From eramurug@... Thu Oct 25 05:31:41 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 25 Oct 2001 12:31:41 -0000
Received: (qmail 50379 invoked from network); 25 Oct 2001 12:31:40 -0000
Received: from unknown (10.1.10.142) by l10.egroups.com with QMQP; 25 Oct 2001 12:31:40 -0000
Received: from unknown (HELO web14805.mail.yahoo.com) (216.136.224.221) by mta3 with SMTP; 25 Oct 2001 12:31:40 -0000
Message-ID: <20011025123138.34966.qmail@...>
Received: from [210.214.128.238] by web14805.mail.yahoo.com via HTTP; Thu, 25 Oct 2001 05:31:38 PDT
Date: Thu, 25 Oct 2001 05:31:38 -0700 (PDT)
Subject: nanganallUr kavignarkaLOdu..
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20011025163835.0074a880@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 12671

கொழுநன் தொழ எழுந்த, தொழுதெழுந்த யாரோ ராச்சாப்பாட்டுக்குப் பின்
சித்தி பார்க்கிற அவசரத்தில் பெய் என்று சொல்லி டிவியை சேனல் மாற்ற,
ராத்திரி முழுக்க நசநசவென்று பெய்த மழை.

அடுக்கு மாடிக் கட்டிடங்களும் கூட கோபுரங்களுமாக எழுந்து நிற்கும்
நங்கநல்லூரில் மழைத்தண்னீர் நிரம்பிய குண்டு குழி பள்ளத்துக்கு இடையே
கொஞ்சம் போல சாலையும் இருக்கிறது. முக்கி முனகி முன்னேறிய வண்டி
கோவிலுக்குப் பக்கத்தில் நிற்கிறது.

மூடியிருக்கும் கோவில். பக்கத்து ஆரிய வைத்தியசாலை வாசலில் வெள்ளைச்
சீலையும், கையில் சென்னையில் பழக்கமில்லாத பனையோலைப் பெட்டியுமாக
வயதான பெண். சேச்சியா, ஆச்சியா என்று தெரியவில்லை.

"இது கோவில்தான்..குருவாயூரப்பன் கோயில்"

எண்டெ குருவாயூரப்பா..ஹரி ஆஞ்சனேயர் கோவிலுக்குப் பக்கம் இல்லையா அவர்
வீடு இருப்பதாகச் சொல்லியிருந்தார்?

"வண்டியை ரிவர்ஸ் எடுத்து லெப்ட்லே போய் அடுத்த லெப்ட்லே திரும்புங்க.."

பின்வாங்கி, தீவிர இடதுசாரியாக முன்னேறி இலக்கை அடைய, கணினி
முன்னர் கவிஞர். கம்ப்யூட்டரில் ஏதோ வித்தியாசமான பளபள..

"சரஸ்வதி பூஜைக்கு புது கீபோர்ட் வாங்கினேன்.."

கம்பனில் கால் பதித்து நின்றாலும், விரல்கள் என்னமோ விசைப் பலகையில்
தான் - மரபு முரண்படாமல் புதுசோடு இழைய முடியும் என்பதற்கு ஹரி நல்ல
உதாரணம்.

"கவிதை எழுதிக்க்கிட்டு இருக்கீங்களா?"

அபத்தமான கேள்வி. சிரிக்கிறார். காலையில் பெரிசு கட்டியம்
சொன்னதற்கும் இதற்கும் தொடர்பு உண்டா என்று விசாரிக்கிறேன். தெய்வீகச்
சிரிப்பய்யா உமக்கு..

கட்டியம் சொன்னபடி வரும் கவிதைகளில் ஒன்று, இரண்டு மணி நேரம்
தாமதமானால் அதற்கு அடியேன் தான் காரணம்!

"இன்னொரு அகத்திய நண்பர் வீரராகவனும் கூப்பிடு தூரத்தில் தான் இருக்கார்"

கூப்பிடுகிறார். சட்டென்று பி.வி.ஆர் பிரத்தியட்சமாகிறார்.

கவி மழை. வீரராகவன், புழுதியில் பறக்கும் காகிதத் துண்டில் எழுதிய
கவிதை பற்றி நயமானதொரு கவிதை சொல்கிறார்.

"அகத்தியத்தில் எழுதுங்களேன்"

"எழுதினேன்.. மெயில் சர்வர் குழப்பம்..எனக்கே திரும்பி வந்து விட்டது"

"வீரராகவன் தாளில் எழுதுவதில்லை..மனதிலேயே முழுக் கவிதையையும்
எழுதிச் சொல்வார்"

ஏடாயிரம் கோடி எழுதாது தன் மனதில் எழுதிப் படித்த விரகனை நினைத்துக்
கொள்கிறேன்.

எழுபதுகளில் நடத்திய நல்லூர் இலக்கிய வட்டம் பற்றி இரண்டு பேரும்
உற்சாகமாகச் சொல்கிறார்கள்.

"கூட்டத்துக்கு அழைப்பு வெண்பாவிலே எழுதி ரயில்வே ஸ்டேஷன்லே ஒட்டறது..
தெருவைச் சுத்தமாகப் பெருக்கி, சுண்ணாம்பு வைத்து அறிவிப்பு
எழுதறது...விதவிதமான தலைப்புக்கள்..கரண்ட் கட் ஆக, இருட்டில் நடந்த
கவியரங்கங்கள்"

இருவருக்கும் குரு மறைந்த தமிழறிஞர் பேராசிரியர் தி.சொ.வேணுகோபாலன்
- நாகநந்தி. கோமல் சாமிநாதன் 'சுபமங்களா' இலக்கிய இதழின்
ஆசிரியராக இருந்தபோது அவர் ஏற்பாடு செய்ய சுஜாதா வீட்டுக்கு
எதிர்க்கட்டிடத்தில் நாகநந்தி நிகழ்த்திய கருத்தாழமிக்க 'பாரதி
சொற்பொழிவுகள்' பற்றி அசை போடுகிறோம். எழுபத்தைந்து -
எண்பதுகளின் கலை, இலக்கியம், பத்திரிகை, சினிமா...பேச்சு
சுவாரசியமாகப் போகிறது..

நண்பர் வாஞ்சி வாங்கி வந்து, அவரிடமிருந்து ஹரிக்கு வந்த 'இணையத்தில்
ஜேப்பி' என் கைக்கு மாறுகிறது (சென்னையிலேயே ஒரே ஒரு பிரதி தான்
இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன - மலேசிய
மாநாட்டுக்கு வந்த அயல் வாழ்த் தமிழர்கள் வாங்கிப் போனதில் பிரதிகள்
எல்லாம் விற்றுத் தீர்ந்து விட்டதாகக் கேட்க, ஓர் எழுத்தாளன் என்ற
முறையில் மகிழ்ச்சி ஏற்படுகிறது).

சரஸ்வதி பூஜையன்று புத்தகம் இரவல் வாங்கக் கூடாது என்பதால், கையில்
கொண்டு போயிருந்த 'குட்டியாப்பா' வையும், 'தகவல்காரரையும்'
ஜேப்பிக்கு பதிலாக மாற்றிக் கொள்கிறேன்.

வீரராகவன் வீட்டுக்கும் விசிட் - பாரதிதாசன் எழுதிய பாரதியார்
பற்றிய புத்தகம் அலமாரியில் கண்ணில் படுகிறது.

நங்கநல்லூருக்கு இன்னொரு முறை போக வேண்டும்..

அன்புடன்,
இரா.முருகன்



__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com