From anbu kaditham@... Fri Oct 26 07:16:00 2001
Return-Path:
X-Sender: anbu kaditham@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 26 Oct 2001 14:15:59 -0000
Received: (qmail 12422 invoked from network); 26 Oct 2001 14:15:57 -0000
Received: from unknown (10.1.10.27) by l8.egroups.com with QMQP; 26 Oct 2001 14:15:57 -0000
Received: from unknown (HELO web14803.mail.yahoo.com) (216.136.224.219) by mta2 with SMTP; 26 Oct 2001 14:15:57 -0000
Message-ID: <20011026141557.55239.qmail@...>
Received: from [64.124.150.137] by web14803.mail.yahoo.com via HTTP; Fri, 26 Oct 2001 07:15:57 PDT
Date: Fri, 26 Oct 2001 07:15:57 -0700 (PDT)
Subject: kooziyaa..manithanaa - ramblings from the politically incorrect
To: agathiyar@yahoogroups.com
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: anbu S
X-Yahoo-Profile: anbu kaditham
X-Yahoo-Message-Num: 12688

Dear Balakrishnan :

Refer your mail on mechanised milk production
http://groups.yahoo.com/group/agathiyar/message/12670

இந்த செய்தியை படித்துவிட்டு குழப்பமும் மேலிட்டது.

இந்த செய்தியை முதலில் அனுப்பியவர் மிருகவதை என்ற வாதத்தை முன்வைத்து
தன் கருத்தினை எழுதியுள்ளார். இதை மேடையில் ஒருவர் சொல்ல அதை
தொடர்ந்து கண்ணீர், பால் மற்றும் புலால் மருப்பு ஆகியவை பேசப் பட்டுள்ளன.
இந்த செய்தி மிருக வதையை காட்டுகிறதா ? ஒரு கோணத்தில் இது மிருக
வதை தான். மாட்டை கட்டிப் போட்டு மேய விடாமல் அடிப்பது கொடுமை தான்.
ஆனால் இன்னொரு கோணத்தில் - மனிதனுக்காக மிருகங்கள் படைக்கப் பட்டன -
ஆகவே அவை எப்படி அழிக்கப் பட்டால் என்ன ? நாளை கடையில் கிலோ
இவ்வளவு என்று புலால் ஆகப் போகும் மாட்டுக்கு இன்று ஏன் கண்ணீர் என்ற கேள்வி
எழவில்லையா ? மாட்டை 10 வருடம் தீனி போட்டு பின் வெட்டி கடையில்
விற்றால் மிருக வதை நின்று விடுமா. அதே மாட்டை இரண்டரை வருடத்திலோ
நான்கு வருடத்திலோ வெட்டியால் ??

Is it just the way we see things ??

Domesticated animal என்று வந்துவிட்டாலேயே மிருக வதை தானே.
காட்டில் சுதந்திரமாக மேய வேண்டியவைகளை வீட்டில் பூட்டி அல்லவா வைத்து
விடுகிறோம்? காளை கன்றை வெட்டி மாமிசமாக (veal) விற்றுவிடுவது
பற்றி வருத்தம் தெரிவித்த இந்த கட்டுறையாளர் mechanised farming
வரும் முன் காளை கன்றின் கதியை பற்றி அறிந்திலார் போலும். நம் நாட்டில்
காளை கன்றின் கதி என்ன. காய் அடித்து வண்டியில் பூட்டி விடுவார்கள் -
இதற்கு தொழில் நுட்ப முன்னேற்றமோ, அதிக லாப எண்ணமோ கரணம் இல்லை.
எங்க அப்பா காலத்தில இப்படித்தான் ..இப்பவும் இப்படியே என்ற போக்கே
காரணம். காளைக்க்கு காய் அடிக்கலையின்ன எப்படி வண்டியில பூட்டுவே. காலம்
காலமா எப்படி உழுதே ? மாடில்லாமையா ? காயடிக்காத மாட்டை வண்டியில்
பூட்ட முடியுமா ?

Is it just the way we see things ??

மாட்டை கட்டிப் போட்டு பால் கறப்பது. புண்ணாக்கு வைப்பது. தீவனம் வைப்பது
? என்னையா கடவுள் நீ குடிக்கவா மாட்டுக்கு பால் குடுத்தான் ? கன்று குடிக்க
மாட்டுக்கு பால் குடுத்தான். நீ என்ன செய்தாய் ? மாட்டை வீட்டில் கட்டிப்
போட்டுவிட்டு தினம் கறந்து நீ குடித்தாய்.

This mail leaves me confused - not that I was clear
earlier :-).

இந்த வெளி நாட்டு மாடுகளைக் காட்டிலும் வைக்கோலும் தண்ணீரும் மட்டும் தின்று
வாழும் நம் நாட்டு மாடுகள் சோனியாக உள்னவே . இந்த பாதிப் பட்டினி
மிருக வதை இல்லையா ??

அதிகம் பால் கரக்க மாட்டுக்கு ஊசி போடுவது கொடுமையா ? அப்படியானால்
குழந்தைக்க்கு இன்கிரிமென் டானிக் அல்லது ஆர்லிக்ச் கொடுப்பது ? தினம்
காலையில் டென்னிஸ் விளையாட அனுப்புவது. என் மகன் டெண்டுல்கர் ஆவான் என்று
சொல்லுவது. எது ஆசை எது பேராசை ? எது ஊக்குவித்தல் எது கொடுமைப்
படுத்துதல்.

ஊக்குவித்தல்... இல்லை கொடுமை அதிகமாகிவிட்டதால் நம் கண்ணில்
படுகிறதோ. இணையமும் பத்திரிக்கையும் உள்ளதால் வெளிவந்ததோ ??

இந்த மிருக வதை வெரும் பேராசையோ. பணம் பண்ணும் ஆசையோ ?

ஐயோ there is nothing wrong with money making.. don't
you want to make money.. நீ என்ன கம்மூனிஸ்டா என்று
கேட்டுக்கொண்டு சிலர் (அடிக்க) வந்துவிடுவார்களோ :-)

then where do we draw the line ?
- maximum good to the maximum number? Does this
include a number of animals ?
- maximum good to maximum human beings - எங்கள் நாட்டு
மாடுகள் கேட்டிருக்க வேண்டுமிதை :-)
- or is it some where close to what the society
currently believes is the maximum good & politically
correct.

அது சரி மாடுதான் கஷ்டப் படுது , கோழி ? கோழியின் கதை என்ன
- If allowed to live a full life, the domestic chicken
could live for 13-14 years!
- Adult chicken can recognize and remember about 100
other chicken.
- Mother hens communicate with their chicks while they
are still in the egg through soft chirping and
clucking and unhatched chicks also communicate with
one another!
என்று ஒரு இடத்தில் படித்தேன்.

இதை போய் யாரிடமாவது சொன்னால் என்ன பதில் வரும். "...யோவ்
போய்யா வேலையை பத்துக்கிட்டு. கோழியை 14 வருஷம் வளக்கணுமாம்.
வனவாசம் போனவரு திரும்பி வந்தா வேர கோழி சமைச்சுக்கலாம்
இப்பத்திக்கு இதை வெட்டுன்னு .." பதில் வரும்.

என் நண்பர் ஒருவரின் கேலி நினைவுக்கு வருகிறது ..இது வாழ்க்கை தம்பி
வாழ்க்கை. இது என்ன ஆர்ட் படமா. கோழியையும் நாலு குஞ்சையும் பத்து
நிமிடம் திரையில காமிப்பான். ஆர்ட் படம் பாக்கப் போர நாமளா
புரிஞ்சுக்கணும் இது வெரும் கோழீ இல்லை ஒரு தாயின் வடிவம்னு :-) :-)

இப்படி எழுதும் போதே என் political correctnessஇன்மை
புலப்படுகிறது. என்ன தாய்னா கோழியா.. அவ்வளவு இளக்காரமா
போயிருச்சான்னு சிங்கப்பூர் சேச்சி கோபிக்காதிருந்தால் சரி :-)

கோழி படும் பாடு ..Read the full article article at
http://www.hsus.org/programs/farm/chickens/life_on_factory.html
http://www.hsus.org/programs/farm/chickens/

பல சமையம் மனிதன் தானே தனக்கு கெடுதல் செய்துகொள்கிறான்.
இதுக்கெல்லாம் என்ன சட்டம் போடுவது எந்த இணையத்தில் எழுதுவது ? ஒலிம்பிக்
பந்தையத்தில் ஓடப் போகும் ஒருவன் தனது புஷ்டிக்காக பல வகை உணவுகளை ,
அனுமதிக்கப்பட்ட , படாத மருந்துகளை சாப்பிடுகிறான். இவையும் கேடு
விளைவிக்கலாம். அவனே தானே பண்ணிக்கிட்டான். போயிட்டு போரான்.

Horlicks உடலுக்கு நல்லதா இல்லையா என்று ஆராச்சி உண்டா என்ன :-) ?
பளு தூக்கப் போகிறவன் சில உணவு வகைகளை சாப்பிடுகிறான். இவற்றில்
செயர்க்கை உணவு வகைகள் பலதும் உள்ளன. செயற்கை --> இயற்கைக்கு எதிராக
போகலாம். குத்துச் சண்டை வீரர்கள் அடிபட்டு முடமாகி காலம் கழிப்பதுண்டு.

ஐயோ கால்பந்து ஆடப் போகாதே காலை முறித்துக் கொள்வாய் என்றால் who
will win the game and who will win the race. அட அந்த
வாழ்க்கையெனும் "பெரிய ரேஸ்" இல்லிங்க :-). கிண்டி ரேசும் இல்லீங்க
:-). சாதாரணமான rat race :-) தினம் நடக்கும் ஓட்டம்.

இதே போல் பன்றி வதையும் ... Ref :
http://www.hsus.org/programs/farm/halthogfactories/hf_report.pdf
http://www.hsus.org/programs/farm/halthogfactories/hf_sustainable.html

பன்றிக்கு அறிவுண்டா? தெரியாது. ஆனால் வலி உண்டு. அடித்தால் பன்றிக்கும்
வலிக்கும். வலிக்குமா இல்லையா ? எனக்கென்னவோ சந்தேகம் தான் .
பன்றிக்கும் வலிக்கும் என்று எண்ணுகின்றேன். வாய் இருந்தால் .. அமெரிக்க
பன்றியையும் இந்தியப் பன்றியையும் கேட்டு தான் சொல்ல வேண்டும், எந்தப்
பன்றி சுகமாக வாழ்கிறது என்று :-)
http://www.peta.org/feat/invest/
http://www.washingtonpost.com/ac2/wp-dyn?pagename=article&node=&contentId=A63486-2001Sep8

இது ஒரு பக்கம் இருக்க there are some who claim that
mechanised farming indirectly harms human beings . mad
cow - இந்த ஆதாயம் தேடும் பண்ணைதான் காரணம். foot and mouth
disease - இந்த ஆதாயம் தேடும் பண்ணைதான் காரணம் ..எல்லாம் இவர்கள்
தலையில் தான்.

There is a legislation covering Organic farming (no
idea how effective this is.. )
http://www.ams.usda.gov/nop/nop2000/nop2/finalrulepages/finalrulemap.htm
http://www.mountainx.com/opinion/2001/0822animalrights.html
http://www.farmsanctuary.org/media/nj.htm


கோழிக்கு இருதய நோய் வரக்கூடும்ன்னு நான் எழுதினா இங்கே கண்ணீரை விட
சிரிப்புத் தான் வரக் கூடும். ஏன்ன தம்பி ரொம்ப இளகின மனசோ :-)
என்றே கேள்வி வரும். ref :
http://www.hsus.org/programs/farm/chickens/life_on_factory.html
Thirty years ago, it took 14 weeks for a bird to reach
"market" weight. Today, these birds are genetically
and environmentally manipulated to grow so quickly
that they reach a "market weight" of over 6 pounds in
just 8 weeks! Some producers even keep the lights on
24 hours a day to trick the birds into eating more.
[என்ன கொடுமை - சிறை கைதிகளுக்குத் தான் இப்படி கஷட்டம் சில
நாடுகளில் என்று கேட்டதுண்டு ] Gaining weight at such a rapid
pace causes major health problems such as heart
failure. 1-3% (as many as 240 million) of chickens
hatched in the U.S. may die from it.

http://www.hsus.org/programs/farm/chickens/layinghens_fact.html
http://www.hsus.org/programs/farm/chickens/chickcontract.html

எல்லாம் காலச்சக்கரம் தம்பி . போகப் போக சரியாயிடும் என்று சிலர் .
ஆரம்பத்தில் வானொலிப் பெட்டிகள் வந்த பொழுது மர கூட்டுக்குள் வந்தன.
அப்பொழுது அக்ரிலிக் அல்லது பிளாஸ்டிக் கூடுகளுடன் வந்த வானொலிப்பெட்டிகள்
புதுமையாய் தோன்றின. இந்த புதுமை பழையதாகியபொழுது மரக் கூட்டுக்குள்
(மரம் போன்ற டிசைன் கூட்டுக்குள்) தொலைக் காட்சிப் பெட்டிகள் வரத்
தொடங்கிவிட்ட்டன. எல்லாம் ஒரு சுழல் தானோ ?

Some co-operative / companies have taken to
organic farming.
http://www.organicvalley.com/who/index.html
http://www.organicvalley.com/who/cooperative.html
இதுவும் மரக்கூடு தொலைக்காட்சி பெட்டி போல் ஒரு சுழலோ ? இதில் மட்டும்
கொடுமை இல்லையா என்ன ?

http://www1.cnn.com/2000/FOOD/news/09/20/humane.farms.ap/

Also read :
Dairy Cows
Life on a Factory Farm
http://www.hsus.org/programs/farm/cows/dairy_factsheet.html

Veal Fact Sheet
http://www.hsus.org/programs/farm/cows/veal_facts.html

Cruelty/Rewards
http://www.hsus.org/programs/farm/cruelty/

http://www.awionline.org/pubs/Quarterly/winter2001/mothernature.htm
http://www.navs.org/index.cfm

http://www.satyamag.com/jun01/khosla.html

முக்கியமா..
எங்க வீட்டில இயந்திரமயமாக்கப் பட்ட விவசாயமெல்லாம் கிடையாது. நான்
தான் மாடு கரக்கணும் :-) கடுதாசு எழுத உக்காந்து நேரம் ஆயிடுச்சுங்க.
இன்னும் எங்க வீட்டில மாடு கரக்கல்லே. இப்பத்திக்கு மாடு கரக்கப் போகணும்.
எனக்கோ காப்பி இல்லையின்னா காலும் ஓடாது கையும் ஓடாது. இன்னொரு நாள்
பாக்கலாம் ..சரியா :-)


anbu S





Balakrishnan M wrote:
>
> >From: Uttama Caitanya das
> >Reply-To: imnews@...
> >To: imnews@...
> >Subject: [imnews] Problem with drinking commercial
> milk - please clarify
> >Date: Thu, 25 Oct 2001 12:39:15 +0800

> >
> >A cow by nature is a grazing animal who needs to
> ingest huge quantities of grass, typically walking
4-5




__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com