From sakthia@... Fri Oct 26 01:01:04 2001
Return-Path:
X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 26 Oct 2001 08:01:03 -0000
Received: (qmail 159 invoked from network); 26 Oct 2001 08:01:03 -0000
Received: from unknown (10.1.10.26) by 10.1.1.222 with QMQP; 26 Oct 2001 08:01:03 -0000
Received: from unknown (HELO smart) (202.9.178.27) by mta1 with SMTP; 26 Oct 2001 08:01:02 -0000
Received: from eth.net ([202.9.145.10]) by smart with Microsoft SMTPSVC(5.0.2195.2966); Fri, 26 Oct 2001 09:52:53 -0700
Received: (apparently) from sakthia ([202.9.180.68]) by eth.net with Microsoft SMTPSVC(5.5.1877.537.53); Fri, 26 Oct 2001 09:49:17 +0530
Message-ID: <002601c15dd2$c2668ae0$44b409ca@sakthia>
To:
References: <006401c15dbe$d2790340$5a2136ca@...>
Subject: Re: [agathiyar] Bhuvaneswari Navaraatna Manimalai - Correction
Date: Fri, 26 Oct 2001 09:29:01 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 26 Oct 2001 16:52:53.0015 (UTC) FILETIME=[A7416A70:01C15E3E]
From: "Kaviyogivedham"
X-Yahoo-Message-Num: 12681

அரியே! கவிச்சோலை அற்புதமே!சொல்-ஆய்வுப்
புரந்தரனே!சந்தமுடன் புணர்ந்தேநீ எப்படிய்யா

எழுதுகிறாய்?கலைமகளை எப்படிநீ சகதேவன்
அழுத்தமுடன்,சிரித்தே அமுக்கிடல்போல் 'குமுக்கிவிட்டாய்?'

பக்தியும்,ஆழமும்,பன்னூல் பயிற்சியும்
உக்தியுடன் உன்னைநண்ணி 'ஓராயிரம்' முத்தம்

கொடுக்கும் விதத்தைநீ குனிந்தென் காதில்சொன்னால்
கொடுப்பேன் நானும்-தான் கொஞ்சியேநீ சொன்னயிடம்!
(வேதம்--26-10-01)
----- Original Message -----
From: Hari Krishnan
To: Agathiyar@Yahoogroups.Com
Sent: Friday, October 26, 2001 7:05 AM
Subject: [agathiyar] Bhuvaneswari Navaraatna Manimalai - Correction


இதற்கு முன்னால் அனுப்பிய பாடல்கள் ஒன்றிரண்டில் இருந்த பிழைகளைத் திருத்தி அனுப்புகிறேன்.
?ரி கிரு?ணன்.

புவனேSவரி நவரத்ன மணி மாலை

காப்பு

தவனுடையோர் சிந்தையிலே தங்கிக் கிடக்கும்
கவுரியின்தன் மூத்த களிறே - புவனையின்மேல்
சொல்லால் நவமணிநான் சூட்டத் துணைபுரிவாய்
வல்லபை தன்னோடு வந்து.
------

உடலுற்றெழு வுயிராய்உட னுணர்வுற்றெழு கவியாய்
உலையுற்றெழு கொதியாயலை உததிப்பெரு நிதியாய்
உதரத்துதி மகவாயது உருவுற்றெழு fகமாய்
உரசிச்சர வெடியாய்க்கரு முகில்வெட்டிடு மிடியாய்
அடிதொட்டிடு கனலாய்முடி யதுவெட்டிடு மினலாய்
அருவித்திரள் புனலாய்வரு கதிர்கொட்டிடு தணலாய்
அடலுற்றெழு பொறியாயுடல் அழிவுற்றிடு நெறியாய்
அதிர்வுற்றிடு கழலாய்விதி யதுசெற்றிடு தழலாய்
வடவைக்கனல் தனையும்சுடு வயிரப்படை துணையாய்
மகிடத்தலை எரியச்சிகை புகையப்புகு மரியாய்
வலியாய்ப்பெறு நிலையாயொலி <ரீமென்றிடும் அலையாய்
மழையாகிய திரளாய்ப்பொழி மனநாடிய அருளாய்
புடவித்திரு வடிவாய்ப்பட புனிதத்தொரு மடியாய்
பரையாய்த்திரி புரையாய்ப்பெரு புவனைப்பெயர் மறையாய்
படர்பொற்கொடி சுடர்விட்டெரி பதந்தொட்டனன் டரால்
படுவெந்துயர் கணமேபட திடமாயிரு மனனே. (1)

மனமே பேயே பெரும்பாழே
மாயக் கனவின் பிறப்பிடமே
வாழ்வும் மயர்வும் ஒன்றாக
மயங்கிக் கலக்கு மிருளொளியே
கனக்கும் சிந்தை கற்பனையும்
கவிதைப் பரவச அதிர்வுகளும்
கவலை பொய்கள் பெருமோகம்
கலந்து கிடக்கும் உள்வெளியே
உனக்காய் நினைத்தால் பறக்கின்றாய்
உயரே போகையில் சரிகின்றாய்
ஒவ்வொரு நாளும் ஓர்வடிவம்.
உனக்கும் எனக்கும் என்னபகை?
சினத்தைப் புகைக்கும் செயலாளின்
செக்கர் பவளத் திதழாளின்
தெரிசனம் உள்ளே வைப்பாயேல்
தெளிவேன் உன்னைக் கும்பிடுவேன். (2)

கும்பிடுவேன் நெஞ்சம் குளிர்வேன் குறைசூழ்ந்து
வெம்பும் மிடியழிந்து மேனிமிர்வேன் - அம்புயமேல்
பம்புபொற் பாதசர பச்சைத் திருமேனி
அம்பிகைதாள் உச்சி அணிந்து. (3)

துணிந்தவர் நெஞ்சிற் சுடர்விடும் சூலி தொடர்ந்தவள்தாள்
பணிந்தவர் உள்ளம் பயின்றிடும் நீலி யவள்வடிவை
அணிந்தா ரறிவினில் ஆழ்ந்தொரு ஞானத் தொளியுமிழ்வாள்
சிணுங்கிடும் தண்டை யனுங்கிடும் தோகைப் பசுமயிலே. (4)

மயிலாகி என்னுள் வளர்ந்தாடி வந்து
வடிவாகி நின்ற உமையே
வளமான சொல்லில் நடமாடி யென்றும்
மகிழ்வாகும் என்றன் மகளே
துயிலூடு வந்து தொடுவானில் சின்ன
சுடராகும் வாலை யமுதே
சுகமான வண்ணக் கவியாவி ளைந்து
துடியாட்ட மாடு மொளியே
பயில்கின்ற வேளை கிளியாக வந்து
பரிகாச மென்ன பெண்ணே
பண்ணோடு பாதம் கிண்ணென்று துள்ள
பறந்தோடி வாவென் மயிலே
அயலேயும் நின்று அருகாக வந்து
அழகாக நோக்கு மம்மே
அடிவாடி யென்றன் அபிராம வல்லி
அமுதூறு முத்து மொழியே.(5)

மொழியான சிந்தை அறிவாலயம்
முடிவான எண்ணம் அன்பாலயம்
வழியான கண்கள் விழிவாகனம்
மனமீதில் அம்மை ஆவாகனம்
பொழிகின்ற சொல்லில் பதிவாகிடும்
புகழேறு கின்ற கோமேதகம்
மெழுகென்ற போதும் என்றன்மனம்
மினலாகி வெட்டும் அம்மைதினம். (6)

அம்மா சுகவாணி ஆழியில் வந்தவளே
iம்மா மலையுதித்த எம்மிதய - சிம்மத்தில்
பொற்பதும ராகம்சேர் பூணிற் பொலிபவளே
சிற்பரையே சிந்தை தெளி. (7)

தெளித்த கோலம் வானெல்லாம்
சிதறிக் கிடக்கும் செம்பவளம்
தீப்பட் டெரியும் மாணிக்கம்
செக்கச் சிவந்த கெம்புக்கல்
வளிமண் டலமே வயிரக்கல்
மஞ்சள் பச்சை நீலத்தில்
மாயா fல வைடூர்யம்
வானக் கடலில் நன்முத்து
வெளிதட விடுமொளி புவனையின்கண்
விரிந்த நீலம் அவளுடலே
மெய்யாய் துர்க்கை கெளரியுமாய்
விமலை நிமலை கமலையுமாய்
அளித்துக் காக்கும் அன்னையுமாய்
அன்பிற் கனிந்த தேவியுமாய்
அடியாற் கெல்லாம் ன்னுயிராய்
ஆகும் செம்மை மாமணியே. (8)

செம்மாமணி என்பொன்மணி திவ்யத்திருக் கோலம்
தெளிவானவள் அருளானவள் அறிவானவெண் கமலச்
சிம்மாசனி மயில்வாகனி மனவாலயப் படிவம்
செய்தெய்வத வதனத்திரு சிறுபுன்னகை மலர
எம்மாதவர் எக்காரணர் எவ்வேதமும் நாடும்
எழிற்பொற்பதம் தருமற்புதம் தனிலொர்பொடி யாலே
எனையாள்கிற வாக்வாதினி யிடுபிச்சையி னாலே
எளியேன்மனம் கவிதைக்கடல் தனையுற்றொளி சேரும்
அம்மாஉனை கண்பொங்கிட கரம்கும்பிட நாளும்
அருவீணையின் சையின்கதி அமைவுற்றிட நெஞ்சம்
அதிகாலையில் நனிமாலையில் உனைநாடிடச் செய்வாய்
அகிலங்களை வசமாக்கிட அருகுற்றருள் பெய்வாய்
எம்மைச்சுடு மறியாமையின் ருள்முற்றிலும் போக்கி
iதயத்தினை கமலத்தொரு வெள்ளைமல ராக
ஏற்றம்பட மாற்றம்பெற எமையாக்குதல் கடனே!
iறைவிப்பெரு வாணிக்கழல் துயர்போக்கிடு முடனே! (9)

நூற்பயன்

கேட்ட பொருளெதுவும் கேட்காத நற்பயனும்
வாட்டம் தொலைத்த மனநிலையும் - கூட்டும்
புவனைக்கு நாம்பூட்டும் பூந்தமிழ்ப் பாட்டாம்
நவரத்ன மாலை நலம்.



[Non-text portions of this message have been removed]





Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/