From jaybee555@... Sat Oct 27 00:14:18 2001
Return-Path: X-Sender: jaybee555@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 27 Oct 2001 07:14:18 -0000
Received: (qmail 98583 invoked from network); 27 Oct 2001 07:14:18 -0000
Received: from unknown (10.1.10.26) by 10.1.1.222 with QMQP; 27 Oct 2001 07:14:18 -0000
Received: from unknown (HELO smtp015.mail.yahoo.com) (216.136.173.59) by mta1 with SMTP; 27 Oct 2001 07:14:18 -0000
Received: from unknown (HELO user) (210.186.103.28) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 27 Oct 2001 07:14:16 -0000
X-Apparently-From: Message-Id: <3.0.3.32.20011027151150.0075b92c@...>
X-Sender: jaybee555@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Sat, 27 Oct 2001 15:11:50 +0800
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Navaraaththiri customs -special#2
Cc: Shaboo In-Reply-To: <20011027062756.77178.qmail@...>
References: <3.0.3.32.20011026182121.00743338@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 12701
அன்புள்ள சாபு,
At 11:27 PM 10/26/01 -0700, you wrote:
>
>--- jaybee wrote:
>>
>
>பெரியய்யா,
>
>என்காலத்தில் சிலேட்டு பலப்பம் வந்து விட்டது. அதற்கு முன்பாக பெர்சுகள்
>சொல்லக் கேட்டிருக்கிறேன். தாம்பாளத்தில் அரிசியை பரப்பி அதில்
>
>அ னா
>ஆ வன்னா
>இ னா
>ஈ யன்னா
>
>என எழுதி கல்வியை ஆரம்பிப்பார்களாம்.
ஆமாம். பெரும்பாலும் அரிசியில்தான் எழுதி ஆரம்பிப்பார்கள்.
>இன்றும் "அறிவோம்" என்று
>அரிசியில் ஆரம்பித்தது என்பார்கள்.
இது இன்னொரு வாக்கியம். முதலிலேயே சொல்லமறந்துவிட்டேன்.
ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு வந்தவுடனும் பள்ளி முடிந்து வீடு திரும்பும்போதும்
இதை ஒரே குரலில் எல்லா மாணவர்களும் சொல்லவேண்டும்.
அறிவோம் நன்றாக
குரு வாழ்க
குருவே துணை
இதில் வரும் 'அறிவோம்' என்பது 'கல்வியை அறிவோம்' என்று
குறிக்கும் என்று என் தமையனார் சொன்னார். சிலநாட்களுக்கு முன்னர்
பினாங்கு சென்றிருந்தபோது, அவருடையஏட்டுப்பள்ளிப் படிப்பு
அனுபவங்களைக் கேட்டுப் பதிவுசெய்துகொண்டுவந்தேன். சுவடிகள், ஏடு,
எழுத்தாணி சம்பந்தமாக டீவீயில் பேட்டி எடுத்தபோது, எழுத்தாணி பிடித்து
எழுதுவதையும் அவரிடமேயே கேட்டுத் தெரிந்துகொண்டேன். பெரும்புலவர்;
அருட்கவிஞர்.
அது பாருங்கள்; இவ்வளவு சீக்கிரம் கைகொடுக்கிறது.
இப்போது காலம் மாறிபோச்சு. மலேசியாவில் தமிழர்களிடையே
gangsterism அதிகமாகப்போய் அது ஒரு பெரிய பிரச்னையாக
உருவாகி நிற்கிறது. அந்த குண்டாயிசம் பள்ளிகளில் அதிகம்
ஊடுருவிவிட்டது. ஆகையால் இங்குள்ள ஆசிரியர்கள் நிலை வேறு.
அந்த வாசகத்தைச் சற்று மாற்றவேண்டும்:
'குருவே துணை' என்ற நிலை மாறி இப்போது குருவுக்கு துணை
தேவைபடுகிறது
>இந்த "அறிவோம்" என்பது "ஹரிஓம்"
>என்பதிலிருந்து திரிந்ததா ?
இல்லை.
அதுவாக இருந்தால் அக்காலத்து சைவர்கள் இதைச்
சொல்லியிருக்கமாட்டார்கள்:-) ஆனால் வழக்கத்தில் பார்க்கும்போது
எல்லோருமே சொல்லியிருக்கிறார்கள்.
அப்படியெனில் "ஹரிஓம்" என்பதன் அர்த்தம்
>என்ன ? ( திரு. ஹரி கிருட்டினனின் கை பரபரப்பது தெரிகிறது )
'ஹரி: ஓம்' என்பது விஷ்ணுவை முன்னிலைப்படுத்தி
ஓங்காரத்தைச் சொல்வது. சைவர்கள் சொல்லும் 'அரஹரா ஓம்'-ஐப்
போன்றது.
ஆமாம்.
மாம்பலக்கவிச்சிங்க நாவலர் என்னும் பெருங்கவிஞர் ஒருவருக்கு
இராமநாதபுரம் சேதுபதி, ஒரு தங்கத்தாம்பாளத்தில் தேங்காய், பழம்,
உடை, சம்பாவனை ஆகிவற்றை வைத்துக்கொடுத்திருக்கிறார்.
தாம்பாளத்தைக் கையில் வாங்கிய கவிச்சிங்கம்,
"தட்டு இங்கேயா, அங்கேயா?" என்று இரு பொருள்பட கேட்டிருக்கிறார்.
சேதுபதி விதிர்விதிர்த்துப் போனார்.
'தட்டு' என்பது முடைப்பாட்டையும் குறிக்கும். மேலும் சேது சமஸ்தானம்
சற்று முடைப்பாட்டில் இருந்துவந்தது. அதுவும் எல்லாருக்கும் தெரியும்.
'தட்டு இங்கு' என்று சொல்லி தட்டைத் திருப்பிவாங்கிக்கொண்டாலோ
புலவர் வாக்கு - அறம் விழுந்துவிடும்.
ஆகவே, சேதுபதி மிக அவசரமாக அவசரமாக,
"இல்லை. இல்லை. தட்டு அவ்விடமே இருக்கட்டும்", என்று
சொல்லிவிட்டார். கவிச்சிங்கம் தாம்பாளத்தைத் தன்வசமே வைத்துக்கொண்டு
விட்டது.
இந்தப் பெரிசுகளோடு இதுதான் கோளாறு; ஏதாவது வில்லங்கமாக
என்னத்தையாவது சொல்லிவிடும்கள்.