From sadayan50@... Fri Oct 26 23:28:00 2001
Return-Path: X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 27 Oct 2001 06:28:00 -0000
Received: (qmail 21267 invoked from network); 27 Oct 2001 06:28:00 -0000
Received: from unknown (10.1.10.142) by l8.egroups.com with QMQP; 27 Oct 2001 06:28:00 -0000
Received: from unknown (HELO web13802.mail.yahoo.com) (216.136.175.12) by mta3 with SMTP; 27 Oct 2001 06:28:00 -0000
Message-ID: <20011027062756.77178.qmail@...>
Received: from [194.170.168.244] by web13802.mail.yahoo.com via HTTP; Fri, 26 Oct 2001 23:27:56 PDT
Date: Fri, 26 Oct 2001 23:27:56 -0700 (PDT)
Subject: Re: [agathiyar] Navaraaththiri customs -special#2
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20011026182121.00743338@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 12700
--- jaybee wrote:
>
> அன்பர்களே,
> பள்ளிக்குச் சென்று ஆசிரியருக்குச் 'சம்பாவனை' என்னும்
> தட்சிணையோடு தேங்காய், பழம், வேட்டி(இந்த இடத்தில் கமா போட
> மறந்துவிட்டேன். நல்லவேளை. ஞாபகம் வந்தது. இல்லையெனில்,
> "என்னடாயிது? ஆசிரியருக்குப் பழம்வேட்டி கொடுக்கிறார்களே? குடுகுடுப்பை
>
> ஆண்டிக்கல்லவா கொடுப்பது வழக்கம்!" என்று இராமுருகன் கேட்பார் அல்லவா?)
>
> துண்டு, போன்றவற்றை வைத்துக்கொடுப்பார்கள். புதிய சிறார்களை
> ஆசிரியர்
> தம் மடியில் வைத்துக்கொண்டு வித்யாரம்பம் ஆரம்பமாகும். மாணவனின்
> சிறு விரலைப்பிடித்து, ஆற்றுமணலில் எழுத்தெழுதச் சொல்லிக்கொடுப்பார்.
> அந்த முதல் எழுத்துக்களை,
> "அரி, சித்தரி, நானா, மோனா, இத்தன்னா, தூனா, சீனா,
> இந்தன்னா, இம்மன்னா",
> என்று சொல்லி எழுதவைப்பார்கள்.
> 'அரி சித்தரி நமோத்துசிந்தம்' என்னும் மந்திரமே இப்படி எழுத்துக்கூட்டிச்
>
> சொல்லப்பட்டது. சமணமூலத்தைக் கொண்டது. 'சித்தர் வணக்கம்'
> என்பது சமணத்தில் மிகவும் இன்றியமையாதது. சமணத்தில் கூறப்பட்டிருக்கும்
> சித்தர்கள் வேறுவகையானவர்கள். வழக்கமாகப் பெரும்பாலோரால் கற்பனை
> செய்யப்படும் 'நட்டக்கல்லைச்சுத்திவந்த' ஸ்டீர்யோடைப் சித்தர்களல்லர்.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
பெரியய்யா,
என்காலத்தில் சிலேட்டு பலப்பம் வந்து விட்டது. அதற்கு முன்பாக பெர்சுகள்
சொல்லக் கேட்டிருக்கிறேன். தாம்பாளத்தில் அரிசியை பரப்பி அதில்
அ னா
ஆ வன்னா
இ னா
ஈ யன்னா
என எழுதி கல்வியை ஆரம்பிப்பார்களாம். இன்றும் "அறிவோம்" என்று
அரிசியில் ஆரம்பித்தது என்பார்கள். இந்த "அறிவோம்" என்பது "ஹரிஓம்"
என்பதிலிருந்து திரிந்ததா ? அப்படியெனில் "ஹரிஓம்" என்பதன் அர்த்தம்
என்ன ? ( திரு. ஹரி கிருட்டினனின் கை பரபரப்பது தெரிகிறது )