From arull@... Wed Oct 24 19:09:17 2001
Return-Path:
X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 25 Oct 2001 02:09:17 -0000
Received: (qmail 68927 invoked from network); 25 Oct 2001 02:09:16 -0000
Received: from unknown (10.1.10.27) by l7.egroups.com with QMQP; 25 Oct 2001 02:09:16 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta2 with SMTP; 25 Oct 2001 02:09:16 -0000
Received: from tm.net.my (sja-179-143.tm.net.my [202.188.179.143]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GLQ00155OFUBN@...> for agathiyar@yahoogroups.com; Thu, 25 Oct 2001 10:04:43 +0800 (SGT)
Date: Thu, 25 Oct 2001 10:08:35 +0800
Subject: சரஸ்வதி புகழ் - பாரதியார்
To: "agathiyar@yahoogroups.com"
Message-id: <3BD77423.D29764E4@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார்
X-Yahoo-Message-Num: 12666

திருச்சிற்றம்பலம்

அகத்தியர்களுக்கு வணக்கம்.

இன்றைய மகா சரஸ்வதியின் பூஜையை
முன்னிட்டு, மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
பாடிய சரஸ்வதி தேவியின் புகழ்.

வெள்ளைத் தாமரைப் பூவி லிருப்பாள்
வீணை செய்யும் ஒலியி லிருப்பாள்
கொள்ளை யின்பங் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்
உள்ளதாம் பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தி னுண்ணிண் றொளிர்வாள்
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொரு ளாவாள்.(வெள்ளைத்)

மாதர் தீங்குரற் பாட்டி லிருப்பாள்
மக்கள் பேசும் மழலையி லுள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியி னாவை யிருப்பிடங் கொண்டாள்
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈத னைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள். (வெள்ளைத்)

வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
வாழு மாந்தர் குலதெய்வ மாவாள்
வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்
வித்தை யோர்ந்திடு சிற்பியர் தச்சர்
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்
வீர மன்னர்பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மீதறி வாகியதெய்வம்.(வெள்ளைத்)

தெய்வம் யாவும் உணர்ந்திடுந் தெய்வம்
தீமை காட்டி விலக்கிடுந் தெய்வம்
உய்வ மென்ற கருத்துடை யோர்கள்
உயிரி னுக்குயி ராகிய தெய்வம்
செய்வ மென்றொரு செய்கை யெடுப்பார்
செம்மை நாடிப் பணிந்திடுந் தெய்வம்
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்
கவிஞர் தெய்வம் கடவுளர் தெய்வம்.(வெள்ளைத்)

திருச்சிற்றம்பலம்,
ஓதுவார்.