From jaybee@... Fri Oct 26 08:23:56 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 26 Oct 2001 15:23:56 -0000
Received: (qmail 41329 invoked from network); 26 Oct 2001 15:23:55 -0000
Received: from unknown (10.1.10.142) by l10.egroups.com with QMQP; 26 Oct 2001 15:23:55 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta3 with SMTP; 26 Oct 2001 15:23:52 -0000
Received: from user (sp-103-249.tm.net.my [210.186.103.249]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GLT003EUJWEN9@...> for agathiyar@yahoogroups.com; Fri, 26 Oct 2001 23:19:28 +0800 (SGT)
Date: Fri, 26 Oct 2001 23:17:23 +0800
Subject: Chinese navaRathri - Nine Emperors' Festival
X-Sender: jaybee@...
To: "agathiyar@yahoogroups.com"
Message-id: <3.0.3.32.20011026231723.00707a44@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12689


சீனர்களின் நவராத்திரி

அன்பர்களே,

சீனர்களும் நவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள்.
ஆனால் அவர்கள் கொண்டாடும் காரணம்தான் வேறு. அதனை அவர்கள்
'Nine Emperors' Festival' என்று அழைக்கிறார்கள்.
அவர்களுடைய ஆண்டின் ஒன்பதாவது மாதத்தின் முதல் ஒன்பது
நாட்களும் இந்த விழா கொண்டாடப்படும்நாட்களாக அமைகின்றன.
இந்த ஒன்பதுநாட்களிலும் அவர்கள் புலால்உண்பது கிடையாது. தொடர்ச்சியாக
அன்னதானம் நிகழ்த்துவார்கள்.
ஒரு காலத்தில் ஒரு சக்கரவர்த்தியின் புதல்வர்களாகிய பத்து சூரியர்கள்
ஒரே சமயத்தில் சுட்டெரித்தனாராம். அப்போது அவர்களை அடக்குவதற்காக ஒரு
பெரிய தேவவீரனைக் வேண்டினராம். ஆனால் அவர்களில் ஒன்பது பேரை
அவன் கொன்றுவிட்டானாம். இதனால் பலசோதனைகள் அவனுக்கு
ஏற்பட்டனவாம். அந்த சோதனைகள், அவற்றை அவன் தாண்டியவிதம்
முதலியவை, ஒரு புராணம்போல் வழங்குகின்றன.
இந்தக் கதையுடன் அவனுடைய மனைவியின் வரலாறும்
சொல்லப்படுகிறது. அவள் நிலாதேவதையாக மாறிவிட்டதாகச் சொல்வார்கள்.
அவளுக்காக Autumn Moon Festival என்னும் Moon Cake Festival
கொண்டாடுகிறார்கள். அரிசி மாவால்செய்யப்பட்ட சுவையான இனிப்புப்
பலகாரம் அது.
ஒன்பது சூரியர்கள், எஞ்சிய ஒரு சூரியன், Autumn Moon என்ற
விஷயங்களையெல்லாம் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது ஏதோ விவசாயம்
சம்பந்தப்பட்ட மிகப் புராதனமான ஏதோ ஒரு கொண்டாட்டம் அல்லது சடங்கு
ஒன்று அடிநீரோட்டமாக ஓடுவது மட்டுப்படும்.
சுங்கைப் பட்டாணியில் மிக விமரிசையாக இந்த ஆண்டு
கொண்டாடினார்கள். அப்போது மிகப்பெரிய பலூன்களில் ராட்சத சிவப்பு நிற
லாந்தர் விளக்குகளை ஜோடி ஜோடியாகஇணைத்து கீழிருந்து மேலே வான்
உச்சிக்கு அவை மெதுவாக ஏறிச்சென்று
நிலாவைச்சுற்றி பறந்துகொண்டிருப்பது ஒரு அலாதியான காட்சி.
சில அமானுஷ்யமான காரியங்களையும் சிலர் செய்வார்கள்.
வானலியில் கொதித்துக்கொண்டிருக்கும் எண்ணெயில் அப்படியே கையை
விட்டு துளாவுவார்கள். கையில் ஏதும் ஏற்படமாட்டது. ஒரு பழைய புத்தகத்தில்
படங்கள் இருந்தன. தேடமுடிகிறதா என்று பார்க்கிறேன்.
காவடியும் எடுப்பார்கள்.

அதனை இந்தப்படத்தில் காணலாம்.
http://www.geocities.com/visva.geo/god03.jpg

நேற்று மஹாநவமியுடன் அவர்களின் விழா நிறைவுற்றது.

அன்புடன்

ஜெயபாரதி

===================================