From eramurug@... Sat Oct 20 04:07:59 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 20 Oct 2001 11:07:59 -0000
Received: (qmail 27432 invoked from network); 20 Oct 2001 11:07:59 -0000
Received: from unknown (10.1.10.26) by 10.1.1.220 with QMQP; 20 Oct 2001 11:07:59 -0000
Received: from unknown (HELO web14806.mail.yahoo.com) (216.136.224.222) by mta1 with SMTP; 20 Oct 2001 11:07:59 -0000
Message-ID: <20011020110759.70813.qmail@...>
Received: from [210.214.128.189] by web14806.mail.yahoo.com via HTTP; Sat, 20 Oct 2001 04:07:59 PDT
Date: Sat, 20 Oct 2001 04:07:59 -0700 (PDT)
Subject: D.C.Kizhakkeemui
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <9qritr+djv9@eGroups.com>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 12596

சேட்டன்மார் தமிழர்களைப் புத்தகம் படிப்பதில் மட்டுமில்லாமல் விற்பதிலும்
முந்திக்கொண்டு விட்டார்கள் என்று தோன்றுகிறது.

amazon.com, barnesandnoble.com போன்ற வலைத்தளங்களுக்கு ஈடு
கொடுக்கக் கூடிய வகையில் மலையாள நூல்களை விளம்பரம் செய்து
(thumbnails, reviews, newsletters etc) விற்க கோட்டயம்
டி.சி.புக்ஸ் நடத்தும் வலைத்தளம் dcbooks.com. கிரடிட் கார்ட் மூலம்
வாங்க - digital certificate authentication கூடிய - வசதி
உண்டு.

நாலைந்து வருடம் முன் கலாகௌமுதியில் தொடராக வந்து படித்த
வி.கே.மாதவன் குட்டியின் "ஓர்மகளுடெ விருந்நு" (நினைவுகளின் விருந்து)
புத்தகமாகக் கிடைப்பதாகப் பார்த்து கடந்த ஞாயிறன்று வாங்க ஓர்டர்
கொடுத்தால், செவ்வாய்க்கிழமை புத்தகம் கையில்.

இப்போது சனிக்கிழமை மாலை, ஓய்வாகக் கையில் கோப்பையோடு (உள்ளூரில்
காப்பிதான்) புத்தகத்தைப் புரட்ட, நான் எதிர்பார்த்த படியே, நம்பூத்திரி
வரைந்த கோட்டுச் சித்திரங்களும் பத்திரிகையில் வந்த மாதிரியே உண்டு -
நம்ம கோபுலு போல அங்கே நம்பூத்திரி.

இன்று ராத்திரிக்குள் பாதிப்புத்தகமாவது முடிக்க வேண்டும்..

முன்னுரையில் மாதவன் குட்டி, மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன்
சுள்ளிக்காட்டின் கவிதை வரிகளை உதாரணம் காட்டுகிறார் -

"அறிஞ்ஞதில் பாதி பறயாதெ போயி
பறஞ்சதில் பாதி பதிராயும் போயி"

(அறிந்ததில் பாதி சொல்லப் படாமல் போனது
சொன்னதில் பாதி பதராகவும் போனது)

ஒவ்வொரு எழுத்தாளனுக்கு உள்ளும் இருக்கும் குமைச்சல் தான் இது - படைத்ததில்
திருப்தி ஏற்பட்டு அந்த சுகத்திலேயே இருந்து விடாமல் அடுத்துத் தொடர
இந்தத் திருப்தியின்மையே தூண்டுகோல்.

அன்புடன்,
இரா.முருகன்

__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com