From Mon Oct 18 00:44:43 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 18 Oct 1999 07:47:57 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 11480 invoked from network); 18 Oct 1999 07:47:44 -0000
Received: from giasmd01.vsnl.net.in (202.54.6.1) by qg.egroups.com with SMTP; 18 Oct 1999 07:47:44 -0000
Received: from giasdmd01.vsnl.net.in (m39.chn.vsnl.net.in [202.54.35.45]) by giasmd01.vsnl.net.in (8.9.3/8.9.3) with SMTP id NAA11138 for ; Mon, 18 Oct 1999 13:23:06 +0530 (IST)
Message-Id: <199910180753.NAA11138@...>
Date: Mon, 18 Oct 1999 13:13:29 +0500
From: "RM.Krishnan"
To: "agathiyar@egroups.com"
Organization: poosoft
X-mailer: FoxMail 2.1 [en]
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: cybersquatters
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="us-ascii"
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 2616

At 10/18/99 12:13:00 AM, you wrote:
>அன்பு நண்பர் பழனி,
>
><இத்தகையோரை cybersquattersஇ என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர். அதிகாரமின்றி வீட்டை
>அல்லது சொத்தை ஒருவர் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதுபோல அதிகாரமின்றி மின்தளப் பெயர்களை
>ஆக்கிரமித்துக்கொள்பவர்கள் இவர்கள். புகழ்பெற்ற பெயர்களை இவர்கள் இணையத்தில் முதலில் பதிவு
>செய்துகொண்டு பின்னர் அவற்றை விற்க முயல்வர். அல்லது அத்தகைய இணைய முகவரிகளில் ஆபாசமான அல்லது
கண்டனத்துக்குரியவற்றை வெளியிடுவர். >
>
><இன்றிரவு சிங்கை இணையம் எனும் இருமொழிச் சஞ்சிகையில் தளம் ஏறும் செய்திக்கட்டுரைக்கு
>cybersquattersஇ எனும் சொல்லுக்கு மின்பெயர் ஆக்கிரமிப்பாளர் என்ற சொல்லைப் பயன்படுத்தலாமா
>என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். இதற்கு ஏற்கனவே தகுந்த சொல் இருந்தால் நண்பர்கள் கூறவும்.>
>
>ஏற்கனவே தகுந்த சொல் உண்டா இல்லையா என்று தெரியாது. ஆனால் "மின் பெயர் ஆக்கிரமிப்பாளர்"
>என்ற சொல் சற்று நீளமாகவும், புரியாத வேர்ச்சொல்லையும் கொண்டுள்ளது. (ஆக்ரமி என்ற
>வடசொல்லுக்கு அடிப்படைப் பொருள் என்ன?)
>
>cyber என்பதற்குக் கணினி மற்றும் கணினிவலைத் தொடர்புள்ளது என்று பொருள்.
>squattersஇஎன்பதற்கு நேரடித் தமிழ்ச் சொல் "குந்துபவர்கள்" என்பதே.
>
>ஆனால் இவ்விடத்தில் "மின் பெயர்" என்பதை விட "வலைப்பெயர்" பொருந்துமோ என்று தோன்றுகிறது.
>வலைப்பெயரைக் கைப்பற்றுபவர்கள் என்ற பொருளைத் தர ஒரு சுருக்கமான சொல்லை உருவாக்கலாம்.
>முதலில் சொல்லைத் தந்து அடைப்புக் குறிகளுக்குள் பொருளைத் தரலாம். "வலைப்பற்றாளர்கள்"
>என்ற சொல்லை உருவாக்கிப் பார்த்தேன். தினத்தந்தி படிப்பவர்களுக்குப் புரியாது. "வலைப்பெயர்
>திருடர்கள்" என்ற சொல் தினத்தந்திக்குப் பொருந்தி வரலாம். ஆனால் சரியான பொருள் தருமா?
>
>ஏனெனில் தங்கள் காசைக் கொடுத்து இந்தப் பெயரின் உரிமையை வாங்குபவர்கள் உண்மையில்
>திருடர்களா? வேறு துறையில் புகழ் பெற்ற பெயருக்கு வலைவெளியிலும் உரிமை உள்ளதா?
>அமெரிக்கச் சட்டப் படி போட்டியிடாத துறைகளில் ஒரே பெயர் பயன்படுத்தப் படலாம். அதனால்
>மெக்டானால்டு-டக்ளஸ் நிறுவனம் விமானங்களைக் கட்டும் துறையிலும், மெக்டானால்ட்ஸ் நிறுவனம்
>விரைவுணவகங்கள் துறையிலும் இருப்பதால், "மெக்டானால்டு" என்ற பெயரைப் பயன்படுத்துவதில்
>போட்டி இல்லை. அதனால் மெக்டானால்டு சைக்கிள் ஷாப் நடத்துபவரும் பிழைத்துக் கொள்வார்.
>ஆனால் மூன்று நிறுவனங்களும், வலைவெளியில் கடைவிரிக்கும்போது, யாருக்கு இந்தப் பெயர்
>சொந்தம்?
>
>வலைப்பெயர் கைப்பற்றுபவர்கள்
>வலைப்பெயர் திருடர்கள்
>வலைப்பெயர் கொள்ளைக்காரர்கள்
>வலைக்குந்துபவர்கள்?
>
>மற்ற நண்பர்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.
>
>
>அன்புடன்,
>
>மணி மு. மணிவண்ணன்
>நூவர்க், கலி., அ.கூ.நா.
>
அன்புள்ள அகத்தியர்களுக்கு,

நண்பர் சிங்கைப் பழனி 'cybersquatters' என்பதை எப்படிச் சொல்வது என்று கேட்டிருந்தார். மணிவண்ணனும் தன்
முன்னீட்டை வைத்து, 'squatter' என்பதை 'குந்துபவர்' என்று சொல்லியிருந்தார். அது முற்றிலும் சரி. வேண்டுமானால்
இன்னுஞ் சுருக்கமாக 'குந்தர்/குத்தர்' என்றே சொல்லலாம்.

கொஞ்சம் சிக்கலானது இந்த 'cyber' தான். இந்தக் காலத்தில் அது ஒரு முன்னொட்டாக மாறிவிட்டது. அதன் ஆரம்பம்
'cybernetics' என்ற சொல்.

Bloomsbury dictionary of word origins -ல் சொல்லுவது:

Cybernetics was first coined in French, as cybernetique, in the 1830s. But then it was used literally for the 'art of
governing' (it is a derivative of Greek kubernetes 'steersman, governor,' from 'kubernan' - 'steer', source of English
govern). The english term,'theory of control and communication processes,' is a new formation, introduced in the late
1940s by the founder of cybernetics, the US mathematician Norbert Wiener (1894-1964)

இன்றையத் தமிழில் 'the art of governing' என்னுங் கருத்து, 'ஆளுதல்' என்றே சொல்லப் படுகிறது. govern - ஆளுதல்,
governance - ஆளுகை, governing - ஆளும்,ஆளுதல், government - ஆட்சி, governor - ஆளுநர். ஆனால் அரசர்கள்
இருந்த காலத்தில் இன்னொரு சொல்லும் இருந்திருக்கிறது. அது கோனாட்சி, கோன்மை என்று சொல்லப் படுவது.
கோல் உள்ளவன் கோன்; கோலுகிறவன் கோன்.

ஒரு சொல்லின் முதல் நெடில், இரண்டு இணைக் குறிலாக மாறுவது தமிழில் பெரிது பழகிவந்துள்ள ஒரு சொல்திரிபு
முறை: அதன்படி, கோலிடம் - குவலிடமாக மாறி ஆட்சி நடக்கும் ஊரைக் குறிக்கும். அது போல கோலயம்
குவல(ய)மாக மாறி பூமியையே குறிக்கும். இன்னும் கோலுதல் குவலுதலாகவும், கோனுதல் குவனுதலாகவும் மாற
முடியும். இதன்வழி, ஆளுதலை ஒட்டிய இன்னொரு சொற்றொகுதியைக் காணமுடியும்.

govern - குவனுதல், governance -குவனுகை/குவனுங்கை, governing - குவனும், குவனுதல் government - குவனமைவு,
governor - குவல்நர் (=குவனர்). governing -ங்கிற்கு இணை கண்ட பிறகு, cybernetics - ற்குக் 'குவந்திகை' எனச் சொல்
காணுவது எளிது. cybernetics என்பதில் இருந்து cyberspace செய்தவர்கள் cybernet என்று எடுக்காமல் சுருக்கங் கருதி
cyber என்றே முன்னொட்டாக்கி விட்டார்கள். நாமும் 'குவல' என்பதை 'cyber' -க்கு இணையாக முன்னொட்டாகக்
கையாளுவது சிறந்தது என்று தோன்றுகிறது. குவலயம்(/ குவலம்) என்ற சொல் உலகம் என்னும் பொருளில் இன்று
அருகியே ஆட்சி செய்கிறது. 'குவல வெளி' cyberspace -ற்கும், 'வெறு வெளி' என்பது 'virtual space' -ற்கும் மிகப்
பொருந்தும். 'வலை' எனுஞ் சொல் பொதுவான 'net' என்பதற்குப் பொருந்திய காரணத்தால் அதற்கு 'cyber' என்னும்
'கட்புலனுக்குத் தெரியாது கருத்துமுதலாக இருக்கும்' தன்மையைக் கொடுக்க வேண்டாம் என நான் கருதுகிறேன்.

'cybersquatters' குவலக்குத்தர்கள்/குவலக்குந்தர்கள் ஆவர். இனி தினத்தந்தியில் இது எடுபடுமா?

"என்னாபா இது? அம்பட்டன் வாராவதியண்டே குந்திக்கிரானுங்கள்ளெ; ஏன், மத்ராசிலேயே குந்திக்கிரானுங்கள்ளெ,
அத்தயெல்லாம் சொல்ற போது, குவலயத்துலே மேலே குந்திக்கிணு, 'விடாக் கண்டன்/கொடாக் கண்டன்னு'
விட்டலாச்சாரியா படம் பார்த்திருக்கியா அதுங் கணக்கா, அட்டகாசம் பண்ணுற பசங்களைப் பத்திச் சொல்ல
முட்யாதா? ஹூக்கும். முத வாட்டிக் கொஞ்சம் சிர்மந்தான். அப்பாலே எல்லாம் சரியாப் பூடும். சொல்ற ஆளு
எபெக்டிவா, எடுப்பா, விலாவாரியாச் சொல்லணும்பா? என்ன நான் சொல்றது?"

அன்புடன்,
இராம.கி.