From anbudan ananth@... Sat Oct 27 10:00:15 2001
Return-Path:
X-Sender: anbudan ananth@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 27 Oct 2001 17:00:14 -0000
Received: (qmail 67455 invoked from network); 27 Oct 2001 17:00:14 -0000
Received: from unknown (10.1.10.142) by 10.1.1.223 with QMQP; 27 Oct 2001 17:00:14 -0000
Received: from unknown (HELO web20604.mail.yahoo.com) (216.136.226.162) by mta3 with SMTP; 27 Oct 2001 17:00:14 -0000
Message-ID: <20011027170014.81986.qmail@...>
Received: from [64.230.96.111] by web20604.mail.yahoo.com via HTTP; Sat, 27 Oct 2001 10:00:14 PDT
Date: Sat, 27 Oct 2001 10:00:14 -0700 (PDT)
Subject: Re: [agathiyar] Re: Bhuvaneswari Navaratna Manimalai
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <9re1rm+4bkl@eGroups.com>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: V Ananth
X-Yahoo-Message-Num: 12706

நம் ஹரியின் புவனேஸ்வரி நவரத்தின மாலையின் அமைப்பில், அழகில்,
ஒளியில் மனம் கிறங்கிப்போனேன். விஜயதசமியான நேற்றுப் பூசையில்
வைத்து எப்போதும் முதலில் படிக்கும் திருப்புகழோடு அரியின் மணிமாலையையும்
சேர்த்துப் படித்தேன். தெய்வீகம் ஊறிய பாடல்கள். அவளே அரியின் கையை
இயக்குவிப்பது தெரிகிறது. இப்போதுதான் எல்.ஏ.சு., நா.கணேசன்,
யோகியார், இலந்தையார், ஜேபி ஆகியோரின் பாராட்டுரைகளைப்
படித்தேன். அவர்களோடு என் பாராட்டுகளையும் சேர்க்கிறேன்:

அரியானின் சோதரி அன்னை அவள்தன்

அரியானை ஒத்த நடையில் - அரியான்

அரியரியாய்க் கோத்தான் மணிமாலை யாப்பில்

அரியாம் அரியென்(று) அறி

-- திருமாலின் சகோதரியான அம்பிகையவள் பயிலும் சிங்கநடையும் களிற்று
நடையும் தன் கவிதையில் (முறையே விருத்தங்களிலும், வெண்பாக்களிலும்)
பயில, நம் அரிகிருட்டிணன் சரம்சரமாய்க் கோத்தளித்த நவரத்தின
மணிமாலையைப் படித்தபின், கவிதை அமைப்பதில் ஹரி ஒரூ சிங்கமென்று
அறியலாகும்.
அன்புடன் அனந்தன்

பி,கு. எல்.ஏ.சு. சுட்டிய அற்புதமான வரிகளோடு, ஜேபியை ஈர்த்த
'உடலுற்றெழு உயி'ரும், மற்றுமுள்ள அத்தனைச் சொற்களுமே என்னைப்பார்,
என்னைப்பார் என்று அழைக்கின்றன. அவற்றையெல்லாம் பற்றி இங்கு எழுத
ஆசைதான். ஆனால் இடம் இருக்காது. (எடுத்துக்காட்டாக, 'மனமே, பேயே'
என்ற 2-ஆவது பாடலில் வரும் மயர்வு என்னும் சொல் ஆழ்ந்த பொருள்கொண்டது
(மயக்கம், அஞ்ஞானம்). அங்கு மனத்தை வர்ணிக்கும் விதம் மிக அழகு.

நவமணிகளையும் மந்திர ஒலிகளையும் விதம் விதமான பாவினங்களில்
உணர்ச்சிபொங்க அமைப்பது இமாலயச் சாதனை. ஆகையால் அம்மைக்கு
நவரத்தினமாலை அளித்த அரிகிருட்டிணருக்குக் 'கவிரத்தினம்' என்ற பட்டத்தை
(மேற்கண்ட பாடலில் சொன்ன கவிச்சிங்கம் என்பதோடு சேர்த்து) அளிக்கலாம்
என்று ஓர் ஆசை!

ஹரி: 2-ஆவது பாடலின் ஈற்றடியில், 'தெளிவாய்' என்றிருந்தால்
முன்னடிகளில் காணும் முன்னிலை வினையோடு ஒக்கும் எனப்படுகிறது. 9-ஆவது
பாடலின் ஈற்றடியில் 'இறைவிப்பெருவாணிக்கழல் துயர்போக்கிடும்' என்பதன்
பொருள் எனக்கு முழுமையாக விளங்கவில்லை, விளக்கினால் நன்றிசொல்வேன்.


--- naga_ganesan@... wrote:
>
> உண்மைதான்.
>
> கவிஞர் அரிகிருஷ்ணனிடம் தமிழ் எழில் நடனமிடுகிறாள்.
> இஇiலந்தையார், அனந்து, சந்திரா, சிவஞானம் ... கவிதைகள்
> அபாரம்-
>
> ரா. முருகுவின் நடைநயம் சொக்கவைக்கிறது.
>
> - அகத்தியக்குழுவின் படைப்பாளிகளின்
> அருமைத் தமிழின் ஒரு அடிமை.
>
> --- In agathiyar@y..., "Narayan Swaminathan"
> wrote:
> >
> > சரஸ்வதி பூஜை முடிந்து வந்து கணினியைத் திறந்தவுடன் கண்ணில் பட்டது
> > ஹரியின் புவனேஸ்வரி நவரத்ன மணிமாலை.
> >
> > சும்மா சொல்லக்கூடாது.
> >
> > ஹரிக்கு சரஸ்வதி கடாட்சம் பூரணமாகவே இருக்கிறது. கடைக்கண் பார்வை
> > இல்லை, முழுப்பார்வையேதான்.
> >
> > என்னை மிகவும் கவர்ந்த வரிகள்:
> >
> >
> > மயிலாகி என்னுள் வளர்ந்தாடி வந்து
> > வடிவாகி நின்ற உமையே
> > வளமான சொல்லில் நடமாடி யென்றும்
> > மகிழ்வாகும் என்றன் மகளே
> > துயிலூடு வந்து தொடுவானில் சின்ன
> > சுடராகும் வாலை யமுதே
> > சுகமான வண்ணக் கவியாவி ளைந்து
> > துடியாட்ட மாடு மொளியே
> > பயில்கின்ற வேளை கிளியாக வந்து
> > பரிகாச மென்ன பெண்ணே
> > பண்ணோடு பாதம் கிண்ணென்று துள்ள
> > பறந்தோடி வாவென் மயிலே
> > அயலேயும் நின்று அருகாக வந்து
> > அழகாக நோக்கு மம்மே
> > அடிவாடி யென்றன் அபிராம வல்லி
> > அமுதூறு முத்து மொழியே.(5)
> >
> > அடேங்கப்பா,ஆற்றொழுக்கு போல என்ன துள்ளல், ஓட்டம் பாருங்கள் !
> >
> > பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
> >
> > சுவாமிநாதன்
> > லாஸ் ஏஞ்சலஸ்


__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com