்தத் தமிழாக்கங்கள் அவ்வளவு பொருத்தம் இல்லையோ என்று அடுத்த சில பொழுதுகளிலே எனக்குத்
தோன்றியது. குறிப்பாக இந்தச் சொற்களில் 'வினை' என்பது தேவையில்லாது தொற்றிக் கொண்டிருக்கிறதோ என்றும்,
'capability' என்பதோடு பொருள் உராய்வு ஏற்படுவதாகவும் எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது. இப்படி அசை போட்டுக்
கொண்டு கொஞ்சம் ஆழ்ந்து பார்த்த போது தோன்றிய கருத்தை இங்கே முன்னிட்டிருக்கிறேன்.

மேலே குறிப்பிட்ட மூன்று சொற்களும் நுணுகிய பொருண்மையில் கொஞ்சம் மாறுபட்டவை.

ஒரு வினை நடந்ததைத் தமிழில் சொல்லும் போது, செய்யும் பொருள், செயப்படும் பொருள் ஆகியவற்றை முன்னிருத்தி
ஒரு வாக்கியத்தில் சொல்லுகிறோம். செய்யும் பொருளின் திறம் கூடி வினை சிறந்தால், efficient ஆக வினை செய்ததாகச்
சொல்லுகிறோம். அது போல செயப்படும் பொருள் efficacy - ஓடு இருந்து வினை சிறப்பதும் உண்டு. செய்யும் பொருள்
efficient ஆக இருந்து, செயப்படு பொருளும் efficacy - ஓடு இருந்து வினை இன்னுஞ் சிறக்குமானால், மொத்தச்
சேற்றமும் (system) effectiveness காட்டும். இது பற்றி ஆங்கிலத்தில் ஒரு சொலவம் (slogan) உண்டு. Efficiency is doing
things right; efficacy is things doing to be right and effectiveness is doing the right things.

எனவே இந்தச் சொற்களுக்கு சரியான தமிழாக்கம் காண வேண்டுமானால் இவற்றை மட்டும் பார்க்காமல் அவற்றின்
தொகுதியான மற்ற சொற்களையும் பார்க்க வேண்டும் என்று உணர்ந்தேன். அதாவது தெரிந்ததில் இருந்து
தெரியாததற்குப் போனால், முறையான தமிழாக்கம் சீர்மையோடு உருவாகும் என்று தோன்றியது. அந்தச்
சொற்றொகுதிகள் வருமாறு:

fact, affect, effect, effective, effectively, effectiveness, efficacy, efficiency

முதலில் காணவேண்டியது. fact எனுஞ் சொல். இதை ஏதோ பெரியது என்று எண்ணிக் கொண்டு நம்மில் பலர் 'உண்மைகள்'
என்று சொல்லுகிறோம். ஆனால், facts may be truths but truthfullness is not the basic meaning; it only means that certain
things have happened. எனவே உண்மை என்பது சற்று அதிகமாகச் சொல்வது போல் தோற்றுகிறது.இன்னுஞ் சிலர்
'பொருண்மை' என்றும் கூறுகிறார்கள். பொருண்மை என்பது 'meaning, mass' எனப் பலவற்றைக் குறிக்கும். Fact என்பதை
'பொருண்மை' கொண்டு குறிப்பது சுற்றிவளைப்பதுபோல் இருக்கிறது. 'fact' என்பது 'நடந்தது' என்னும் பொருள்
குறிப்பதற்கே பெரும்பாலும் பயனாகிறது. இதையே வடமொழி கலந்து 'சங்கதி' என்றும் சிலர் கூறுகிறார்கள்.

'நடந்தது' என்பதை 'ஏற்பட்டது' என்று சொல்லுவதையும், 'பட்டறிவு, பட்டவைகள், பட்ட பாடு' எனும் போதும் எனக்கு 'பாடு'
என்பதையே fact எனுஞ் சொல்லுக்கு இணையாக ஏன் சொல்லக் கூடாது என்று தோன்றுகிறது.

'பாடு' என்பதற்கு அகரமுதலி சொல்லும் பொருண்மைகள்: coming into existence, experience, condition,result,social
etiquette, dignity, noise, body, industry, suffering, lying prostrate, fall, sleep, death, ruin, shortage, smearing, setting of
heavenly bodies, side, sign of the locative case. இவற்றில் coming into existence, condition என்பவை fact என்பதைத்
தானே உணர்த்துகின்றன. அது போல fact என்பதற்கு, இலத்தீனில் உள்ள facere - ('do' in English) என்னும் வினைச்
சொல்லே மூலமாயிருக்கிறது.

அடுத்து affect. இது ad+fact என்பதன் புணர்ச்சித் திரிவு. இதில் 'ad' என்பதின் இணை 'அடு/அகு' -to be near.
affect - அடு(/கு)ப்படுதல். இதைப் பாதிப்பு என்றும் சொல்லிவருகிறோம். பாதிப்பு என்பதற்கும் 'படு' என்பதே வேர். பாதிப்பு
எனுஞ் சொல்லைத் தவிர்க்க வேண்டியதில்லை. 'அடு(/கு)ப்படுதல்' என்பதையும் ஒருபொருட் சொல்லாக ஏற்றுக்
கொள்ளலாம். அடுப்படுதலின் நீட்டம் தான் எல்லோருக்கும் தெரிந்த 'ஆட்படுத்தல்' என்பது.

எ.கா. Such a condition affects the body. - அப்படி ஒரு கட்டாயம் உடலை ஆட்படுத்துகிறது (பாதிக்கிறது).

மூன்றாவது 'effect,effective,effectively''. இதில் effect என்பது ex+fact என்பதன் புணர்ச்சித் திரிவு. இதில் 'ex' என்பதின்
இணை 'எக்கு/எகு/எடு' - வெளியாதல். இதை 'விளைவு/வெளிப்பாடு' என்றும் சொல்லி வருகிறோம். 'விள்' என்னும்
வேருக்கும் 'வெளிவருதல்' என்றே பொருள். இங்கும் 'எகு(/டு)ப்படுதல்' என்னுஞ் சொல்லை ஒருபொருட்சொல்லாக ஏற்றுக்
கொள்ளலாம். 'எகுப்படுதல்/எடுப்படுதல்' என்பதின் நீட்டமே ஏற்பாடு. ஆனால் இன்றையத் தமிழில் preparation என்னும்
இன்னொரு பொருளில் மட்டுமே இது பயனாகிவருகிறது. எனவே 'எடுப்பாடு/எகுப்பாடு' என்பதையே வைத்துக் கொள்ள
வேண்டியிருக்கிறது. சில பொழுதுகளில் 'எகு(/டு)ப்பு' என்று மட்டுமே சொல்லலாம். 'பாடு' என்பது உள்ளடங்கிப்
பொருளையுணர்த்தலாம்.

எ.கா. The effect of his action is very great. - அவன் செயலின் எகுப்பாடு [எகு(/டு)ப்பு ] மிகப் பெரியது.
He completed his act effectively - அவன் தன் ஆற்றை (செயலை) எகு(/டு)ப்பா(டா)க முடித்தான்.
It was an effective action - அது ஒரு எகு(/டு)ப்பா(டா)ன ஆற்றம்.

இனி மீதியுள்ள மூன்று சொற்களுக்கு வருவோம்.

effectiveness - எடுப்படுனை>எடுப்பயுனை>எடுப்பினை (கொள்வினை/கொடுப்பினை போல 'னை' என்பது 'ness' என்பதற்கு
மிகப் பொருந்தும்.)
efficacy - எடுப்படுகை>எடுப்பிகை (கொள்கை/பொதுகை போல 'கை' என்பது 'cy' என்பதற்கு மிகப் பொருந்தும்.
efficiency - எடுப்படுங்கை>எடுப்பயுங்கை>எடுப்பியங்கை

தொகுத்துச் சொன்னால்,

fact- பாடு
affect (v) - ஆட்படு
effect (v) - எடுப்படு
effect (n) - எடுப்பாடு,எடுப்பு
effective (adj) - எடுப்பா(டா)ன
effectively (adv) - எடுப்பா(டா)க
effectiveness - எடுப்பிணை
efficacy - எடுப்பிகை
efficiency - எடுப்பியங்கை

சீர்மை கருதி இவ்வாறு தமிழாக்கியுள்ளேன். ஏற்கனவே பயிலும் தொடர்பான மற்ற (பாதிப்பு,விளைவு,வினைத்திறன்,
வினைவலன் போன்ற) சொற்களை இடையிடையே ஆளுவதும், இந்தச் சொற்கள் புழங்க உதவி செய்யும்.

அன்புடன்,
இராம.கி.