From nswaminathan@... Fri Oct 26 19:17:08 2001
Return-Path: X-Sender: nswaminathan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 27 Oct 2001 02:17:08 -0000
Received: (qmail 62486 invoked from network); 27 Oct 2001 02:17:07 -0000
Received: from unknown (10.1.10.27) by l10.egroups.com with QMQP; 27 Oct 2001 02:17:07 -0000
Received: from unknown (HELO orngca-mls03.socal.rr.com) (66.75.160.18) by mta2 with SMTP; 27 Oct 2001 02:17:07 -0000
Received: from default (sc-66-27-189-161.socal.rr.com [66.27.189.161]) by orngca-mls03.socal.rr.com (8.11.4/8.11.4) with SMTP id f9R2H7U15628 for ; Fri, 26 Oct 2001 19:17:07 -0700 (PDT)
Message-ID: <003001c15e8c$3e1ffa40$a1bd1b42@...>
To: Subject: Bhuvaneswari Navaratna Manimalai
Date: Fri, 26 Oct 2001 19:08:17 -0700
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
From: "Narayan Swaminathan" X-Yahoo-Message-Num: 12695
சரஸ்வதி பூஜை முடிந்து வந்து கணினியைத் திறந்தவுடன் கண்ணில் பட்டது
ஹரியின் புவனேஸ்வரி நவரத்ன மணிமாலை.
சும்மா சொல்லக்கூடாது.
ஹரிக்கு சரஸ்வதி கடாட்சம் பூரணமாகவே இருக்கிறது. கடைக்கண் பார்வை
இல்லை, முழுப்பார்வையேதான்.
என்னை மிகவும் கவர்ந்த வரிகள்:
மயிலாகி என்னுள் வளர்ந்தாடி வந்து
வடிவாகி நின்ற உமையே
வளமான சொல்லில் நடமாடி யென்றும்
மகிழ்வாகும் என்றன் மகளே
துயிலூடு வந்து தொடுவானில் சின்ன
சுடராகும் வாலை யமுதே
சுகமான வண்ணக் கவியாவி ளைந்து
துடியாட்ட மாடு மொளியே
பயில்கின்ற வேளை கிளியாக வந்து
பரிகாச மென்ன பெண்ணே
பண்ணோடு பாதம் கிண்ணென்று துள்ள
பறந்தோடி வாவென் மயிலே
அயலேயும் நின்று அருகாக வந்து
அழகாக நோக்கு மம்மே
அடிவாடி யென்றன் அபிராம வல்லி
அமுதூறு முத்து மொழியே.(5)
அடேங்கப்பா,ஆற்றொழுக்கு போல என்ன துள்ளல், ஓட்டம் பாருங்கள் !