From eramurug@... Thu Oct 25 07:07:02 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 25 Oct 2001 14:07:01 -0000
Received: (qmail 28452 invoked from network); 25 Oct 2001 14:07:01 -0000
Received: from unknown (10.1.10.26) by m8.onelist.org with QMQP; 25 Oct 2001 14:07:01 -0000
Received: from unknown (HELO web14802.mail.yahoo.com) (216.136.224.218) by mta1 with SMTP; 25 Oct 2001 14:07:01 -0000
Message-ID: <20011025140701.14591.qmail@...>
Received: from [210.214.131.75] by web14802.mail.yahoo.com via HTTP; Thu, 25 Oct 2001 07:07:01 PDT
Date: Thu, 25 Oct 2001 07:07:01 -0700 (PDT)
Subject: bommai
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <20011025123138.34966.qmail@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 12673



நடக்கிற பொம்மைகளைப் பார்க்கிறவர்கள்
நிற்பதும் இருப்பதும்
சலவைக் குறியோடு துணி விரித்த
வெள்ளைப் படிகளில்
மழைச் சாரல் தெறிக்க.

காகித வில்லும் கிரீடமுமாய் யாசித்தென்
கார் முன்னால் வந்த சிறுவனின்
முக நீலம் கரைத்த மழை
பொம்மைகளைத் தொடுவதில்லை.

எட்டடி அறையில் மூன்றடியை வாமனனும்
கிரிக்கெட் வீரனும் நாயனக் காரனும்
வெள்ளைக்காரியும் எடுத்துக் கொண்டு,
எறும்பு மொய்க்காத கோலம் போட்ட தரையில்
கொஞ்சம் கால் மடித்து உட்கார்ந்து
கொஞ்சம் கோக்கோ கோலா மிச்சம் வைத்து
ரவிக்கைத் துண்டு வாங்கிப் போகும்
பொம்மைகளை, ஆபீசு போய் அலுத்து வந்த
பொம்மைகளைப் பார்க்கிறார்கள்.
தொல்லை கொடுப்பதால் வெளியே அனுப்பப் பட்ட
சின்ன பொம்மைகள் கண்ணில் படவில்லை.

இன்னும் இரண்டு நாள்.
படிகள் மடிந்து பரணேறும்.
மரப்பெட்டிகள் இறங்கி வந்து
வாஞ்சையோடு வாய் திறக்கும்.

உள்ளே உறங்கத் திரும்புகிறவர்கள்
அடுத்து வரும்போது
பார்க்கக் கிடைக்கும் பொம்மைகளின்
பட்டியல் எங்கே கிடைக்கும்?

இரா.முருகன்
25.10.2001



__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com