From sadayan50@... Tue Oct 23 23:23:08 2001
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 24 Oct 2001 06:23:07 -0000
Received: (qmail 30888 invoked from network); 24 Oct 2001 06:23:07 -0000
Received: from unknown (10.1.10.27) by 10.1.1.220 with QMQP; 24 Oct 2001 06:23:07 -0000
Received: from unknown (HELO web13802.mail.yahoo.com) (216.136.175.12) by mta2 with SMTP; 24 Oct 2001 06:23:07 -0000
Message-ID: <20011024062307.6440.qmail@...>
Received: from [194.170.1.130] by web13802.mail.yahoo.com via HTTP; Tue, 23 Oct 2001 23:23:07 PDT
Date: Tue, 23 Oct 2001 23:23:07 -0700 (PDT)
Subject: Re: Mega-city - Re: Splendou of Vijayanagar - RE: [agathiyar] Navaraaththiri/Dasaraa - chapter 8
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <20011024001152.76354.qmail@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 12654


--- "era.murugan achwin" wrote:
> அன்புள்ள ஜேபி-சான்,

>
> பட்டீச்சரம் எனக்கு மறக்க முடியாத ஊர். தமிழ்த் தாத்தாவின் 'என்
> சரித்திரம்' என்று சொன்னாலே, பட்டீச்சுரமும் அங்கே ஆறுமுகம் பிள்ளையும்
> அவர் தமிழ்த்தாத்தாவின் எழுத்தாணியை ஒளித்து வைத்துக் கொண்டதும்,
> காலைக்கடன் முடிக்கப் போவதும், திரும்பி வரும்போது உ.வே.சா தன்னைப்
> பற்றி ஒரு வெண்பா பாடியிருக்க வேண்டும் என்றும் அப்படிச் செய்தால்
> எழுத்தாணியைத் திருப்பித் தருவதாகச் சொல்வதும், உ.வே.சா
> பதற்றத்தோடு
> "சீர் மருகு மாறு முகச் செம்மலே" என்று தொடங்குவதும், ஆசிரியர்
> மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை "அய்யய்யோ..அதைப் பதம்
> பிரித்தால் ஆறு முகமும் வரும்..மாறு முகமும் வருமே" என்று இன்னொரு
> செய்யுள்
> சொல்வதும்...
>
> தமிழ் பட்ட பாடு - கழிவறைக் கதவு திறப்பதை எதிர்பார்த்து இரண்டு
> புலவர்
> பெருமக்களோடு தமிழும் நின்றிருக்கிறது..
>
> என் ராத்திரி வண்டி குறுநாவலில் நிறைய எழுதியுள்ளேன்..
>
> அன்புடன்,
> இரா.மு

அன்பின் திரு. முருகன்,

இதே மாதிரி மற்றொன்று இது தமிழிணையத்தில் இடுகையாக வந்தது.
தற்போது அகத்தியர்களுக்காக

செய்குத் தம்பி பாவலரின் சொல்லாட்சி
*******************************

பாவலர் சொல்லாற்றல் மிக்கவர் பல சொற்களில் பிறர் கூறும் கருத்துகளை ஒரு
சில சொற்களில் அமைத்துப் பாடுவதும் பேசுவதும் பாவலருக்கு கை வந்த
கலையாகும். சிலேடையாகக் கருத்துக்களை கூறுவதிலும் சொற்களை பலவாறு
பிரித்துப் பொரளை மாற்றிக் கூறுவதிலும் வல்வவர். அவர் சொற்களை
அசைகளை மாற்றி மாற்றிப் பிரித்து விளையாடுவது சொற்சிலம்பம் ஆடுவது
போலிருக்கும் சொற்களை எடுத்தும் படுத்தும் நலிந்தும் மெலிந்தும்
இடத்திற்கேற்றவகையில் பயன்படுத்துவதில் தனித்திறமை வாய்ந்தவர்.

ஒன்று தெய்வம் ஒன்று மதம் ஒன்று மக்கள் என்பது பாவலரின் தாரக மந்திரம்.
எனவேதான் பிற மதங்களைச் சார்ந்த நண்பர்கள் கடவுள் வாழ்த்துப் பாடல்களைப்
பாட விரும்பிக் கேட்பின் சற்றும் தயக்கம் காட்டாது பாடிக் காட்டுவார்.
ஒருபொழுது சிலேடையாகக் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடிக் கேட்டபொழுது
"சிரமாறுடையான்" எனும் அரிய பாடலைப் பாடி விளக்கம் தந்தார்.

சிரமாறுடையான் செழுமா வடியைத்
திரமா நினைவார் சிரமே பணிவார்

எனும் பாடலில் இடம் பெற்றுள்ள முதல் சொல்லான சிரமாறுடையான் என்பதை
ஐந்து முறைகளில் பிரித்து ஜந்து கடவுள்களை வாழ்த்திக் காட்டுவார்.

சிரம் ஆறுடையான் - சிரத்தில் கங்கையாற்றைக் கொண்ட சிவபெருமான்
சிரம் ஆறு உடையான் - ஆறு தலைகளையுடைய முருகன்
சிரம்மாறுடையான் - மாறுபட்ட சிரத்தையுடைய கணபதி
சிரம் ஆறுடையான் - காவிரி ஆற்றின் நடுவில் சிரத்தை வைத்துள்ள திருமால்
சிரம் ஆறு உடையான் - தலையாய நல வழிகளை உலகுய்யக் காட்டும் அல்லாஹ்

போதுமா இல்லை "அஞ்சிலம்பதி லொன்றறி யாதவன்" என்ற பாடலை
பிரித்துப் பாடியதையும் தரவா ?



=====
அன்புடன்

சாபு

__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com