From eramurug@... Sat Oct 27 07:47:32 2001
Return-Path: X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 27 Oct 2001 14:47:31 -0000
Received: (qmail 26743 invoked from network); 27 Oct 2001 14:47:30 -0000
Received: from unknown (10.1.10.26) by l7.egroups.com with QMQP; 27 Oct 2001 14:47:30 -0000
Received: from unknown (HELO web14806.mail.yahoo.com) (216.136.224.222) by mta1 with SMTP; 27 Oct 2001 14:47:30 -0000
Message-ID: <20011027144730.77823.qmail@...>
Received: from [210.214.128.229] by web14806.mail.yahoo.com via HTTP; Sat, 27 Oct 2001 07:47:30 PDT
Date: Sat, 27 Oct 2001 07:47:30 -0700 (PDT)
Subject: silent anger
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <9re1rm+4bkl@eGroups.com>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin" X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 12704
கன்னட இலக்கியத்தில் டாக்டர் சித்தலிங்கையாவின் இடம் முக்கியமானது.
தலித் இலக்கியத்தின் வீறும் வீச்சும் எழுச்சியும் புலப்படும் இவர்
எழுத்துக்களில் உள்ளடங்கி ஒலிக்கும் கோபக்குரல் வித்தியாசமானது. அவருடைய
சினத்தைப் பன்மடங்கு பெருக்கி வாசக அனுபவமாக்குவது இந்த அடங்கிய குரல்
தான்.
சித்தலிங்கய்யாவின் "ஊரும் சேரியும்" வாழ்க்கை வரலாற்றிலிருந்து சில
பகுதிகள் - மொழிபெயர்த்தவர் என் இனிய நண்பர் எழுத்தாளர் பாவண்ணன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
"சேரியின் கடைசி வீடு எங்களுடைய வீடு. நானும் மற்றப் பிள்ளைகளும்
வீட்டுக்குப் பக்கத்தில் குட்டிச் சுவர் மேல் ஏறி நின்று, தூரத்தில் பார்வையை
வீசி, வேலைக்குப் போயிருக்கும் எங்கள் அப்பா, அம்மாவை "சீக்கிரம்
வீட்டுக்குத் திரும்புங்கள்" என்று கூவுவோம். எங்கள் அழைப்பு அவர்களின்
காதுகளில் விழுந்ததா என்று தெரியாது. குட்டிச் சுவருக்கு ஐநூறு அடி தூரத்தில்
ஐயரின் நிலம் ஆரம்பமாகியது.
ஒரு நாள் குட்டிச் சுவரின் மேல் ஏறி அப்பா அம்மாவைத் தேடிக் கூவிக்
கொண்டிருக்கும் போது ஒரு காட்சி தெரிந்தது. ஐயரின் நிலத்தில் இரண்டு
பேர் நுகத்தடிகளைச் சுமக்க, ஒருவன் கலப்பையை அழுத்தி உழுது கொண்டிருந்தான்.
நுகத்தடியைச் சுமந்த இருவரும் எருதுகள் போல் சென்று கொண்டிருக்க, மூன்றாவது
ஆள் பின்னால் நின்று உழுத காட்சி ஏதோ மாயாஜாலக் காட்சி போல்
தெரிந்தது.
நுகத்தடியைச் சுமந்த இருவரில் ஒருவர் என் தந்தை என்று தெரிந்த போது என்
மனதில் இனம் புரியாத வேதனை பரவியது"
-------------------------------------------------------
"சில சமயம் அப்பா என்னை ஊர் நடுவில் இருந்த ஓட்டலுக்கு அழைத்துச்
செல்வார். ஓட்டல்காரர் மற்றவர்களிடமிருந்து தள்ளி எங்களை உட்கார
வைப்பார். ஓட்டல்காரர் கொடுத்த இட்டலிகளைத் தின்பது மிகவும் ஆனந்தமாக
இருந்தது. அந்த இட்டலிகளின் வடிவம், மிருதுவன தன்மை ஆகியவற்றால்
ஈர்க்கப்பட்டு அதன் ருசியில் மூழ்கியிருந்த எங்களுக்கு வேறு எந்த விதமான
எண்ணங்களும் அவசியமற்றதாகத் தோன்றின."
-------------------------------------------------------
"பாட்டி என்னை அக்கம்பக்கத்து ஊர்களில் நடக்கும் திருவிழாக்களுக்கு அழைத்துச்
செல்வாள். ஒருநாள் நான் தெருவில் வேகமாக ஓடிக் கொண்டிருந்தேன். எதிரே
வந்து கொண்டிருந்தவரின் சட்டை மேல் என் கை பட்டு விட்டது. அவர் இதனால்
மிகவும் கோபம் கொண்டு நின்று விட்டார். நானும் பயத்தில் நின்றேன்.
பாட்டி அவரிடம் கெஞ்சிக் கூத்தாடி மன்னிப்பு வாங்கினாள். அன்றிலிருந்து
என்னை ஓடக் கூடாது என்று தடுத்து விட்டாள். மேல் சாதிக்காரர்களின்
கோபத்துக்கு ஆளாகி விடுவேனோ என்று மிகவும் பயந்தாள். பெரியவர்கள்
யாரைப் பார்த்தாலும் உடனே கை குவித்து, "கும்புடறேங்க சாமி" என்று
சொல்ல வேண்டும் என்று வற்புறுத்தினாள். நானும் அவளுடைய பேச்சைக் கேட்டு
நடந்து எல்லோருடைய பாராட்டுக்களையும் வாங்கினேன்."
-------------------------------------------------------
"திருவிழா சமயத்தில் சாமி வந்து ஆடுகிறவர்கள் ரொம்ப தூரத்துக்கு
ஓடுவார்கள். ஜனங்களும் பின்னாலேயே ஓடுவார்கள். சாமி ஓடிக் களைத்து
நிற்கும். ஜனங்களும் நிற்பார்கள். எலும்பும் தோலுமான ஒரு கிழவன் தான்
சாமியிடம் பேசுவான்.
கிழவன் (சாமியிடம்) : இத்தன நாளா எங்க போயிருந்த?
சாமி : உங்க ஒரு ஊரு மட்டுந்தான் இருக்குதா? மூணு உலகத்தையும் நான் பார்க்க
வேணாமா?
கிழவன் : நாங்கள்ளாம் எவ்வளவு கஷ்டப் படறோம் தெரியுமா?
சாமி : நான் மட்டும் சுகமாவா இருக்கேன்?"
-------------------------------------------------------
"சில நண்பர்கள் ஒன்று சேர்ந்து பெங்களூரின் சேரிப் புறங்களில் இரவுப்
பள்ளிகளைத் துவக்கினோம். பெங்களூரில் சேஷாத்திரி
புரத்தில் இரவுப் பள்ளி எப்படி நடக்கிறது என்று பார்த்து வரச்
சென்றிருந்தபோது அங்கே நான்கைந்து பிள்ளைகள் தலை நிற்காமல் கண்கள்
செருக எழுதிக் கொண்டிருந்தார்கள். முதலில் அவர்கள் உடல்நிலை குன்றியிருக்க
வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் உண்மை வேறாக இருந்தது. அவர்களுடைய
பெற்றோர்களுக்கு அந்தப் பிள்ளைகளுக்குச் சாப்பாடு போடும் சக்தி இல்லை.
இதனால் தாம் தயாரித்த கள்ளச் சாராயத்தையே ஊற்றிக் குடிக்க வைத்துப்
பள்ளிக்கு அனுப்பினார்கள். அந்தக் குழந்தைகள் பசியை மறக்க மூச்சு முட்டக்
குடித்திருந்தாலும், படிக்கும் ஆர்வம் மனதுக்குள் அழியவில்லை."
சரசுவதி பூசை வாழ்த்துக்கள்,
இரா.முருகன்
__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com