From sakthia@... Fri Oct 26 00:30:00 2001
Return-Path:
X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 26 Oct 2001 07:30:00 -0000
Received: (qmail 4697 invoked from network); 26 Oct 2001 07:30:00 -0000
Received: from unknown (10.1.10.26) by l9.egroups.com with QMQP; 26 Oct 2001 07:30:00 -0000
Received: from unknown (HELO dns02.eth.net) (202.9.145.15) by mta1 with SMTP; 26 Oct 2001 07:29:59 -0000
Received: from eth.net ([202.9.145.11]) by dns02.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.1600); Thu, 25 Oct 2001 18:55:40 +0530
Received: (apparently) from sakthia ([202.9.180.91]) by eth.net with Microsoft SMTPSVC(5.5.1877.537.53); Thu, 25 Oct 2001 18:52:10 +0530
Message-ID: <001701c15d55$cb46c260$5bb409ca@sakthia>
To:
References: <20011025123138.34966.qmail@...>
Subject: Re: [agathiyar] nanganallUr kavignarkaLOdu..
Date: Thu, 25 Oct 2001 18:35:05 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 25 Oct 2001 13:25:40.0406 (UTC) FILETIME=[8A6E1560:01C15D58]
From: "Kaviyogivedham"
X-Yahoo-Message-Num: 12680

அன்பு முருகன்!
என்ன அட்டகாசம் அய்யா உம் எழுத்து!
அந்த நங்கநல்லூரில் மாட்டிக்கொண்ட அவத்தையையும்,'சிரிப்பு'
கலந்து உம்மால்தான் உரைக்கமுடியும்.என் கருத்து.. ஆஞ்சநேயரைக்
கும்பிட்ட புண்யம் 100%-உமக்குண்டு--,அந்த குண்டுகுழிப் பாதையிலும் அரியையும் எம் நண்பன்
(மிக ஒசர')-வீ..வீர--ராகவனையும் நீர் சந்தித்து,நயம்பட அளவளாவி வந்ததாலே..
(வேதம்)

----- Original Message -----
From: era.murugan achwin
To:
Sent: Thursday, October 25, 2001 6:01 PM
Subject: [agathiyar] nanganallUr kavignarkaLOdu..


> கொழுநன் தொழ எழுந்த, தொழுதெழுந்த யாரோ ராச்சாப்பாட்டுக்குப் பின்
> சித்தி பார்க்கிற அவசரத்தில் பெய் என்று சொல்லி டிவியை சேனல் மாற்ற,
> ராத்திரி முழுக்க நசநசவென்று பெய்த மழை.
>
> அடுக்கு மாடிக் கட்டிடங்களும் கூட கோபுரங்களுமாக எழுந்து நிற்கும்
> நங்கநல்லூரில் மழைத்தண்னீர் நிரம்பிய குண்டு குழி பள்ளத்துக்கு இடையே
> கொஞ்சம் போல சாலையும் இருக்கிறது. முக்கி முனகி முன்னேறிய வண்டி
> கோவிலுக்குப் பக்கத்தில் நிற்கிறது.
>
> மூடியிருக்கும் கோவில். பக்கத்து ஆரிய வைத்தியசாலை வாசலில் வெள்ளைச்
> சீலையும், கையில் சென்னையில் பழக்கமில்லாத பனையோலைப் பெட்டியுமாக
> வயதான பெண். சேச்சியா, ஆச்சியா என்று தெரியவில்லை.
>
> "இது கோவில்தான்..குருவாயூரப்பன் கோயில்"
>
> எண்டெ குருவாயூரப்பா..?ரி ஆஞ்சனேயர் கோவிலுக்குப் பக்கம் இல்லையா அவர்
> வீடு இருப்பதாகச் சொல்லியிருந்தார்?
>
> "வண்டியை ரிவர்S எடுத்து லெப்ட்லே போய் அடுத்த லெப்ட்லே திரும்புங்க.."
>
> பின்வாங்கி, தீவிர இடதுசாரியாக முன்னேறி இலக்கை அடைய, கணினி
> முன்னர் கவிஞர். கம்ப்யூட்டரில் ஏதோ வித்தியாசமான பளபள..
>
> "சரSவதி பூfக்கு புது கீபோர்ட் வாங்கினேன்.."
>
> கம்பனில் கால் பதித்து நின்றாலும், விரல்கள் என்னமோ விசைப் பலகையில்
> தான் - மரபு முரண்படாமல் புதுசோடு இழைய முடியும் என்பதற்கு ?ரி நல்ல
> உதாரணம்.
>
> "கவிதை எழுதிக்க்கிட்டு இருக்கீங்களா?"
>
> அபத்தமான கேள்வி. சிரிக்கிறார். காலையில் பெரிசு கட்டியம்
> சொன்னதற்கும் இதற்கும் தொடர்பு உண்டா என்று விசாரிக்கிறேன். தெய்வீகச்
> சிரிப்பய்யா உமக்கு..
>
> கட்டியம் சொன்னபடி வரும் கவிதைகளில் ஒன்று, இரண்டு மணி நேரம்
> தாமதமானால் அதற்கு அடியேன் தான் காரணம்!
>
> "இன்னொரு அகத்திய நண்பர் வீரராகவனும் கூப்பிடு தூரத்தில் தான் இருக்கார்"
>
> கூப்பிடுகிறார். சட்டென்று பி.வி.ஆர் பிரத்தியட்சமாகிறார்.
>
> கவி மழை. வீரராகவன், புழுதியில் பறக்கும் காகிதத் துண்டில் எழுதிய
> கவிதை பற்றி நயமானதொரு கவிதை சொல்கிறார்.
>
> "அகத்தியத்தில் எழுதுங்களேன்"
>
> "எழுதினேன்.. மெயில் சர்வர் குழப்பம்..எனக்கே திரும்பி வந்து விட்டது"
>
> "வீரராகவன் தாளில் எழுதுவதில்லை..மனதிலேயே முழுக் கவிதையையும்
> எழுதிச் சொல்வார்"
>
> ஏடாயிரம் கோடி எழுதாது தன் மனதில் எழுதிப் படித்த விரகனை நினைத்துக்
> கொள்கிறேன்.
>
> எழுபதுகளில் நடத்திய நல்லூர் இலக்கிய வட்டம் பற்றி இரண்டு பேரும்
> உற்சாகமாகச் சொல்கிறார்கள்.
>
> "கூட்டத்துக்கு அழைப்பு வெண்பாவிலே எழுதி ரயில்வே Sடே"ன்லே ஒட்டறது..
> தெருவைச் சுத்தமாகப் பெருக்கி, சுண்ணாம்பு வைத்து அறிவிப்பு
> எழுதறது...விதவிதமான தலைப்புக்கள்..கரண்ட் கட் ஆக, இருட்டில் நடந்த
> கவியரங்கங்கள்"
>
> இருவருக்கும் குரு மறைந்த தமிழறிஞர் பேராசிரியர் தி.சொ.வேணுகோபாலன்
> - நாகநந்தி. கோமல் சாமிநாதன் 'சுபமங்களா' இலக்கிய இதழின்
> ஆசிரியராக இருந்தபோது அவர் ஏற்பாடு செய்ய சுfதா வீட்டுக்கு
> எதிர்க்கட்டிடத்தில் நாகநந்தி நிகழ்த்திய கருத்தாழமிக்க 'பாரதி
> சொற்பொழிவுகள்' பற்றி அசை போடுகிறோம். எழுபத்தைந்து -
> எண்பதுகளின் கலை, இலக்கியம், பத்திரிகை, சினிமா...பேச்சு
> சுவாரசியமாகப் போகிறது..
>
> நண்பர் வாஞ்சி வாங்கி வந்து, அவரிடமிருந்து ?ரிக்கு வந்த 'இணையத்தில்
> fப்பி' என் கைக்கு மாறுகிறது (சென்னையிலேயே ஒரே ஒரு பிரதி தான்
> இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன - மலேசிய
> மாநாட்டுக்கு வந்த அயல் வாழ்த் தமிழர்கள் வாங்கிப் போனதில் பிரதிகள்
> எல்லாம் விற்றுத் தீர்ந்து விட்டதாகக் கேட்க, ஓர் எழுத்தாளன் என்ற
> முறையில் மகிழ்ச்சி ஏற்படுகிறது).
>
> சரSவதி பூfயன்று புத்தகம் இரவல் வாங்கக் கூடாது என்பதால், கையில்
> கொண்டு போயிருந்த 'குட்டியாப்பா' வையும், 'தகவல்காரரையும்'
> fப்பிக்கு பதிலாக மாற்றிக் கொள்கிறேன்.
>
> வீரராகவன் வீட்டுக்கும் விசிட் - பாரதிதாசன் எழுதிய பாரதியார்
> பற்றிய புத்தகம் அலமாரியில் கண்ணில் படுகிறது.
>
> நங்கநல்லூருக்கு இன்னொரு முறை போக வேண்டும்..
>
> அன்புடன்,
> இரா.முருகன்
>
>
>
> __________________________________________________
> Do You Yahoo!?
> Make a great connection at Yahoo! Personals.
> http://personals.yahoo.com
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>