From venkat@... Wed Oct 24 12:30:20 2001
Return-Path: X-Sender: venkat@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 24 Oct 2001 19:30:20 -0000
Received: (qmail 32092 invoked from network); 24 Oct 2001 19:30:19 -0000
Received: from unknown (10.1.10.26) by l9.egroups.com with QMQP; 24 Oct 2001 19:30:19 -0000
Received: from unknown (HELO n12.groups.yahoo.com) (10.1.10.51) by mta1 with SMTP; 24 Oct 2001 19:30:18 -0000
X-eGroups-Return: venkat@...
Received: from [10.1.2.240] by n12.groups.yahoo.com with NNFMP; 24 Oct 2001 19:30:18 -0000
Date: Wed, 24 Oct 2001 19:30:14 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: jeyamohan@toronto
Message-ID: <9r74s6+o7ps@eGroups.com>
In-Reply-To: <20011024172725.9747.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2299
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 128.100.148.40
From: venkat@...
X-Yahoo-Profile: vvenkataramanan
X-Yahoo-Message-Num: 12660
அன்புள்ள முருகன்,
>பாஷன் சார்ந்த இலக்கியவாதிகள் என்றால் யார்? அவர்கள் பாஷன் தொலைத்துக்
கர்னாடகமாகிக் கடைத்தேற தொரந்தோ போய் ஐம்பது டாலர் கட்டண இலக்கியக் கூட்டத்தி
ல் சொற்பொழிவதும் மூன்று மணிநேரம் நேர்காணலுக்காக அமர்வதும் தவிர வேறு ஏதும்
எளிய வழிவகை உண்டா? தெரிந்து கொள்ள விருப்பம்.
பாஷன் இலக்கியவாதிகளைக் குறைந்த செலவிலும், இதுபோன்ற குளிர் பிரதேச சிரமங்களி
ன்றியும் கர்நாடகமாக்குவதில் உங்களுக்குள்ள ஆர்வத்தை தெரிந்துகொள்வதில் மகி
ழ்ச்சி. :-)
பாஷன் சார்ந்த இலக்கிய வாதிகளைப் பற்றி என்னைவிட உங்களுக்கு நன்றாகத் தெரி
யும் என நம்புகின்றேன். அவர்களிடமிருந்து வசிப்பாலும் வாசிப்பாலும் மிகவும் விலகியி
ருக்கும் எனக்கு அவர்களைப் பற்றிய வியாக்கியானத்தில் உங்களுடன்
ஈடுபட அருகதையில்லை என்பதையும் நன்குணர்வேன்.
பதினைந்து கிடுகிடுவென்று ஐம்பதான வகை எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு
நன்றாகத் தெரிந்தது ஒன்று; சொற்பொழியப்பட்ட அந்த இலக்கியக்கூட்டத்தில்
கலந்துகொள்ள அரையணா கட்டணமும் கிடையாது. அடியேன் அந்த நிகழ்வில்
கலந்துகொள்ளக் காசேதும் தரவில்லை. அது மதிய உணவுக்கானது. உண்ட சோறு பதி
னைந்து கனேடியன்களுக்கு மதிப்பானதா என்பது பற்றி வியாக்கியானம் செய்யவும்
என்னால் முடியாது - முன்னரே சொன்னதுபோல் அடியேனுக்கு அன்று மிளகு ரசமும்
சோறும் - வீட்டில்தான்.
அதுபோக, இலக்கியம் பேச யார் வந்தாலும் எங்களால் ஆன உணவும், மூன்றுமனி நேரம்
(அதற்கும் மேற்பட்ட) காதுகளையும் தர நான் தயார். நல்வரவு.
பாஷனைத் தொலைத்தவர்கள் எல்லாம் கர்நாடகம்தான் என்றால் 99.5%
உலகப்பெண்கள் அர்மானியையும் கார்ட்டியரையும் இன்னபிற உடல்மறைக்காத மிலான்
சமாச்சாரங்களை அணிவதில்லை என்பதால்....
அதேபோல்தான் - மார்க்வெஸ், பொலிவார், சாத்தர், பூக்கொ, ஈக்கோ இவர்களை வரி
த்துக்கொண்டு தங்கள் படைப்புகளில் அருப்புக்கோட்டையில் டாலியாக்களை மலரவி
டாதவர்களும் நாங்குநேரியில் பியானோவில் சோகி
க்காதவர்களும் அதே அளவுகோல்களில் நம் குடும்ப உறவுகளைச் சந்தேகி
க்காதவர்களும், அடுத்த நொடியில் கர்நாடகமாவதில்லை என்பது தாழ்மையான அபிப்பி
ராயம். கர்நாடகங்களையும், பாஷன்-வா(ந்)திகளையும் விடுத்து பலர் (இங்கும் அங்கும்) இ
ருக்கிறார்கள் என்பதும் தாழ்மை....
(எல்லாவிதமான) சொற்பொழிவுகளுக்குக் காதுகளையும், விருந்தினர்களுக்குக்
கதவுகளையும் திறந்து வைத்துக்கொண்டு நானும் இங்கிருக்கும் நண்பர்களும் காத்தி
ருப்போம். (உணவுக்கு வயிறும், பணப்பையும் திறக்குமா எனத் தெரியாது).