From harikris@... Thu Oct 25 12:50:50 2001
Return-Path:
X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 25 Oct 2001 19:50:50 -0000
Received: (qmail 61920 invoked from network); 25 Oct 2001 19:50:50 -0000
Received: from unknown (10.1.10.27) by 10.1.1.223 with QMQP; 25 Oct 2001 19:50:50 -0000
Received: from unknown (HELO smtp01.vsnl.net) (203.197.12.7) by mta2 with SMTP; 25 Oct 2001 19:50:44 -0000
Received: from harikris ([202.54.33.90]) by smtp01.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GLS1S202.W43 for ; Fri, 26 Oct 2001 01:20:26 +0530
Message-ID: <002301c15dbc$a74471c0$5a2136ca@...>
To: "Agathiyar@Yahoogroups.Com"
Subject: Bhuvaneswari Navaraatna Manimalai
Date: Fri, 26 Oct 2001 01:13:55 -0000
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-eGroups-From: "Hari Krishnan"
From: "Hari Krishnan"
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 12676
புவனேஸ்வரி நவரத்ன மணி மாலை
காப்பு
தவனுடையோர் சிந்தையிலே தங்கிக் கிடக்கும்
கவுரியின்தன் மூத்த களிறே - புவனையின்மேல்
சொல்லால் நவமணிநான் சூட்டத் துணைபுரிவாய்
வல்லபை தன்னோடு வந்து.
------
உடலுற்றெழு வுயிராய்உட னுணர்வுற்றெழு கவியாய்
உலையுற்றெழு கொதியாயலை உததிப்பெரு நிதியாய்
உதரத்துதி மகவாயது உருவுற்றெழு ஜகமாய்
உரசிச்சர வெடியாய்க்கரு முகில்வெட்டிடு மிடியாய்
அடிதொட்டிடு கனலாய்முடி யதுவெட்டிடு மினலாய்
அருவித்திரள் புனலாய்வரு கதிர்கொட்டிடு தணலாய்
அடலுற்றெழு பொறியாயுடல் அழிவுற்றிடு நெறியாய்
அதிர்வுற்றிடு கழலாய்விதி யதுசெற்றிடு தழலாய்
வடவைக்கனல் தனையும்சுடு வயிரப்படை துணையாய்
மகிடத்தலை எரியச்சிகை புகையப்புகு மரியாய்
வலியாய்ப்பெறு நிலையாயொலி ஹ்ரீமென்றிடும் அலையாய்
மழையாகிய திரளாய்ப்பொழி மனநாடிய அருளாய்
புடவித்திரு வடிவாய்ப்பட புனிதத்தொரு மடியாய்
பரையாய்த்திரி புரையாய்ப்பெரு புவனைப்பெயர் மறையாய்
படர்பொற்கொடி சுடர்விட்டெரி பதந்தொட்டனன் டரால்
படுவெந்துயர் கணமேபட திடமாயிரு மனனே. (1)
மனமே பேயே பெரும்பாழே
மாயக் கனவின் பிறப்பிடமே
வாழ்வும் மயர்வும் ஒன்றாக
மயங்கிக் கலக்கு மிருளொளியே
கனக்கும் சிந்தை கற்பனையும்
கவிதைப் பரவச அதிர்வுகளும்
கவலை பொய்கள் பெருமோகம்
கலந்து கிடக்கும் உள்வெளியே
உனக்காய் நினைத்தால் பறக்கின்றாய்
உயரே போகையில் சரிகின்றாய்
ஒவ்வொரு நாளும் ஓர்வடிவம்.
உனக்கும் எனக்கும் என்னபகை?
சினத்தைப் புகைக்கும் செயலாளின்
செக்கர் பவளத் திதழாளின்
தெரிசனம் உள்ளே வைப்பாயேல்
தெளிவேன் உன்னைக் கும்பிடுவேன். (2)
கும்பிடுவேன் நெஞ்சம் குளிர்வேன் குறைசூழ்ந்து
வெம்பும் மிடியழிந்து மேனிமிர்வேன் - அம்புயமேல்
பம்புபொற் பாதசர பச்சைத் திருமேனி
அம்பிகைதாள் உச்சி அணிந்து. (3)
துணிந்தவர் நெஞ்சிற் சுடர்விடும் சூலி தொடர்ந்தவள்தாள்
பணிந்தவர் உள்ளம் பயின்றிடும் நீலி யவள்வடிவை
அணிந்தா ரறிவினில் ஆழ்ந்தொரு ஞானத் தொளியுமிழ்வாள்
சிணுங்கிடும் தண்டை யனுங்கிடும் தோகைப் பசுமயிலே. (4)
மயிலாகி என்னுள் வளர்ந்தாடி வந்து
வடிவாகி நின்ற உமையே
வளமான சொல்லில் நடமாடி யென்றும்
மகிழ்வாகும் என்றன் மகளே
துயிலூடு வந்து தொடுவானில் சின்ன
சுடராகும் வாலை யமுதே
சுகமான வண்ணக் கவியாவி ளைந்து
துடியாட்ட மாடு மொளியே
பயில்கின்ற வேளை கிளியாக வந்து
பரிகாச மென்ன பெண்ணே
பண்ணோடு பாதம் கிண்ணென்று துள்ள
பறந்தோடி வாவென் மயிலே
அயலேயும் நின்று அருகாக வந்து
அழகாக நோக்கு மம்மே
அடிவாடி யென்றன் அபிராம வல்லி
அமுதூறு முத்து மொழியே.(5)
மொழியான சிந்தை அறிவாலயம்
முடிவான எண்ணம் அன்பாலயம்
வழியான கண்கள் விழிவாகனம்
மனமீதில் அம்மை ஆவாகனம்
பொழிகின்ற சொல்லில் பதிவாகிடும்
புகழேறு கின்ற கோமேதகம்
மெழுகென்ற போதும் என்றன்மனம்
மினலாகி வெட்டும் அம்மைதினம். (6)
அம்மா சுகவாணி ஆழியில் வந்தவளே
iம்மா மலையுதித்த எம்மிதய - சிம்மாசனி
பொற்பதும ராகம்சேர் பூணிற் பொலிபவளே
சிற்பரையே சிந்தை தெளி. (7)
தெளித்த கோலம் வானெல்லாம்
சிதறிக் கிடக்கும் செம்பவளம்
தீப்பட் டெரியும் மாணிக்கம்
செக்கச் சிவந்த கெம்புக்கல்
வளிமண் டலமே வயிரக்கல்
மஞ்சள் பச்சை நீலத்தில்
மாயா ஜால வைடூர்யம்
வானக் கடலில் நன்முத்து
வெளிதட விடுமொளி புவனையின்கண்
விரிந்த நீலம் அவளுடலே
மெய்யாய் துர்க்கை கெளரியுமாய்
விமலை நிமலை கமலையுமாய்
அளித்துக் காக்கும் அன்னையுமாய்
அன்பிற் கனிந்த தேவியுமாய்
அடியாற் கெல்லாம் ன்னுயிராய்
ஆகும் செம்மை மாமணியே. (8)
செம்மாமணி என்பொன்மணி திவ்யத்திருக் கோலம்
தெளிவானவள் அருளானவள் அறிவானவெண் கமலச்
சிம்மாசனி மயில்வாகனி மனவாலயப் படிவம்
செய்தெய்வத வதனத்திரு சிறுபுன்னகை மலர
எம்மாதவர் எக்காரணர் எவ்வேதமும் நாடும்
எழிற்பொற்பதம் தருமற்புதம் தனிலொர்பொடி யாலே
எனையாள்கிற வாக்வாதினி யிடுபிச்சையி னாலே
எளியேன்மனம் கவிதைக்கடல் தனையுற்றொளி சேரும்
அம்மாஉனை கண்பொங்கிட கரம்கும்பிட நாளும்
அருவீணையின் சையின்கதி அமைவுற்றிட நெஞ்சம்
அதிகாலையில் நனிமாலையில் உனைநாடிடச் செய்வாய்
அகிலங்களை வசமாக்கிட அருகுற்றருள்பெய்வாய்
எம்மைச்சுடு மறியாமையின் ருள்முற்றிலும் போக்கி
iதயத்தினை கமலத்தொரு வெள்ளைமல ராக
ஏற்றம்பட மாற்றம்பெற எமையாக்குதல்கடனே!
iறைவிப்பெரு வாணிக்கழல் துயர்போக்கிடு முடனே! (9)
நூற்பயன்
கேட்ட பொருளும் கேட்காத நற்பயனும்
வாட்டம் தொலைத்த மனநிலையும் - கூட்டும்
புவனைக்கு நாம்பூட்டும் பூந்தமிழ்ப் பாட்டாம்
நவரத்ன மாலை நலம்.
[Non-text portions of this message have been removed]