From naga ganesan@... Sat Oct 20 09:53:13 2001
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 20 Oct 2001 16:53:12 -0000
Received: (qmail 68319 invoked from network); 20 Oct 2001 16:53:12 -0000
Received: from unknown (10.1.10.26) by l10.egroups.com with QMQP; 20 Oct 2001 16:53:12 -0000
Received: from unknown (HELO n32.groups.yahoo.com) (10.1.2.221) by mta1 with SMTP; 20 Oct 2001 16:53:12 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [10.1.4.66] by n32.groups.yahoo.com with NNFMP; 20 Oct 2001 16:53:11 -0000
Date: Sat, 20 Oct 2001 16:53:06 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: panju: word origin
Message-ID: <9qsa5i+3q7a@eGroups.com>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1987
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 216.88.65.153
From: naga ganesan@...
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 12619


பஞ்சு: சொல்லாராய்ச்சி
------------------------------

பஞ்சு என்ற சொல்லுக்குத் திரி, இiழை என்றபொருள்கள் உண்டு.
விதை நீக்கிய பருத்தியை பந்தாகச் செய்து திரி, நூல், iஇழை
போன்றன செய்யப்படும்.

பந்து என்ற சொல் பஞ்சு என்பதோடு நெருங்கிய தொடர்புடையது.
F. கிட்டெல் என்னும் பாதிரியாரின் கன்னடப் பேரகராதியைப்
பார்த்துக்கொந்திருந்தபோது கிடைத்தன:

கன்னடத்தில், 1) பஞ்சு = A torch (பந்தம் என்னும் தமிழ்ப்பதத்தை ஒப்பிடுக.)
2)பஞ்சிகெ = The ball or roll of cotton from
which the thread is spun. (தமிழின் பந்து என்பதுடன் ஒப்பிடுக).

தமிழில் பந்து -> பஞ்சு என்றாவதற்கு மேலும் சில சான்று
தரலாம். விந்தம் (விந்தியமலை) தமிழில் விஞ்சை என்று
வரும் (பெருங்கதை), ஸந்த்யா என்னும் வடசொல் ஸஞ்ஜெ
என்று கன்னடத்தில் ஆகும். iஇதுபோலவே பந்து -> பஞ்சு
என்றானதாகத் தெரிகிறது. பந்தி என்றால் இiழைபோல
வரிசையான அணி. பந்திப்பாய் = மிகக் குறுகலான,
ஆனால் மிக நீண்ட பாய்.

iஇந்த பந்து <-> பஞ்சு தொடர்பை வேறொரு சொல்மூலமும்
காணலாம்.
பஞ்சம் = வரட்சி, வறுமை. கன்னடத்தில் பஞ்ஜெ என்றால்
மலடி/வறடி. சமற்கிருதத்தில் வந்த்யா என்றால் மலடி.

பூமியைப் பெண்ணாக உருவகம் செய்தல் மரபு.
நிலமகள் அழுத காஞ்சி - புறம்; நிலம் என்னும் நல்லாள் - குறள்.
பஞ்சம் பூமி கொள்ளும்போது, "நிலமகள் மலடுபட்டாள்" என்றல்
பொருத்தமே. பஞ்சம், (வரட்சி), பஞ்ஜெ (மலடி) போன்ற சொற்கள்
*பந்து என்பதுடன் தொடர்புடையது என்று திருத்தமாகக் காட்டுவது
வடமொழிச் சொல்லாகிய வந்த்யா (இiது *பந்த்யா என்னும் திராவிடச் சொல்லிலிருந்து
வந்திருக்கவேண்டும்). வந்தி என்னும் வறுமைக் கிழவி
பிட்டு விற்றதை மதுரைத் திருவிளையாடல் பேசும்.
பந்திலிருந்து இஇiழைத்தெடுப்பது திரி, நூல்; கன்னடம்
துணிவெளுப்போர் திருமணங்களில் பிடிக்கும் பந்தத்தைக்
பஞ்சி என்றும், நூல்திரிக்கும் பந்தைப் பஞ்சிகெ என்றும்
சொல்வர்.

பஞ்சம்(< *பந்தம்) கொண்டு இiளைப்பதை வந்தி/பஞ்சை என்ற
சொற்கள் காட்டும். குழந்தையில்லாமல் iஇளைக்கும் தாய்
தான் பஞ்ஜெ (மலடி) என்பர் கன்னடியர்.

இபஞ்சு சொல் பற்றி உங்கள் கருத்தென்ன? அறிய ஆவல்.

அன்புடன்,
நா. கணேசன்