From jaybee@... Tue Oct 16 07:57:04 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 16 Oct 2001 14:57:04 -0000
Received: (qmail 16495 invoked from network); 16 Oct 2001 14:56:58 -0000
Received: from unknown (10.1.10.27) by l9.egroups.com with QMQP; 16 Oct 2001 14:56:58 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta2 with SMTP; 16 Oct 2001 14:56:57 -0000
Received: from user (as-104-90.tm.net.my [210.186.104.90]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GLB00C8506TGS@...> for agathiyar@yahoogroups.com; Tue, 16 Oct 2001 22:56:55 +0800 (SGT)
Date: Tue, 16 Oct 2001 22:56:08 +0800
Subject: Technique involved - Re: [agathiyar] padiththup paarunggaL
X-Sender: jaybee@...
To: "agathiyar@yahoogroups.com"
Cc: Hari Krishnan
Message-id: <3.0.3.32.20011016225608.01841118@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12514


அன்புள்ள ஹரி/அன்பர்களே,

At 07:14 PM 10/15/01 +0000, you wrote:
>அடடா அடடா தலைவரே!
>
>மிகச் சுவையான தகவல் ஒன்று. கூடவே அட்டகாசமான முடிச்சு. என்னுடைய ஆசிரியர் இப்படித்தான்
திடீரென்று கொண்டு வந்து இணைப்பார்.

இந்தப் படைப்பு ஒரு தினுசானது. இதில் ஒரு மாதிரியான
உத்தியைப் பயன்படுத்தியிருக்கிறேன்.

இதைப் படித்துப் பார்க்கும்போது பல விஷயங்களுக்குள்
கட்டுரை நுழைந்து நுழைந்து நகர்ந்து செல்வது தெரியும்.

கம்பம், அதன் பல வகைகள், மரவீடுகள், அத்தாப்புச்சுந்தரிகள்,
pig-tailed macaque, சடை பின்னிய குரங்கு, அதன் படம்,
தேங்காய் பறிக்கும் குரங்கு, அதன் பயிற்சி, அதன் economical value,
Planet of the Apes, அதில் வரும் வசனம், occupational hazard,
குரங்குப் பிடியும் குரங்கு பிடிப்பதும் , பற்று விடல், குறள்.....என்று
நெளிந்து நெளிந்து ஊர்ந்து செல்கிறது.
பாம்பு ஊர்ந்து நெளிந்து செல்வதைப் போல கட்டுரையின் நடை
இருப்பதால் இந்த நடைக்கு நான் 'புஜங்கம்'என்று பெயர் சூட்டிக்கொண்டேன்.
இந்த மாதிரியான உத்தியை இருபதாண்டுகளுக்கு முன்னர் மலேசிய அரசின்
தமிழ் மாத சஞ்சிகையான 'உதயம்' பத்திரிக்கையில் எழுதிய 'ஸ்ட்ரெஸ்'
தொடர் கட்டுரையில் செம்மைப்படுத்திக்கொண்டேன். பின்னர் 'தினமணி'
ஞாயிறு மலரில் 'வால் நட்சத்திரம்' என்னும் தொடரில் இந்த உத்தியைப்
பயன்படுத்தினேன். அதன் பின்னர் 'தமிழ்த்தாத்தா'வின் சில பகுதிகள்,
'ஸ்ரீதேவி வழிபாடு' தொடர் ஆகியவற்றிலும் கையாண்டேன். என்னுடைய
மெகா-தொடராகிய 'வருங்காலயியலி'ல்தான் முழுவீச்சைக்காட்டிப் பார்த்தேன்.
இந்த உத்தி, அசந்தால் இடறிவிட்டுவிடும். எங்கேயோ கொண்டு
போய்விட்டுவிடும். சம்பந்தாசம்பந்தமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறாற்போல்
ஆகிவிடும். போரடிக்க ஆரம்பித்துவிடும். பேய்குழப்பமாக உருவாகும்.
கேணத்தனமாக முடிந்துவிடலாம். இதற்கு மிகவும் பரந்த தகவல் பின்னணியும்
கற்பனையும் தொகைத்திறமையும் இருக்கவேண்டும் என்பதைச் சொல்லத்
தேவையில்லை.
சமஸ்கிருதக் செய்யுளியலில் 'புஜங்கம்' என்றொரு வகை இருக்கிறது.
அந்த நடை, ஒரு பாம்பு நெளிந்து நெளிந்து செல்வதைப்போல இருப்பதால்
அதற்கு அவ்வாறு பெயர் அமைந்திருப்பதாகச் சொல்வார்கள். 'புஜங்கம்'
என்பது நல்லபாம்பு. ஆதிசங்கரர் பாடியுள்ள 'சுப்ரமண்ய புஜங்கம்'
அவ்வகையில் மிகவும் புகழ் பெற்றது.
ஆதிசங்கரரின் எதிரிகள் அவர்மேல் ஆபிசார மந்திரப்பிரயோகம்
செய்துவிட்டனர். 'ஆபிசாரம்' என்பது தீயவிளைவை ஏறபடுத்தக்கூடியது.
ஆபிசாரத்தின் விளைவாக ஆதிசங்கரருக்குக் கடுமையான வயிற்றுவலி
ஏற்பட்டது.
அதனை முறித்து முறியடிப்பதற்காகத் திருச்செந்தூர் முருகனை
வேண்டி அவர்மேல் பாடிய பாடல்கள்தாம் 'சுப்ரமண்ய புஜங்கம்'.

மயூராதி ரூடம் மஹாவாக்ய கூடம்
மனோஹாரி தேஹம் மஹத்சித்த கேஹம்
மஹீதேவ தேவம் மஹாவேத பாவம்
மஹாதேவ பாலம் பஜேலோக பாலம்.

மொத்தம் முப்பத்துமூன்று செய்யுள்களைக் கொண்ட இந்த
தோத்திரத்தின் முப்பத்திரண்டாவது செய்யுள் இது.

ஜயாநந்த பூமந் ஜயாபார தாமந்
ஜயாமோக கீர்த்தே ஜயாநந்த மூர்த்தே
ஜயாநந்தஸிந்தோ ஜயாசேஷபந்தோ
ஜயத்வம் ஸதாமுக்தி தானேச ஸூநோ

சுப்ரமண்ய புஜங்கத்தை இங்கே காணலாம்:

http://murugan.org/texts/bhujangam.htm

தமிழ் மொழிபெயர்ப்பு
http://murugan.org/texts/tbhujangam.htm

அன்புடன்

ஜெயபாரதி

அவர் மறுபடியும் எழுந்து வந்து சொல்வது போல ஒரு கணம் பிரமை ஏற்பட்டது. சலாம் குருஜி சலாம்.
>
>அது சரி, what should I let go? ;-)
>
>வாலைத் தடவிப் பார்த்தபடிஇ,
>கவி.
>
>
> ----- Original Message -----
> From: jaybee
> To: agathiyar@yahoogroups.com
> Sent: Monday, October 15, 2001 10:36 AM
> Subject: [agathiyar] padiththup paarunggaL
>
>
>
> அன்பர்களே,
>
>
> அந்தக்குரங்கு, தன் கையில் பற்றியிருந்த குவே பணியாரத்தின்மீது
> வைத்திருந்த பிடிப்பை அது விட்டிருந்தால் அந்தக்குரங்கு பிடிபட்டிருக்காது.
> தேங்காய் பறித்துப்போடவேண்டிய அவலமான அடிமைப்பிழைப்பும் அதற்கு
> ஏற்பட்டிருக்காது.
>
> அதனால்தான் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்:
>
> பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
> பற்றி விடாஅ தவர்க்கு.
>
> ('பற்றை இறுகப் பற்றிக்கொண்டு விடாதவரை, துன்பங்களும்
> இறுகப்பற்றிக்கொண்டு விடுவதில்லை').
>
> Must know when to let go.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
> =======================================