From sadayan50@... Wed Oct 24 12:39:01 2001
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 24 Oct 2001 19:39:01 -0000
Received: (qmail 7327 invoked from network); 24 Oct 2001 19:39:01 -0000
Received: from unknown (10.1.10.27) by 10.1.1.223 with QMQP; 24 Oct 2001 19:39:01 -0000
Received: from unknown (HELO web13808.mail.yahoo.com) (216.136.175.18) by mta2 with SMTP; 24 Oct 2001 19:39:00 -0000
Message-ID: <20011024193857.98605.qmail@...>
Received: from [194.170.1.69] by web13808.mail.yahoo.com via HTTP; Wed, 24 Oct 2001 12:38:57 PDT
Date: Wed, 24 Oct 2001 12:38:57 -0700 (PDT)
Subject: Re: Mega-city - Re: Splendou of Vijayanagar - RE: [agathiyar] Navaraaththiri/Dasaraa - chapter 8
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20011024222253.007460e8@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 12661


--- jaybee wrote:

> தங்கந்தங்கமாக.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>

சீதையைத் தேடி உதவுவதாக வாக்களித்த சுக்ரீவன் வராததை அறிந்த இராமன்
சுக்ரீவனுக்கு கடமையை உணர்த்துமாறு கட்டளையிட்டுக் கூறிய பாடலை பாவலர்
பலப்பல முறைகளில் விளக்குவார்.

"அஞ்சிலம்பதி லொன்றறி யாதவன்" எனும் பாடலடியை பின்வருமாறு பகுத்துச்
சொற்சிலம்பம் ஆடுவார்.

அஞ்சில் அம்பதில் ஒன்றறியாதவன் - ஐந்து வயதிலாயினும் ஐம்பது
வயதிலாயினும் ஒன்றையும் அறியாதவன்
அம் சிலம்பதில் ஒன்றறியாதவன் - அழகிய கிட்கிந்தை மலையில்
வீற்றிருந்தும் அதில் ஒரு பொருளும் அறியாதவன்
அம் சில் அம்பு அதில் ஒன்றறியாதவன் - என்னிடம் உள்ள சில அம்புகளில்
ஒன்றின் ஆற்றலைக் கூட இன்னும் அறியாதவன்
அஞ்ச இல் அம்பது இல் ஒன்றறியாதவன் - இவனைக் கொல்வதற்கு ஐந்தும்
வேண்டியதில்லை, ஐம்பதும் வேண்டியதில்லை, ஓர் அம்பு போதும் இதை
அறியாதவன்.
அஞ்சிலம் பதில் ஒன்றறியாதவன் - இவனைக் கொல்வதற்கு பயப்படவில்லை
பதில் எதுவும்
அஞ்சு இல் அம்பு அதில் ஒன்று அறியாதவன் - இலக்குமனா நீ சுக்ரீவனை
நோக்கி நீ இராமன் அம்புக்கு அஞ்சு, இல்லாவிடின் அவன் அம்பில் உடலை
ஒன்றச் செய்...

அஞ்சிலம்பதில் அஞ்சில் அம்பதுஇல்
அம் சிலம்பதில்
அஞ்சிலம் பதில்
அஞ்சில் அம்பு அதில்
அஞ்சுஇல் அம்பு அதில்
அஞ்சுஇல் அம்பதுஇல்

5+50+1 = 56 ஐம்பத்தாறவது ஆண்டின் பெயர் துந்துபி. துந்துபி என்ற
அசுரனைக் கொன்ற வாலியைக் கொன்றவன் இராமன் என்றும் இச்சொல்லுக்கு
விளக்கம் கூறுவார் பாவலர்.

ஒருமுறை ஆறு ஏழு புலவர்கள் அமர்ந்து இலக்கியச் சுவையை நுகர்ந்து
கொண்டிருந்தனர்.பாவலர் "காக்காய்க்கறி சமைத்து கருவாடு மென்றுன்பர் சைவர்"
என்றார். அனைவரும் அதிர்ச்சியுற்றனர் உடனே பாவலர்

காக்காய் - கால்+காய் - ஒரு காயின் நாலில் ஒரு பங்கு
கறி சமைத்து - உணவாக்கி
கருவாடுமென்று - கரு+வாடுமென்று - பசியால் வயிறு வாடும் என்று
உண்பர் சைவர் - சைவர் உண்பார்கள்
என்றார் இப்படி நிறைய எழுதிக் கொண்டே போகலாம்

=====
அன்புடன்

சாபு

__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com