From eramurug@... Thu Oct 18 17:09:44 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 19 Oct 2001 00:09:44 -0000
Received: (qmail 22013 invoked from network); 19 Oct 2001 00:09:43 -0000
Received: from unknown (10.1.10.27) by l7.egroups.com with QMQP; 19 Oct 2001 00:09:43 -0000
Received: from unknown (HELO web14806.mail.yahoo.com) (216.136.224.222) by mta2 with SMTP; 19 Oct 2001 00:09:43 -0000
Message-ID: <20011019000943.82655.qmail@...>
Received: from [210.214.133.157] by web14806.mail.yahoo.com via HTTP; Thu, 18 Oct 2001 17:09:43 PDT
Date: Thu, 18 Oct 2001 17:09:43 -0700 (PDT)
Subject: Re: [agathiyar] Re: [tamil-ulagam] Six to Six in Singapore
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To:
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 12559

ததாஸ்து!

சேச்சி வீட்டில் கொலு உண்டா? வந்தால் சுண்டல் கிடைக்குமா?

அன்புடன்,
இரா.மு



--- Kamala Devi wrote:
> அன்பின் சஹோதரன் முருகன்,
> நவராத்திரி விரதத்தால் iன்றுதான் கணிணியை தொடுகிறேன்.
> சாஹித்யக்காரனாய சஹோதரண்டெ ஸ்வரம்
> கேட்டப்பொழ்,சந்தோஷிச்சு.மலையாளம் என்றாலே,
> பல கண்டணங்களிடையே, அசலாய உச்சாடனத்தில் முருகன் ஸார்,பழனிஏட்டன்
> போலவே
> அட்சரசுத்தமாய உங்கள் மொழிவளம்----------
> ரசித்து,சிரித்த 'தமாஷ',(உங்கள் கட்டுரையில் விடுபட்ட சேதி)
> பார்ய, மக்கள், என்று ஞான் கேட்க,
> எனிக்கு ஒரு பார்ய, ரெண்டுமக்கள்' என்று அப்பாவியாய் பதிலிறுத்ததில்
> ,ஒருனிமிஷம் ஸ்தம்பிச்சு,
> பின் பொட்டிச்சிரிச்சு..ஸாரே, எல்லோருக்குமே ஒரு பார்ய தானே? அது
> என்ன?
> உங்களுக்கு மட்டும், ஸ்பெஷலா?(iப்பொழுதும் சிரிக்கிறேன்)
> முதலாட்டாம் தொகுதியில், கடைசிக்கதை,ஆவியோடு குடித்தனம்
> பற்றி,(ஞான் iதுவரை எழுதியேயிராத
> சப்ஜெக்ட்) பற்றி , பல நாட்கள் என்னை தவிக்கவைத்த உங்கள் சிறுகதை
> பற்றி,
> னேரில் சந்திக்கும்போது பேசுவோம்.
> நவராத்திரி பற்றிய கட்டுரை, தந்த க்ரிஷ்ணன் uncle, திரு. ஜே.பி.
> அவர்கட்கும்
> மனமுவந்த நன்றி.
> ஈஷ்வரி அனைவரையும் ரட்ஷிப்பாளாக. நமஸ்காரம்
> ஸஹோதரி கமலாதேவி.
>
>
>
>
> >From: "era.murugan achwin"
> >Reply-To: tamil-ulagam@yahoogroups.com
> >To: tamil-ulagam@yahoogroups.com
> >Subject: [tamil-ulagam] Six to Six in Singapore
> >Date: Tue, 16 Oct 2001 11:46:15 -0700 (PDT)
> >
> >
> >மழையோடு சாங்கி விமானததளத்தில் இறங்கியபோது விடியற்காலை
> ஐந்தரை
> >மணி. கூர்ந்து பார்த்து விட்டு விசாவில் ஓங்கி முத்திரை குத்திய தூக்கக்
> >கலக்கமான சீன மாது மேசை மேல் இனிப்பைக் காட்டி எடுத்துக் கொள்ளச்
> >சொன்னாள். வேண்டாம் என்றால் முகத்திலும் முத்திரை விழலாம் என்ற
> லேசான
> >பயத்தோடு எடுத்துப் பிரித்து அதக்கிக் கொண்டு வெளியே வர,
> எப்போதும்
> >சாங்கியில் பார்க்கிற ஜயண்ட் சைஸ் மலேய (இல்லை, தமிழ்தானா?)
> இளைஞன்
> >மிட்டாய் கலர் சட்டையோடு போனமாதம் கண்ட மேனிக்குப்
> பிரத்யட்சமாகி
> >டாக்சிக்குக் கைகாட்டியருளினான்.
> >
> >சிங்கப்பூர் டாக்சி டிரைவர்கள் சென்னை ஆட்டோக்காரர்கள் போல் -
> பேச்சு
> >விஷயத்தில் தான்; ஆனால் இன்றைக்குக் காலையில் என்னை இட்டுப்
> போனவர்
> >சிவனே என்று மழையில் குளிக்கும் தெருவில் பார்வை பதித்து ஓட்டிப்
> >போனார். முன் சீட்டில் பக்கத்தில் உட்கார்ந்தபடி வழக்கம் போல் வாயைப்
> >பிடுங்கி, "மழையிலே காலை நேரத்திலே இப்படி வாடகை வண்டி ஓட்டறது
> >கஷ்டம் இல்லீங்களா"...."கஷ்டம் தான்..இல்லைதான்"..."எட்டு மணி
> நேரம்
> >வேலையா? அதுக்கு மேலே ஓட்டுவீங்களா?"... "எட்டு மணி நேரமும்
> >தான்..அதுக்கு மேலேயும் தான்"...."எனக்கு பூகீஸ் ரோடு
> இண்டர்காண்டிணெண்டல்
> >ஓட்டல் போகணும்".. "பூகீஸ் ரோடும் போகலாம்..வேறே எங்கே
> >வேணுமானாலும் போகலாம்".... இப்படியே போனால், "டாக்சி
> ரொம்ப
> >நாளா ஓட்டறீங்களா?"..."டாக்சியும் ஓட்டுவேன்..பேய் பிசாசும்
> >ஓட்டுவேன்"..
> >
> >"காலையில் ஆறரை மணிக்கு செக்-இன் என்றாலும் ராத்திரி முழுக்க அறை
> >உங்களுக்காகக் காத்திருந்தது..பகல்லே செக்-அவுட் செய்யணும்" சீன
> மங்கை.
> >அலுத்துப் போன அழகி. கொட்டாவியை அடக்கிக் கொண்டு சொல்கிறாள்.
> >அப்புறம் யார் என்ன என்று குலமுறை கிளர்த்தியதும், "சாயந்திரம்
> ஆறரைக்கு
> >செக் அவுட் செய்தாப் போதும்". இப்படி அழகாகச் சிரித்தால் நான் செக்
> >அவுட்டே செய்ய மாட்டேன்..
> >
> >அறைக்குள் நுழைந்ததும் சுங்கை பட்டாணிக்குத் தொலைபேசுகிறேன் (லோக்கல்
> >கால் சார்ஜ்தான்). வந்ததும் பெரிசரிடம் நலம் விசாரித்து விட்டுத்தான்
> >மற்ற வேலையைத் தொடங்குவது என்பது செண்டிமெண்டாகிக் கொண்டு
> வருகிறது.
> >ஒவ்வொரு முறை இப்படிப் பேசிவிட்டு எடுக்கிற எல்லாக் காரியமும்
> >வெற்றிதான்!
> >
> >"குரங்கு ஜோக் ஒண்ணுதானே எனக்குச் சொல்லியிருக்கீங்க..இன்னொரு அஞ்சு
> >வெள்ளி ஜோக் சொல்லுங்க சான்"
> >
> >காலையில் அவரை வேறு யாராவது இப்படி யாராவது கஷ்டப்
> >படுத்தியிருப்பார்களா என்று தெரியவில்லை :-)
> >
> >பத்து மணிக்கு அலுவல் சம்பந்தமான சந்திப்பு என்று வந்தால்
> ஒன்பதுக்கேவாம்.
> >அலறிப் புடைத்துக் கொண்டு எல்லாம் முடித்து, ஸ்டார்பக்கில் நுழைந்தால்,
> "டீ
> >வேணுமா?" என்கிறார்கள். "யார்டா..புத்தி கெட்ட பிள்ளையா
> இருக்கியே.
> >பார்ப்பார ஓட்டல்லே டீ சாப்பிட மாதிரி" என்று புதுமைப் பித்தன்
> சொன்னது
> >நினைவு வர, "டீ வேணாம், கப்புசினோ, சாக்லெட் சிப் குக்கி"
> >
> >ஓயாத மீட்டிங்..ஒழியாத மீட்டிங்.. காலையில் ஒன்று..மதியம்
> ஒன்று..ஒரு
> >வழியாக நாலு மணிக்கு முடிவுக்கு வர, பிய்த்துக் கொண்டு செசில் ரோடு.
> >பழைய வங்கி நண்பர்கள். தேத்தண்ணீர். அங்கிருந்தே சிங்கை
> >பழனியவர்களுக்குத் தொலைபேச, "வாங்க" என்று உற்சாகமாக
> வரவேற்கிறார்.
> >"நாடாளுமன்றம் கஃபேட்டேரியா வாசல்லே நிக்கறேன்.வாங்க..செசில்
> >தெருவிலேருந்து பக்கம் தான்.."
> >
> >"எப்படி உங்களை அடையாளம் காணறது"
> >
> >"கண்ணாடி போட்டிருப்பேன்.. வெள்ளைச் சட்டை"
> >
> >"நானும்தான்"
> >
> >அப்புறம் என் அடையாளத்தை இன்னும் விலாவாரியாகச் சொன்னேன் -
> "பாம்புப்
> >பிடாரன், குருவிக்காரன் கூடை வச்சிருக்கற மாதிரி, லெதர் பையிலே
> மடிக்
> >கம்ப்யூட்டரைக் கட்டித் தோள்லே தொங்கப் போட்டிருப்பேன்.."
> >
> >"வாங்க முருகன்" பழனி சரியாக அடையாளம் கண்டு விட்டார்.
> >
> >நாடாளுமன்றத்தைச் சுற்றிக் காட்டுகிறார். சக அதிகாரிகளுக்கு,
> செக்ரட்டரி
> >ஜெனரலுக்கு எல்லாம் என்னை அறிமுகப் படுத்துகிறார்.
> >
> >சகோதரி கமலாதேவி தொலைபேசியில். கமலா சேச்சி குரலில்
> >வாத்சல்யம் பொங்குகிறது. மலையாளத்தில் உரையாடல். கதை, கவிதை,
> >தமிழ், மலையாள இலக்கியம் குறித்து. பழனியும் மலையாளத்தில்
> வெளுத்துக்
> >கட்டுகிறார். "அடுத்த தடவை கொஞ்சம் பொறுமையா, இப்படிக் கால்லே
> >வென்னீரைக் கொட்டிட்டு வர்றது போல இல்லாம வரணும்" சேச்சியின்
> >அன்பழைப்புக்கு சரியென்கிறேன்.
> >
> >பழனி சுற்றிக் காட்டிய ஹை-டெக் சிங்கை நாடாளுமன்றத்தை வியப்போடு
> >பார்க்கிறேன். இண்டர்நெட் -ரெடி சாக்கெட் பொருத்தப் பட்ட
> உறுப்பினர்
> >இருக்கைகள், காமிராக்கள், மொழிபெயர்ப்பாளர் அறைகள், மேல்
> தளத்தில்
> >பார்வையாளர்கள் சத்தம் போடாமல் விவாதிக்கக் கண்ணாடித் தடுப்புக்குப்
> >பின் இருப்பிடம்..
> >
> >உறுப்பினர்கள் உட்காரும் வசதியான சிவப்பு நாற்காலிகளை அசைத்துப்
> >பார்க்கிறேன். ஊஹூம்..என்னமோ இருக்கு போங்க.. ஏதாவது குறையா
> என்று
> >விசாரிக்கிறார் பழனி.
> >
> >"ஒரு சண்டை சச்சரவுன்னு வந்தா நாற்காலியைத் தூக்கி அடிக்க, மைக்கைப்
> >பிடுங்கி தலையிலே போட, செருப்பு வீச வாகா வசதி செஞ்சு
> கொடுக்காம
> >என்ன மன்றம்.. ..எங்க ஊருக்கு வந்து பாருங்க..எப்படி இருக்கணும்னு
> >தெரியும்.."
> >
> >பழனியிடம் பிரியாவிடை வாங்கிக் கொண்டு, ஓட்டல் அறையை மாலை
> ஆறு
> >மணிக்குக் காலி செய்து விட்டு சாங்கி ஏர்போர்ட். விமானத்தில்
> கதவருகில்
> >'தமிழ் முரசு' பிரதி ஒன்றை எடுத்துக் கொண்டு உள்ளே போகிறேன்.
> >
> >"கார் மோதி நடையர் மரணம்" (தமிழ்நாட்டில் பாதசாரி,
> ரங்காச்சாரி,
> >கோவிந்தாச்சாரி என்று படித்துத் தான் வழக்கம்)..மனைவியிடம்
> ஜீவனாம்சம்
> >கேட்டு வழக்குப் போட்டு வென்ற சிங்கைத் தமிழ்க்
> >கணவன்..தொலைக்காட்சியில் இரவு எட்டு மணிக்கு 'மரபுக் கவிதைகள்'
> என்று
> >கொட்டை எழுத்தில் போட்ட நிகழ்ச்சி நிரல்.. புதுக் கவிதைக்கு நோ
> >அட்மிஷனா?
> >
> >ஒரு கிளாஸ் பியரோடு கடியாரத்தைப் பார்க்க எட்டே முக்கால்..விமானம்
> >நடுவானில் அமைதியாகப் பறக்கிறது...
> >
> >அன்புடன்,
> >இரா.முருகன்
> >
> >__________________________________________________
> >Do You Yahoo!?
> >Make a great connection at Yahoo! Personals.
> >http://personals.yahoo.com
> >
> >
> >To Post a message, send it to:
> tamil-ulagam@eGroups.com
> >
> >To Unsubscribe, send a blank message to:
> >tamil-ulagam-unsubscribe@eGroups.com
> >
> >Your use of Yahoo! Groups is subject to
> http://docs.yahoo.com/info/terms/
> >
> >
>
>
>
_________________________________________________________________
> Get your FREE download of MSN Explorer at
> http://explorer.msn.com/intl.asp
>
>
> ------------------------ Yahoo! Groups Sponsor
> ---------------------~-->
> FREE COLLEGE MONEY
>
=== message truncated ===


__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com