From nswaminathan@... Mon Oct 22 22:35:25 2001
Return-Path:
X-Sender: nswaminathan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 23 Oct 2001 05:35:25 -0000
Received: (qmail 65354 invoked from network); 23 Oct 2001 05:35:25 -0000
Received: from unknown (10.1.10.26) by l9.egroups.com with QMQP; 23 Oct 2001 05:35:25 -0000
Received: from unknown (HELO orngca-mls01.socal.rr.com) (66.75.160.16) by mta1 with SMTP; 23 Oct 2001 05:35:25 -0000
Received: from default (sc-66-27-189-161.socal.rr.com [66.27.189.161]) by orngca-mls01.socal.rr.com (8.11.4/8.11.3) with SMTP id f9N5Ybd25524; Mon, 22 Oct 2001 22:34:37 -0700 (PDT)
Message-ID: <001901c15b83$57cbc520$a1bd1b42@...>
To:
Cc: ,
Subject: Interview
Date: Mon, 22 Oct 2001 22:26:54 -0700
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
From: "Narayan Swaminathan"
X-Yahoo-Message-Num: 12637

நேர்காணல்
=============

போட்டி போட்டுக் கொண்டு அவரை நேர்காணல்
இவரை நேர்காணல்னு செய்தி வரது.

கனைச்சு, இருமி, குதிச்சு பாத்தாச்சு.

ஆனால், ஒருத்தனும் நம்மை கண்டுக்கரதா இல்ல.

நம்மை நாமேதான் நேர்காணல் செய்யறதுநல்லதுன்னு தோணிச்சு.
அதுனால கேள்வியும் நானே, பதிலும் நானே.

கேள்வி: நீங்க எந்த வயசுல எழுத ஆரம்பிச்சீங்க?

பதில்: அப்ப எனக்கு எண்ணத்தெரியாதுங்க. மூணு வயசு இருக்கும்னு என் அம்மா
சொன்னாங்க.

கே: உங்களுடைய ஆரம்பகால எழுத்துக்கள் இப்ப கிடைக்குமா?

ப: கிடைக்காதுங்க. நான் எழுதின சுவத்தை பல தடவை வெள்ளை அடிச்சிட்டாங்க.

கே: பின் நவீனத்வம், பொதுவியல்வாதம், தலித்தியல்வாதம் - இது பற்றி உங்க கருத்தென்ன?

ப: இந்த வாதத்துகெல்லாம் இன்னும் மருந்து கண்டுபிடிக்கல.

கே: வணிகப்பத்திரிகைகளில் எழுதுவதால் உங்களுக்கு வருமானம்
கிடைக்கிறதா?

ப: ஆம், வணிகப்பத்திரிகைகளுக்கு எழுதி அது பிரசுரமாகாததால்
திரும்பி வர எழுத்தை கடையில் மொத்தமா எடைக்கு போட்டு சம்பாதிக்கிறேன்.

கே: ஏன் வணிகப் பத்திரிக்கைகள் உங்கள் எழுத்தை புறக்கணிக்கின்றன?

ப: தெரியவில்லை. கவிதை அனுப்பினால் உங்கள் கட்டுரை மிகவும் சிறியது
என்கிறார்கள். கட்டுரை அனுப்பினால் உங்கள் கவிதை நீளமானது என்கிறார்கள்.
இனிமேல் எழுதாமல் இருப்பதாக வாக்களித்தால் சன்மானம் உண்டு என்கிறார்கள்.

கே: வணிகப்பத்திரிக்கைகளில் உங்கள்பெயர் வர எளிதான வழியே இல்லையோ?

ப: இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று நானே ஒரு வணிகப் பத்திரிக்கை தொடங்குவது.
மற்றொன்று வணிகப் பத்திரிக்கை ஆசிரியர்களை நேரில் போய் பட்டப்பகலில் சிரச்சேதம் செய்தல். அப்பொழுது போட்டோவுடன் என் பெயர் பத்திரிக்கையில் வர மிகுந்த வாய்ப்பு உள்ளது.

கே: ஆதர்சமான எழுத்து எப்படி அமையணும்னு நெனக்கிறீங்க ?

ப: தலையெழுத்து மாதிரி இல்லாம கையெழுத்து படிக்க புரியும்படியா இருக்கணும்.

கே: உங்கள் எழுத்து இந்திய மொழி இலக்கியத்துக்கு ஒரு எடுத்துக்காட்டுன்னு
சொல்லலாமா?

ப: இந்தியமொழிகள் மட்டுமல்ல ஆங்கில, பிரெஞ்சு, ருசிய, செர்மானிய, செக்கோஸ்லாவிய மொழி இலக்கியத்துக்கும் கூடன்னு சொல்லலாம். ஆனால் அரேபிய, உருது இலக்கிய
எழுத்திலிருந்து வேறுபடும்.

கே: கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க.

ப: இதில என்னய்யா விளக்கம் ? என் எழுத்து எப்பவுமே இடதுலேருந்து வலதுபக்கம்
தானே இருக்கும். வலதுலேருந்து இடதா எழுதறதில்ல.

கே: உங்கள் எழுத்துகளில் உட்பொதிந்த பொருள் ஏதேனும் உண்டா?

ப: உண்டு.

கே: அது என்ன? சொல்லுங்கள்.

ப: அது எப்படி எனக்கு தெரியும் ? எதை உள்ள வெச்சு பொட்டலம் கட்ட என் எழுத்து
பயன்படுதுன்னு தெரியாது. பக்கோடாவாஇருக்கலாம், சுண்டலா இருக்கலாம்,
பயத்தம் பருப்பாகவும் இருக்கலாம்.

கே: உங்கள் எழுத்து அதிக மக்களைச் சென்றடைந்து சமூகத்துக்கு
அதிக பாதிப்பு ஏற்படுத்தலேன்னு ஒரு கருத்து இருக்கு. என்ன செய்வதாக உத்தேசம்?

ப: என் எழுத்தால் மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படாதது உண்மையே. ஏதாவது கிருமிகள் தடவி அஞ்சல்ல அனுப்புவது பத்தி யோசித்து வருகிறேன்.

கே: சக எழுத்தாளர்களுக்கு நீங்க சொல்ற அறிவுரை என்ன? அவர்களுக்கும்
ஒரு நேர்காணல் வருவதற்கு என்ன செய்யணூம்?

ப: தயவு செய்து சுவத்தை பார்த்துகொண்டு திரும்பியோ பக்கவாட்டில் பார்த்தோ உட்காராதீர்கள். அப்போது உங்களை நேர்காணல் இயலாது அல்லவா?


சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்