From jaybee555@... Fri Oct 26 03:52:19 2001
Return-Path: X-Sender: jaybee555@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 26 Oct 2001 10:52:19 -0000
Received: (qmail 81885 invoked from network); 26 Oct 2001 10:52:19 -0000
Received: from unknown (10.1.10.26) by l7.egroups.com with QMQP; 26 Oct 2001 10:52:19 -0000
Received: from unknown (HELO n14.groups.yahoo.com) (10.1.10.92) by mta1 with SMTP; 26 Oct 2001 10:52:18 -0000
X-eGroups-Return: jaybee555@...
Received: from [10.1.2.51] by n14.groups.yahoo.com with NNFMP; 26 Oct 2001 10:53:02 -0000
Date: Fri, 26 Oct 2001 10:52:00 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Navaraaththiri customs -special#1
Message-ID: <9rbf8h+chnq@eGroups.com>
In-Reply-To: <3.0.3.32.20011026182121.00743338@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1971
X-Mailer: eGroups Message Poster
X-Originating-IP: 210.186.103.62
From: jaybee555@...
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12685
அன்பர்களே,
நவராத்திரி விழா பத்து நாட்களுக்கு நடந்தாலும்கூட கொலுவைப்பவர்களைத்
தவிர மற்றவர்கள் எல்லாம் அந்தக்கடைசி இரண்டு நாட்களைமட்டுமே மிக்கியமாகக்
கருதுகிறார்கள். ஐந்தாம் நாளாகிய லலிதா பஞ்சமியும் எட்டாம் நாளாகிய துர்காஷ்டமி
ஆகியவையும் சிறப்புவாய்ந்தவைதான். இருப்பினும் ஒன்பதாம் நாளாகிய மகாநவமி
எனப்படும் சரஸ்வதி பூஜையும் பத்தாம் நாளாகிய விஜயதசமியும்தான் மிகச் சிறப்பாகக்
கொண்டாடப்படுகின்றன.
இந்தப் பூஜைநாட்களில் நிகழ்த்தப்படும் வழிபாடுகள், சடங்குகள் ஆகியவை
இடத்துக்கு இடம், இனத்துக்கு இனம் வேறுபடுகின்றன.
சரஸ்வதி பூஜையை ஆயுதபூஜை என்றும் அழைப்பார்கள்.
அன்று புத்தகங்கள், எழுதும் கருவிகள் போன்றவற்றை மேடைபோல்
அமைத்து, அதில் நாமகளை ஆவாகனம் செய்து வழிபாடு செய்வது வழக்கம்.
அதுதவிர, அவரவரர், தத்தம் தொழிலில் பயன்படுத்தும் கருவிகளையும்
பூஜைக்கு வைத்து வழிபாடுசெய்வார்கள். அன்று முழுமையும் அந்தக் கருவிகளை
எடுப்பதோ பயன்படுத்துவதோ கிடையாது.
விஜயதசமியன்று காலையில், அக்கருவிகளை எடுத்துப் பயிற்சி செய்வார்கள்.
உதாரணமாக கணக்கர் ஒரு புத்தோலையை எடுத்து அதில் ஏதாவது எழுதுவர்.
அரிவாளைப் பூஜைக்கு வைத்திருப்பவர், அதனை எடுத்து ஒரு மரக்கட்டையில்
ஒரு போடு போடுவார். பொற்கொல்லர், சுத்தியலை எடுத்து ஒரு சிறு பொற்கம்பியை
எடுத்துவைத்துத் தட்டுவார். இவ்வாறு தங்களின் தொழிலை மீண்டும் புதிப்பித்துப்
புத்துணர்ச்சியோடு தொடங்குவார்கள். அரசர்கள் அசுவபூஜை, கோபூஜை, கஜபூஜை
என்று குதிரை, பசு, யானை ஆகியவற்றுக்குப்பூஜை செய்வார்கள்.
வியாபாரத் தலங்களில் 'புதுக்கணக்கு' என்னும் சடங்கு ஒன்றை
வைத்திருப்பார்கள். சில நிறுவனங்கள் தங்கள் கணக்கைப் பங்குனி மாதம்
முடித்துக்கொண்டு, சித்திரை ஒன்றாம் தேதி புதுக்கணக்கை ஆரம்பிப்பார்கள்.
வேறு சில நிறுவனங்கள் புதுக்கணக்கை விஜயதசமியன்று ஆரம்பிப்பார்கள்.
அதற்கென்று புத்தம்புதிய 'லெட்ஜர்' எனப்படும் கணக்குப்புத்தகத்தை வாங்கி
வைத்திருப்பார்கள். பழங்காலத்தில் புத்தேடுகள் கொண்ட கணக்குச்சுவடி
பயன்படுத்தப்படும்.
இன்னும் சில வழக்கங்களையும் பார்ப்போம்.