From jaybee@... Fri Oct 26 03:35:08 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 26 Oct 2001 10:35:08 -0000
Received: (qmail 61358 invoked from network); 26 Oct 2001 10:35:07 -0000
Received: from unknown (10.1.10.27) by l7.egroups.com with QMQP; 26 Oct 2001 10:35:07 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta2 with SMTP; 26 Oct 2001 10:35:05 -0000
Received: from user (sp-103-62.tm.net.my [210.186.103.62]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GLT00IDT670B5@...> for agathiyar@yahoogroups.com; Fri, 26 Oct 2001 18:23:26 +0800 (SGT)
Date: Fri, 26 Oct 2001 18:21:21 +0800
Subject: Navaraaththiri customs -special#2
X-Sender: jaybee@...
To: "agathiyar@yahoogroups.com" Message-id: <3.0.3.32.20011026182121.00743338@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12683
அன்பர்களே,
விவேகாநந்தா போன்ற நாட்காட்டிகளிலும் பஞ்சாங்கங்களிலும்
'வித்யாரம்பம்' என்று போட்டிருப்பார்கள்.
பழங்காலத்தில் அன்றுதான் சிறார்களின் கல்வி ஆரம்பாகும்.
தொன்னைகளில்' காப்பரிசி' என்னும் இனிப்பான அரிசியை
வைத்துக் கொடுப்பார்கள். காப்பரிசி என்றால் என்ன? பச்சரியைக் கழுவி
காயவைக்கவேண்டும். தேங்காயை பல்பல்லாகத் துண்டுகளாக
நறுக்கி நெய்யில் வதக்கிவைத்துக் கொள்வார்கள். பொட்டுக்கடலையை எடுத்து
வைத்துக்கொள்ளவேண்டும். ஏலக்காயை இடித்துக்கொண்டு இவை
அனைத்தையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவேண்டும். வெல்லத்தைப்
பாகாகக் காய்ச்சிக்கொண்டு அந்தக்கலவையுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
இவை அனைத்தையும் கலந்துகொண்டு எள்ளும்சேர்ப்பார்கள். இதுவே
காப்பரிசி. (அப்பாடா! இனிமேல் காப்பரிசி சம்பந்தமாக யாராவது கூகுலில்
தேடினால் அது 'டக் கென்று அகத்தியம் ஆர்க்கைவ்ஸைக் கைகாட்டிவிடும்).
காப்பரிசியைத் தொன்னையில் வைத்துக்கொடுப்பதே வழக்கம். காப்பரிசியை
ஆடி பதினெட்டாம்பெருக்கு ச்மயத்திலும் கொடுப்பார்கள். அப்போது ஆண்கள்
கையில் மஞ்சள்நூல் ஒன்றைக் காப்பாகக் கட்டுவார்கள். இது வடநாட்டு
'ரக்ஷாபந்தன்' போன்றது.
விஜயதச்மி வித்யாரம்பத்தின்போது எல்லோருக்கும் காப்பரிசியுடன்
பொறி, கடலை, அவல், வாழைப்பழங்கள் ஆகியவற்றையும் வழங்குவார்கள்.
பள்ளிக்குச் சென்று ஆசிரியருக்குச் 'சம்பாவனை' என்னும்
தட்சிணையோடு தேங்காய், பழம், வேட்டி(இந்த இடத்தில் கமா போட
மறந்துவிட்டேன். நல்லவேளை. ஞாபகம் வந்தது. இல்லையெனில்,
"என்னடாயிது? ஆசிரியருக்குப் பழம்வேட்டி கொடுக்கிறார்களே? குடுகுடுப்பை
ஆண்டிக்கல்லவா கொடுப்பது வழக்கம்!" என்று இராமுருகன் கேட்பார் அல்லவா?)
துண்டு, போன்றவற்றை வைத்துக்கொடுப்பார்கள். புதிய சிறார்களை ஆசிரியர்
தம் மடியில் வைத்துக்கொண்டு வித்யாரம்பம் ஆரம்பமாகும். மாணவனின்
சிறு விரலைப்பிடித்து, ஆற்றுமணலில் எழுத்தெழுதச் சொல்லிக்கொடுப்பார்.
அந்த முதல் எழுத்துக்களை,
"அரி, சித்தரி, நானா, மோனா, இத்தன்னா, தூனா, சீனா, இந்தன்னா, இம்மன்னா",
என்று சொல்லி எழுதவைப்பார்கள்.
'அரி சித்தரி நமோத்துசிந்தம்' என்னும் மந்திரமே இப்படி எழுத்துக்கூட்டிச்
சொல்லப்பட்டது. சமணமூலத்தைக் கொண்டது. 'சித்தர் வணக்கம்'
என்பது சமணத்தில் மிகவும் இன்றியமையாதது. சமணத்தில் கூறப்பட்டிருக்கும்
சித்தர்கள் வேறுவகையானவர்கள். வழக்கமாகப் பெரும்பாலோரால் கற்பனை
செய்யப்படும் 'நட்டக்கல்லைச்சுத்திவந்த'ஸ்டீர்யோடைப் சித்தர்களல்லர்.
மதுரை வடக்காவணிமூல வீதியில் இருந்த பொன்னுவையங்கார்
எலிமெண்டரி ஸ்கூலில், ஆசிரியர் சுப்பிரமணிய சாஸ்திரியார் மடியில்
இருந்தவாறு, அந்த வாசகத்தைச் சொல்லாமல் முறைத்துப் பார்த்துக்கொண்டு
இருந்தது ஞாபகத்தில் இருக்கிறது.
பழைய மாணவர்களுக்குப் புதிய ஏடுகளை எடுத்து அளவிட்டுச்
சேர்த்துக் கட்டிக்கொடுப்பார்கள். இதனை'ஏடு வாருதல்' என்று
சொல்வார்கள். அன்று ஏதாவது புதிய நூலைப் படிப்பது வழக்கம். நைடதத்தைப்
படிப்பதும் வழக்கம்.
'நைடதம் புலவர்க்கு ஔடதம்' என்று சொல்லப்படுவது இந்த
பாப்புலாரிட்டிக்கு ஓரளவுக்கு வழிவகுத்தது என்றாலும்கூட, சனியின்
தோஷங்களைப் போக்குவதற்காக நைடதம் படிக்கும் வழக்கமும் பெருமளவு
இதற்குக் காரணமாக இருந்திருக்கிறது.
உ.வே.சாமிநாயய்யருக்கு அவருடைய ஆசிரியர் இருமுறை
முதன்முதலில் எடுத்துக்கொடுத்தது நைடதம்தான்.
இன்னும் கொஞ்சம் இவ்வழியே செல்வோம்...