From jaybee@... Fri Oct 26 04:35:07 2001
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 26 Oct 2001 11:35:06 -0000
Received: (qmail 62468 invoked from network); 26 Oct 2001 11:35:06 -0000
Received: from unknown (10.1.10.26) by l8.egroups.com with QMQP; 26 Oct 2001 11:35:06 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta1 with SMTP; 26 Oct 2001 11:35:05 -0000
Received: from user (sp-103-47.tm.net.my [210.186.103.47]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GLT00J3Z9I71T@...> for agathiyar@yahoogroups.com; Fri, 26 Oct 2001 19:34:57 +0800 (SGT)
Date: Fri, 26 Oct 2001 19:31:50 +0800
Subject: Navaraaththiri customs -special#3
X-Sender: jaybee@...
To: "agathiyar@yahoogroups.com" Message-id: <3.0.3.32.20011026193150.0075c97c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12687
இன்னொரு வழக்கமும் சரஸ்வதி பூஜை, விஜயதசமியன்று
இருந்திருக்கிறது.
பழங்காலத்தில் ஓலைச்சுவடிகளாகத்தான் புத்தகங்கள் விளங்கின.
அச்சிடும் வழக்கம் ஏற்படுவதற்குமுன்னர் ஒவ்வொரு நூலையும் கைப்பட
எழுதுவார்கள். ஒவ்வொரு நூலுக்கும் பிரதி எடுப்பது என்பது ஒரு
பெரும்வேலையாக இருந்தது. மெனக்கெட்டுஉட்கார்ந்து, கொஞ்சம்
கொஞ்சமாக எழுதினார்கள். ஒருவர் வாசித்துச் சொல்லச்சொல்ல,
இன்னொருவர் எழுதிக்கொள்வார். அவ்வாறு சொல்பவர்/எழுதுபவரை,
'கற்றுச்சொல்லிகள்' என்பார்கள்.
ஒரு நூலை விரைவாகப் பிரதி எடுக்க நினைப்பவர்கள், பல
கற்றுச்சொல்லிகளிடம் நூலைப் பகுதி பகுதியாகப் பிரித்துப் பகிர்ந்து
கொடுத்துவிடுவார்கள். தத்தமக்குக் கிடைத்த பகுதிகளை அவரவர் பிரதி
எடுத்துவிடுவர். பின்னர் அந்தப் பகுதிகளைச் சரிபார்த்து இணைத்துக்
கொள்வர்.
ஒரு நூலுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகள் வேண்டுமென்றால்
அத்தனை எழுத்தர்களை வைத்துக்கொண்டு, ஒருவர் வாசிக்க, மற்றவர்கள்
எழுதிக்கொள்வர். பலகுழுக்கள் இயங்கினால் ஒரே நூலுக்குப் பல பிரதிகளை
விரைவாகத் தயாரித்துக்கொள்ளலாம்.
இதனை மாணவர்கள், எழுத்தர்கள் ஆகியோர் அடங்கிய, ஆள்பலம்
கொண்டவர்களால் செய்யமுடிந்தது. கல்லூரிகள், சங்கங்கள், பள்ளிகள்,
விஹாரைகள், மடங்கள், ஆதீனங்கள் போன்றவற்றால் இயன்றது.
இல்லையென்றால் அரசர்கள், செல்வந்தர்கள் போன்றவர்களால் செய்யமுடிந்தது.
நிறைய கற்றுச்சொல்லிகள், எழுத்தர்கள் ஆகியோருக்குப் போதிய
ஊதியம் கொடுத்து நூல்பிரதிகளை எழுதச்செய்வார்கள்.
பல செல்வந்தர்களிடம் ஒரு வழக்கம் இருந்தது. அவர்கள் ஏதாவது
நூலைப் பிரதிகள் எடுக்கச்செய்வார்கள்.அந்த நூல்களை விஜயதசமியன்று
புலவர்கள், வேதங்கற்றவர்கள் போன்றவர்களுக்கு சம்மானங்களுடன்
மரியாதைசெய்து தானமாகக் கொடுப்பார்கள். இதனை 'வித்யாதானம்' என்று
சொல்வார்கள். வித்யாதானத்தில் இது ஒருவகை. இன்னொருவகை, கல்வியோ
அல்லது ஏதாவது வித்தையோ சொல்லிக்கொடுப்பது.
பல மந்திர நூல்களின் 'பலஸ்ருதி' எனப்படும் நூல்பலன்
கூறப்பட்டிருக்கும் பகுதியில், 'இந்த நூலைப் இத்தனை தடவை இவ்வளவு
காலத்துக்கு இப்படி இப்படிப் படித்தால் இன்ன இன்ன பலன்கள் ஏற்படும்',
என்று சொல்லப்பட்டிருக்கும். சில நூல்களில் அத்துடன் மேலும்,
'இந்த நூலைப் பிரதி எடுத்து அதனை வேதம் கற்ற பிராமணனிடம் கொடுத்து
வாசிக்கச்செய்தால் இன்ன பலன் ஏற்படும்', என்றும் சொல்லியிருக்கும்.
வைத்திய நூல்கள் போன்றவற்றைப் பிரதிசெய்வது பெரும்புண்ணியமாகக்
கருதப்பட்டுவந்தது. அதுபோலவே சமயநூல்களில் கம்பராமாயணம்
சிறப்புப்பெற்றிருந்தது. தனி ஒருவராகக் கம்பராமாயணத்தைப் பிரதி செய்வதற்கு
ஆறுமாதங்கள் பிடித்தனவாம்.
இப்படிப்பட்ட தானங்கள் நிறைய இருந்திருக்கின்றன. அவற்றைச்
செய்பவர்களும் நிறையவே இருந்திருக்கிறார்கள். ஆகையால்தான் பல
லட்சக்கணக்கான சுவடிகளையும் ஏடுகளையும் இன்றும் நாம் பார்க்கமுடிகிறது.
ஆனால் இப்போதோ இந்தமாதிரி தானங்களெல்லாமே குறைந்துபோய்விட்டன.