From eramurug@... Sat Oct 27 17:32:07 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 28 Oct 2001 00:32:07 -0000
Received: (qmail 52191 invoked from network); 28 Oct 2001 00:32:06 -0000
Received: from unknown (10.1.10.27) by l9.egroups.com with QMQP; 28 Oct 2001 00:32:06 -0000
Received: from unknown (HELO web14809.mail.yahoo.com) (216.136.224.230) by mta2 with SMTP; 28 Oct 2001 00:32:06 -0000
Message-ID: <20011028003206.45370.qmail@...>
Received: from [210.214.131.176] by web14809.mail.yahoo.com via HTTP; Sat, 27 Oct 2001 17:32:06 PDT
Date: Sat, 27 Oct 2001 17:32:06 -0700 (PDT)
Subject: Re: [agathiyar] Re: Bhuvaneswari Navaratna Manimalai
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <20011027170014.81986.qmail@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 12709

அன்புள்ள அரி,




--- V Ananth wrote:
> நம் ஹரியின் புவனேஸ்வரி நவரத்தின மாலையின் அமைப்பில், அழகில்,
> ஒளியில் மனம் கிறங்கிப்போனேன். விஜயதசமியான நேற்றுப் பூசையில்
> வைத்து எப்போதும் முதலில் படிக்கும் திருப்புகழோடு அரியின்
> மணிமாலையையும்
> சேர்த்துப் படித்தேன். தெய்வீகம் ஊறிய பாடல்கள். அவளே அரியின்
> கையை
> இயக்குவிப்பது தெரிகிறது. இப்போதுதான் எல்.ஏ.சு., நா.கணேசன்,
> யோகியார், இலந்தையார், ஜேபி ஆகியோரின் பாராட்டுரைகளைப்
> படித்தேன். அவர்களோடு என் பாராட்டுகளையும் சேர்க்கிறேன்:
>
> அரியானின் சோதரி அன்னை அவள்தன்
>
> அரியானை ஒத்த நடையில் - அரியான்
>
> அரியரியாய்க் கோத்தான் மணிமாலை யாப்பில்
>
> அரியாம் அரியென்(று) அறி
>
> -- திருமாலின் சகோதரியான அம்பிகையவள் பயிலும் சிங்கநடையும்
> களிற்று
> நடையும் தன் கவிதையில் (முறையே விருத்தங்களிலும், வெண்பாக்களிலும்)
> பயில, நம் அரிகிருட்டிணன் சரம்சரமாய்க் கோத்தளித்த நவரத்தின
> மணிமாலையைப் படித்தபின், கவிதை அமைப்பதில் ஹரி ஒரூ சிங்கமென்று
> அறியலாகும்.
> அன்புடன் அனந்தன்
>
> பி,கு. எல்.ஏ.சு. சுட்டிய அற்புதமான வரிகளோடு, ஜேபியை ஈர்த்த
> 'உடலுற்றெழு உயி'ரும், மற்றுமுள்ள அத்தனைச் சொற்களுமே என்னைப்பார்,
> என்னைப்பார் என்று அழைக்கின்றன. அவற்றையெல்லாம் பற்றி இங்கு எழுத
> ஆசைதான். ஆனால் இடம் இருக்காது. (எடுத்துக்காட்டாக, 'மனமே, பேயே'
> என்ற 2-ஆவது பாடலில் வரும் மயர்வு என்னும் சொல் ஆழ்ந்த பொருள்கொண்டது
> (மயக்கம், அஞ்ஞானம்). அங்கு மனத்தை வர்ணிக்கும் விதம் மிக அழகு.
>
> நவமணிகளையும் மந்திர ஒலிகளையும் விதம் விதமான பாவினங்களில்
> உணர்ச்சிபொங்க அமைப்பது இமாலயச் சாதனை. ஆகையால் அம்மைக்கு
> நவரத்தினமாலை அளித்த அரிகிருட்டிணருக்குக் 'கவிரத்தினம்' என்ற
> பட்டத்தை
> (மேற்கண்ட பாடலில் சொன்ன கவிச்சிங்கம் என்பதோடு சேர்த்து)
> அளிக்கலாம்
> என்று ஓர் ஆசை!
>
> ஹரி: 2-ஆவது பாடலின் ஈற்றடியில், 'தெளிவாய்' என்றிருந்தால்
> முன்னடிகளில் காணும் முன்னிலை வினையோடு ஒக்கும் எனப்படுகிறது. 9-ஆவது
> பாடலின் ஈற்றடியில் 'இறைவிப்பெருவாணிக்கழல் துயர்போக்கிடும்' என்பதன்
> பொருள் எனக்கு முழுமையாக விளங்கவில்லை, விளக்கினால்
> நன்றிசொல்வேன்.
>
>
> --- naga_ganesan@... wrote:
> >
> > உண்மைதான்.
> >
> > கவிஞர் அரிகிருஷ்ணனிடம் தமிழ் எழில் நடனமிடுகிறாள்.
> > இஇiலந்தையார், அனந்து, சந்திரா, சிவஞானம் ... கவிதைகள்
> > அபாரம்-
> >
> > ரா. முருகுவின் நடைநயம் சொக்கவைக்கிறது.
> >
> > - அகத்தியக்குழுவின் படைப்பாளிகளின்
> > அருமைத் தமிழின் ஒரு அடிமை.
> >
> > --- In agathiyar@y..., "Narayan Swaminathan"
> > wrote:
> > >
> > > சரஸ்வதி பூஜை முடிந்து வந்து கணினியைத் திறந்தவுடன் கண்ணில் பட்டது
> > > ஹரியின் புவனேஸ்வரி நவரத்ன மணிமாலை.
> > >
> > > சும்மா சொல்லக்கூடாது.
> > >
> > > ஹரிக்கு சரஸ்வதி கடாட்சம் பூரணமாகவே இருக்கிறது. கடைக்கண்
> பார்வை
> > > இல்லை, முழுப்பார்வையேதான்.
> > >
> > > என்னை மிகவும் கவர்ந்த வரிகள்:
> > >
> > >
> > > மயிலாகி என்னுள் வளர்ந்தாடி வந்து
> > > வடிவாகி நின்ற உமையே
> > > வளமான சொல்லில் நடமாடி யென்றும்
> > > மகிழ்வாகும் என்றன் மகளே
> > > துயிலூடு வந்து தொடுவானில் சின்ன
> > > சுடராகும் வாலை யமுதே
> > > சுகமான வண்ணக் கவியாவி ளைந்து
> > > துடியாட்ட மாடு மொளியே
> > > பயில்கின்ற வேளை கிளியாக வந்து
> > > பரிகாச மென்ன பெண்ணே
> > > பண்ணோடு பாதம் கிண்ணென்று துள்ள
> > > பறந்தோடி வாவென் மயிலே
> > > அயலேயும் நின்று அருகாக வந்து
> > > அழகாக நோக்கு மம்மே
> > > அடிவாடி யென்றன் அபிராம வல்லி
> > > அமுதூறு முத்து மொழியே.(5)
> > >
> > > அடேங்கப்பா,ஆற்றொழுக்கு போல என்ன துள்ளல், ஓட்டம் பாருங்கள் !
> > >
> > > பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
> > >
> > > சுவாமிநாதன்
> > > லாஸ் ஏஞ்சலஸ்
>
>
> __________________________________________________
> Do You Yahoo!?
> Make a great connection at Yahoo! Personals.
> http://personals.yahoo.com
>
> ------------------------ Yahoo! Groups Sponsor
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to
> http://docs.yahoo.com/info/terms/
>
>


__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com