From kisna@... Mon Oct 22 16:09:13 2001
Return-Path: X-Sender: kisna@...
X-Apparently-To: agathiyar@egroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 22 Oct 2001 23:09:13 -0000
Received: (qmail 32692 invoked from network); 22 Oct 2001 23:09:12 -0000
Received: from unknown (10.1.10.26) by l10.egroups.com with QMQP; 22 Oct 2001 23:09:12 -0000
Received: from unknown (HELO seed.pacific.net.sg) (203.120.90.77) by mta1 with SMTP; 22 Oct 2001 23:09:12 -0000
Received: from smtp1.pacific.net.sg (smtp1.pacific.net.sg [203.120.90.70]) by seed.pacific.net.sg with ESMTP id f9MN99o06922; Tue, 23 Oct 2001 07:09:10 +0800 (SGT)
Received: from kisna (mcns147.docsis30.singa.pore.net [202.156.30.147]) by smtp1.pacific.net.sg with SMTP id f9MN99i16514; Tue, 23 Oct 2001 07:09:09 +0800
Message-Id: <3.0.6.32.20011023071214.008b0800@...>
X-Sender: kisna/pacific.net.sg@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Tue, 23 Oct 2001 07:12:14 +0800
To: tamil-ulagam@yahoogroups.com, ''agathiyar@egroups.com'', Subject: Tamil Vaaza # 6
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: krishnan/ கிருஷ்ணா X-Yahoo-Message-Num: 12631
இந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரர்களுள் ஒருவர் கப்பலோட்டிய தமிழன்
என விளங்கும் வ. உ. சிதம்பரம்பிள்ளை. நெல்லை மாவட்டத்தில் தோன்றியவர்.
நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டு சிறை சென்று செக்கிழுத்தவர். சொத்துக்களை
இழந்து நலிற்றவர். சுப்ரமணி பாரதியார், சிவா போன்றவர்களின் அன்பைப்
பெற்றவர். செக்கிழுத்த செம்மல், நாட்டுமுன்னேற்றத்திற்கு மட்டுமின்றி இலக்கிய
இலக்கண வளர்ச்சிக்காகவும் அரும் பாடுபட்டவர். சிறந்த பதிப்பாசிரியர்.
திருக்குறள் மணக்குடவருரை, தொல் - இளம் பூரணர் உரை முதலியற்றைப்
பதிப்பித்துதோடு மேலை நாட்டுத் தத்துவப் பேரறிஞராய் விளங்கிய ஜேமஸ்
ஆலென் எழுதிய மனம், தன்னம்பிக்கை போன்ற நூல்களுக்குத் சிறையிலிருந்த
போது தமிழாக்கம் செய்தவர்.
[உதயமூர்த்தியின் தன்னம்பிக்கை நூற்களில் வ உ சி யின் தாக்கம் மிகுதியாக காணலாம்]
'' சீரெல்லாம் நிறைந்து விளங்கும் செந்தமிழ் நூல்களில் சிறந்தது 'திருக்குறள்' என்று
வழங்கும் வள்ளுவர் நூல். தருமர், மணக்குடடவர், தாமத்தர், நச்சர், பரிமேலழகர்,
பருதி, திருமலையர், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர், வள்ளுவர் நூற்க்கு உரை
எழுதினோர்.அப்பதின்மர் உரைகளில் தற்காலம் பரிமேலழகருரை ஒன்றே இருந்து
வருகிறது. அவ்வுரைச் சில வருடங்களுக்கு முன்னர் யான் படிக்கத் தொடங்கினேன்.
அப்பொழுது மற்றைய ஒன்பதின்மர் உரைகளையும் பார்க்க வேண்டும் எனும் அவா
உண்டாயிற்று. அது முதல் தமிழ் நூல்கள் இருக்கும் இடங்களில் அவற்றை தேடவும்
தேடுவிக்கவும் பயனாக எனக்குக் கிடைத்தவற்றில் மணக்குடவருரைப் பிரதி ஒன்று ''
( - மணக்குவருரை -)
கிருஷ்ணன்,
சிங்கை.
For your Bookmark.
உங்கள் வலைப்பக்கத்தில் இணைக்க வேண்டிய முகவரி:-
http://www.geocities.com/singaikrish