From eramurug@... Wed Oct 24 17:32:57 2001
Return-Path: X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 25 Oct 2001 00:32:56 -0000
Received: (qmail 33819 invoked from network); 25 Oct 2001 00:32:56 -0000
Received: from unknown (10.1.10.26) by l10.egroups.com with QMQP; 25 Oct 2001 00:32:56 -0000
Received: from unknown (HELO web14807.mail.yahoo.com) (216.136.224.223) by mta1 with SMTP; 25 Oct 2001 00:32:55 -0000
Message-ID: <20011025003255.69684.qmail@...>
Received: from [210.214.131.154] by web14807.mail.yahoo.com via HTTP; Wed, 24 Oct 2001 17:32:55 PDT
Date: Wed, 24 Oct 2001 17:32:55 -0700 (PDT)
Subject: Re: [agathiyar] Re: jeyamohan@toronto
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <9r74s6+o7ps@eGroups.com>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin" X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 12664
அன்புள்ள வெங்கட்,
>
> அதேபோல்தான் - மார்க்வெஸ், பொலிவார், சாத்தர், பூக்கொ, ஈக்கோ
> இவர்களை வரி
> த்துக்கொண்டு தங்கள் படைப்புகளில் அருப்புக்கோட்டையில் டாலியாக்களை
> மலரவி
> டாதவர்களும் நாங்குநேரியில் பியானோவில் சோகி
> க்காதவர்களும் அதே அளவுகோல்களில் நம் குடும்ப உறவுகளைச் சந்தேகி
> க்காதவர்களும், அடுத்த நொடியில் கர்நாடகமாவதில்லை என்பது தாழ்மையான
> அபிப்பி
> ராயம்.
இந்த 'அருப்புக்கோட்டையில் டாலியாவை மலர விடுவது' நண்பர்
ஜெயமோகனின் காப்பிரைட் வாக்கியமாச்சே.. எஸ்.ராமகிருஷ்ணனை அவர்
இப்படிச் சொன்னபோது நான் எழுதியது " மேஜிக்கல் ரியலிசப் புனைவில்
அருப்புக்கோட்டை வரலாம்..டாஹ்லியாவும் வரலாம்..ஆனால் அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டையாகவோ டாலியா டாலியாவாகவோ இருக்காது" எஸ்.ரா
எழுதினாலும், தமிழவன் எழுதினாலும், ஜெ.மோ எழுதினாலும், இரா.முருகன்
எழுதினாலும், கோணங்கி, குடுகுடுப்பையன் என்று யார் எழுதினாலும் இது
பொருந்தும்.
"புத்த மதம் பற்றித் தேர்ச்சி இல்லாமல் சும்மா பிக்கு, பிக்குணி என்று
எடுத்து விடுகிறார்" என்று எஸ்.ரா-வின் இன்னொரு கதைக்கு ஜெ.மோ
விமர்சனம் செய்திருந்தார். உங்கள் குளிர்ப் பிரதேசத்தில் அதை மறந்து
விட்டாரா அல்லது நினைவாக எடுத்துச் சொன்னாரா என்று தெரியாது.
ராமகிருஷ்ணன் 'உபபாண்டவம்" எழுத ஆரம்பித்தபோது அவரை
எச்சரித்தவர்களில் அடியேனும் ஒருவன் - "ஜெயமோகனிடம் இருந்து
சர்ட்டிபிகேட் வாங்கிக் கொண்டு அப்புறம் எழுதுங்கள்"
ஜெயமோகனும் எஸ்.ரா போல், வெங்கட் போல, தனிப்பட்ட முறையில் எனக்கு
நல்ல நண்பர் தான் என்பதை இங்கே சொல்லி விடுகிறேன்..
அன்புடன்,
இரா.முருகன்
__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com