From jaybee@... Fri Oct 26 17:25:20 2001
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 27 Oct 2001 00:25:19 -0000
Received: (qmail 29090 invoked from network); 27 Oct 2001 00:25:19 -0000
Received: from unknown (10.1.10.26) by l10.egroups.com with QMQP; 27 Oct 2001 00:25:19 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta1 with SMTP; 27 Oct 2001 00:25:18 -0000
Received: from user (sp-103-27.tm.net.my [210.186.103.27]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GLU00L4U962IX@...> for agathiyar@yahoogroups.com; Sat, 27 Oct 2001 08:25:17 +0800 (SGT)
Date: Sat, 27 Oct 2001 08:23:14 +0800
Subject: Re: [agathiyar] Bhuvaneswari Navaraatna Manimalai
In-reply-to: <006401c15dbe$d2790340$5a2136ca@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: Hari Krishnan
Message-id: <3.0.3.32.20011027082314.0074d008@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12694


அன்புள்ள ஹரி,

இதன் கருப்பொருள் காஞ்சி காமாட்சி சன்னிதியில், காயத்ரி
மண்டபத்தில் தோன்றியது. விதை, முளைப்பதற்கு முன்னால் ஒரு
உறக்கநிலையில் இருக்குமாம். அந்த உறக்கநிலையில் அது உயிர்த்துக்
கொண்டேவரும். அந்த உயிர்ப்பே அதன் முளைப்பாகவும் அதன்பின்னர்
அதன் வளர்ச்சியாகவும் பரிணமிக்கும்.
'ஆடிப் பட்டம் தேடிவிதை' என்று சொல்வார்கள் அல்லவா?
ஆடியில் விதைத்தது, ஐப்பசியில் விளைந்துவிட்டது. இயற்கைதானே?:-)

எழுத்தெண்ணிப் படிக்கவேண்டிய துதிநூல்.

வேறோர் இடத்தில் எல்லேய் சுவாமிநாதன் சொல்லியிருப்பதுபோல்
அட்சரலட்சம் - அட்சர நூறாயிரம் கொடுக்கவேண்டும்.

'எப்படிப் பாடினரோ?
அடியார் அப்படிப் பாட நான்
ஆசைகொண்டேன் சிவனே!
எப்படிப் பாடினரோ?
அப்பரும் சுந்தரரும் ஆளுடைப்பிள்ளையும்
அருமணிவாசகரும்
பெருமையுடன் உலகில்
எப்படிப்பாடினரோ?
என்ற பாடலைச் சற்று மாற்றிப் பாடவேண்டுமென்று இப்போதெல்லாம்
தோன்ற ஆரம்பித்துவிட்டது. எல்லாம் இந்த வேட்டை அனந்த்,
வாஞ்சிநாதன், ஹரி செய்கின்ற வேலைதான். முன்பு என் தமையனார்
என்னை வியக்கவைத்துக்கொண்டேயிருந்தார். இப்போது இவர்கள்....

அந்த 'உடலுற்றெழு உயிராய்' என்னும் முதற்பாடல் ஒரு
பழகிய ரீங்காரத்தை என் மனதில் எழுப்பித்துவிட்டது. An new
resonance of an old chiming......
திருஞானசம்பந்தப்பெருமானார் பாண்டிநாட்டிற்குள் நுழைந்து,
மதுரைக்குச் செல்லும் வழியில், முன்னிரவு நேரத்தில், திருப்புத்தூரிலிருந்து
மதுரையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது சில காததூரத்தில்
திருக்கொடுங்குன்ற மலை தெரிந்தது. அந்த மலையே சிவலிங்க வடிவமாக
அவருக்குத் தோன்றியதால், அந்த மண்னில் மிதிக்கவும் கூசிச்
'சென்ற நெடுவரை'யிலிருந்தவாறே 'திருக்கொடுங்குன்றத் திருப்பதிக'த்தைப்
பாடினாராம்.

வானிற்பொலி வெய்தும்மழை மேகம்கிழித் தோடிக்
கூனற்பிறை சேரும்குளிர் சாரல்கொடுங் குன்றம்
ஆனிற்பொலி வைந்தும் அமர்ந் தாடிஉல கேத்தத்
தேனிற்பொலி மொழியாளொடு மேயான்திரு நகரே!.....

மேகத்திடி குரல்வந்தெழ வெருவிவ்வரையிழியும்
கூகைக்குலம் ஓடித்திரி சாரற்கொடுங் குன்றம்
நாகத்தொடும் இளவெண்பிறை சூடிந்நல மங்கை
பாகத்தவன் இமையோர்தொழ மேவும்பழ நகரே!


இந்தத் திருப்பதிகம் என் மனதில் மிக ஆழமாகப் பதிந்துபோன
திருப்பதிகம். எத்தனையோ தலைமுறைகள்....பாடிப்பாடி, கேட்டுக்கேட்டுப்
பழகிப்போன பதிகம். எங்களுக்குள் ஊறிப்போன பதிகம். எங்களுடைய
திருப்பதிகம்.
அந்தத் திருப்பதிகத்தின் சாயலிலேயே முதற்பாட்டு.... பாடுவிக்கப்
பட்டிருக்கிறது.

ஒரே ஒரு சந்தேகம்.....

>புடவித்திரு வடிவாய்ப்பட புனிதத்தொரு மடியாய்
> பரையாய்த்திரி புரையாய்ப்பெரு புவனைப்பெயர் மறையாய்
> படர்பொற்கொடி சுடர்விட்டெரி பதந்தொட்டனன் டரால்
> படுவெந்துயர் கணமேபட திடமாயிரு மனனே. (1)

இதில் அந்த 'படர்பொற்கொடி சுடர்விட்டெரி பதந்தொட்டனன் டரால்'
என்னும் அடியில் கடைசியில் ஏதோ இடறிவிடுகிறதைப் போன்றதொரு
உணர்வு.
அதைக்கொஞ்சம் தெளிவு படுத்தினால் தேவலை.

அன்புடன்

ஜெயபாரதி


At 01:35 AM 10/26/01 +0000, you wrote:
>இதற்கு முன்னால் அனுப்பிய பாடல்கள் ஒன்றிரண்டில் இருந்த பிழைகளைத் திருத்திஅனுப்புகிறேன்.
>ஹரி கிருஷ்ணன்.
>
>புவனேஸ்வரி நவரத்ன மணி மாலை
>
>காப்பு
>
>தவனுடையோர் சிந்தையிலே தங்கிக் கிடக்கும்
>கவுரியின்தன் மூத்த களிறே - புவனையின்மேல்
>சொல்லால் நவமணிநான் சூட்டத் துணைபுரிவாய்
>வல்லபை தன்னோடு வந்து.
>------
>
>உடலுற்றெழு வுயிராய்உட னுணர்வுற்றெழு கவியாய்
> உலையுற்றெழு கொதியாயலை உததிப்பெரு நிதியாய்
> உதரத்துதி மகவாயது உருவுற்றெழு ஜகமாய்
> உரசிச்சர வெடியாய்க்கரு முகில்வெட்டிடு மிடியாய்
>அடிதொட்டிடு கனலாய்முடி யதுவெட்டிடு மினலாய்
> அருவித்திரள் புனலாய்வரு கதிர்கொட்டிடு தணலாய்
> அடலுற்றெழு பொறியாயுடல் அழிவுற்றிடு நெறியாய்
> அதிர்வுற்றிடு கழலாய்விதி யதுசெற்றிடு தழலாய்
>வடவைக்கனல் தனையும்சுடு வயிரப்படை துணையாய்
> மகிடத்தலை எரியச்சிகை புகையப்புகு மரியாய்
> வலியாய்ப்பெறு நிலையாயொலி ஹ்ரீமென்றிடும் அலையாய்
> மழையாகிய திரளாய்ப்பொழி மனநாடிய அருளாய்
>புடவித்திரு வடிவாய்ப்பட புனிதத்தொரு மடியாய்
> பரையாய்த்திரி புரையாய்ப்பெரு புவனைப்பெயர் மறையாய்
> படர்பொற்கொடி சுடர்விட்டெரி பதந்தொட்டனன் டரால்
> படுவெந்துயர் கணமேபட திடமாயிரு மனனே. (1)
>
>மனமே பேயே பெரும்பாழே
> மாயக் கனவின் பிறப்பிடமே
> வாழ்வும் மயர்வும் ஒன்றாக
> மயங்கிக் கலக்கு மிருளொளியே
>கனக்கும் சிந்தை கற்பனையும்
> கவிதைப் பரவச அதிர்வுகளும்
> கவலை பொய்கள் பெருமோகம்
> கலந்து கிடக்கும் உள்வெளியே
>உனக்காய் நினைத்தால் பறக்கின்றாய்
> உயரே போகையில் சரிகின்றாய்
> ஒவ்வொரு நாளும் ஓர்வடிவம்.
> உனக்கும் எனக்கும் என்னபகை?
>சினத்தைப் புகைக்கும் செயலாளின்
> செக்கர் பவளத் திதழாளின்
> தெரிசனம் உள்ளே வைப்பாயேல்
> தெளிவேன் உன்னைக் கும்பிடுவேன். (2)
>
>கும்பிடுவேன் நெஞ்சம் குளிர்வேன் குறைசூழ்ந்து
>வெம்பும் மிடியழிந்து மேனிமிர்வேன் - அம்புயமேல்
>பம்புபொற் பாதசர பச்சைத் திருமேனி
>அம்பிகைதாள் உச்சி அணிந்து. (3)
>
>துணிந்தவர் நெஞ்சிற் சுடர்விடும் சூலி தொடர்ந்தவள்தாள்
>பணிந்தவர் உள்ளம் பயின்றிடும் நீலி யவள்வடிவை
>அணிந்தா ரறிவினில் ஆழ்ந்தொரு ஞானத் தொளியுமிழ்வாள்
>சிணுங்கிடும் தண்டை யனுங்கிடும் தோகைப் பசுமயிலே. (4)
>
>மயிலாகி என்னுள் வளர்ந்தாடி வந்து
> வடிவாகி நின்ற உமையே
> வளமான சொல்லில் நடமாடி யென்றும்
> மகிழ்வாகும் என்றன் மகளே
>துயிலூடு வந்து தொடுவானில் சின்ன
> சுடராகும் வாலை யமுதே
> சுகமான வண்ணக் கவியாவி ளைந்து
> துடியாட்ட மாடு மொளியே
>பயில்கின்ற வேளை கிளியாக வந்து
> பரிகாச மென்ன பெண்ணே
> பண்ணோடு பாதம் கிண்ணென்று துள்ள
> பறந்தோடி வாவென் மயிலே
>அயலேயும் நின்று அருகாக வந்து
> அழகாக நோக்கு மம்மே
> அடிவாடி யென்றன் அபிராம வல்லி
> அமுதூறு முத்து மொழியே.(5)
>
>மொழியான சிந்தை அறிவாலயம்
> முடிவான எண்ணம் அன்பாலயம்
>வழியான கண்கள் விழிவாகனம்
> மனமீதில் அம்மை ஆவாகனம்
>பொழிகின்ற சொல்லில் பதிவாகிடும்
> புகழேறு கின்ற கோமேதகம்
>மெழுகென்ற போதும் என்றன்மனம்
> மினலாகி வெட்டும் அம்மைதினம். (6)
>
>அம்மா சுகவாணி ஆழியில் வந்தவளே
>iம்மா மலையுதித்த எம்மிதய - சிம்மத்தில்
>பொற்பதும ராகம்சேர் பூணிற் பொலிபவளே
>சிற்பரையே சிந்தை தெளி. (7)
>
>தெளித்த கோலம் வானெல்லாம்
> சிதறிக் கிடக்கும் செம்பவளம்
> தீப்பட் டெரியும் மாணிக்கம்
> செக்கச் சிவந்த கெம்புக்கல்
>வளிமண் டலமே வயிரக்கல்
> மஞ்சள் பச்சை நீலத்தில்
> மாயா ஜால வைடூர்யம்
> வானக் கடலில் நன்முத்து
>வெளிதட விடுமொளி புவனையின்கண்
> விரிந்த நீலம் அவளுடலே
> மெய்யாய் துர்க்கை கெளரியுமாய்
>விமலை நிமலை கமலையுமாய்
> அளித்துக் காக்கும் அன்னையுமாய்
> அன்பிற் கனிந்த தேவியுமாய்
> அடியாற் கெல்லாம் ன்னுயிராய்
> ஆகும் செம்மை மாமணியே. (8)
>
>செம்மாமணி என்பொன்மணி திவ்யத்திருக் கோலம்
> தெளிவானவள் அருளானவள் அறிவானவெண் கமலச்
> சிம்மாசனி மயில்வாகனி மனவாலயப் படிவம்
> செய்தெய்வத வதனத்திரு சிறுபுன்னகை மலர
>எம்மாதவர் எக்காரணர் எவ்வேதமும் நாடும்
> எழிற்பொற்பதம் தருமற்புதம் தனிலொர்பொடி யாலே
> எனையாள்கிற வாக்வாதினி யிடுபிச்சையி னாலே
> எளியேன்மனம் கவிதைக்கடல் தனையுற்றொளி சேரும்
>அம்மாஉனை கண்பொங்கிட கரம்கும்பிடநாளும்
> அருவீணையின் சையின்கதி அமைவுற்றிட நெஞ்சம்
> அதிகாலையில் நனிமாலையில் உனைநாடிடச் செய்வாய்
> அகிலங்களை வசமாக்கிட அருகுற்றருள் பெய்வாய்
>எம்மைச்சுடு மறியாமையின் ருள்முற்றிலும் போக்கி
> iதயத்தினை கமலத்தொரு வெள்ளைமல ராக
> ஏற்றம்பட மாற்றம்பெற எமையாக்குதல் கடனே!
> iறைவிப்பெரு வாணிக்கழல் துயர்போக்கிடு முடனே! (9)
>
>நூற்பயன்
>
>கேட்ட பொருளெதுவும் கேட்காத நற்பயனும்
>வாட்டம் தொலைத்த மனநிலையும் - கூட்டும்
>புவனைக்கு நாம்பூட்டும் பூந்தமிழ்ப் பாட்டாம்
>நவரத்ன மாலை நலம்.
>
>