From eramurug@... Sat Oct 27 17:41:04 2001
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 28 Oct 2001 00:41:04 -0000
Received: (qmail 5920 invoked from network); 28 Oct 2001 00:41:03 -0000
Received: from unknown (10.1.10.26) by 10.1.1.223 with QMQP; 28 Oct 2001 00:41:03 -0000
Received: from unknown (HELO web14809.mail.yahoo.com) (216.136.224.230) by mta1 with SMTP; 28 Oct 2001 00:41:03 -0000
Message-ID: <20011028004103.46058.qmail@...>
Received: from [210.214.131.176] by web14809.mail.yahoo.com via HTTP; Sat, 27 Oct 2001 17:41:03 PDT
Date: Sat, 27 Oct 2001 17:41:03 -0700 (PDT)
Subject: Re: [agathiyar] Re: Bhuvaneswari Navaratna Manimalai
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <20011028003206.45370.qmail@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 12710

அன்புள்ள அரி,

நானே காப்பி போட்டு, கையில் காப்பிக் கோப்பையோடு வாசலில் அழைப்பு
மணியைக் கேட்டு (இன்றைக்கு வங்கி விடுமுறை என்பதால் அவள் பின் தூங்கிப்
பின் எழுவாள்) ஒருவிரல் கிருஷ்ணாராவாக விசைப் பலகையில் விளையாடியபடி
எழுந்தால் இப்படித்தான் - கடிதம் எழுத ஆரம்பிப்பதற்கு முன் போயே போச்..

புவனேசுவரி நவமணி மாலையில் - embedded mantra,
technicalities - பற்றிச் சாவகாசமாகச் சொல்வதாக
எழுதியிருந்தீர்களே, என்ன ஆச்சு?



அன்புடன்,
இரா.முருகன்



--- "era.murugan achwin" wrote:
> அன்புள்ள அரி,
>
>
>
>
> --- V Ananth wrote:
> > நம் ஹரியின் புவனேஸ்வரி நவரத்தின மாலையின் அமைப்பில், அழகில்,
> > ஒளியில் மனம் கிறங்கிப்போனேன். விஜயதசமியான நேற்றுப் பூசையில்
> > வைத்து எப்போதும் முதலில் படிக்கும் திருப்புகழோடு அரியின்
> > மணிமாலையையும்
> > சேர்த்துப் படித்தேன். தெய்வீகம் ஊறிய பாடல்கள். அவளே அரியின்
> > கையை
> > இயக்குவிப்பது தெரிகிறது. இப்போதுதான் எல்.ஏ.சு., நா.கணேசன்,
> > யோகியார், இலந்தையார், ஜேபி ஆகியோரின் பாராட்டுரைகளைப்
> > படித்தேன். அவர்களோடு என் பாராட்டுகளையும் சேர்க்கிறேன்:
> >
> > அரியானின் சோதரி அன்னை அவள்தன்
> >
> > அரியானை ஒத்த நடையில் - அரியான்
> >
> > அரியரியாய்க் கோத்தான் மணிமாலை யாப்பில்
> >
> > அரியாம் அரியென்(று) அறி
> >
> > -- திருமாலின் சகோதரியான அம்பிகையவள் பயிலும் சிங்கநடையும்
> > களிற்று
> > நடையும் தன் கவிதையில் (முறையே விருத்தங்களிலும், வெண்பாக்களிலும்)
> > பயில, நம் அரிகிருட்டிணன் சரம்சரமாய்க் கோத்தளித்த நவரத்தின
> > மணிமாலையைப் படித்தபின், கவிதை அமைப்பதில் ஹரி ஒரூ சிங்கமென்று
> > அறியலாகும்.
> > அன்புடன் அனந்தன்
> >
> > பி,கு. எல்.ஏ.சு. சுட்டிய அற்புதமான வரிகளோடு, ஜேபியை ஈர்த்த
> > 'உடலுற்றெழு உயி'ரும், மற்றுமுள்ள அத்தனைச் சொற்களுமே என்னைப்பார்,
> > என்னைப்பார் என்று அழைக்கின்றன. அவற்றையெல்லாம் பற்றி இங்கு எழுத
> > ஆசைதான். ஆனால் இடம் இருக்காது. (எடுத்துக்காட்டாக, 'மனமே,
> பேயே'
> > என்ற 2-ஆவது பாடலில் வரும் மயர்வு என்னும் சொல் ஆழ்ந்த
> பொருள்கொண்டது
> > (மயக்கம், அஞ்ஞானம்). அங்கு மனத்தை வர்ணிக்கும் விதம் மிக அழகு.
> >
> > நவமணிகளையும் மந்திர ஒலிகளையும் விதம் விதமான பாவினங்களில்
> > உணர்ச்சிபொங்க அமைப்பது இமாலயச் சாதனை. ஆகையால் அம்மைக்கு
> > நவரத்தினமாலை அளித்த அரிகிருட்டிணருக்குக் 'கவிரத்தினம்' என்ற
> > பட்டத்தை
> > (மேற்கண்ட பாடலில் சொன்ன கவிச்சிங்கம் என்பதோடு சேர்த்து)
> > அளிக்கலாம்
> > என்று ஓர் ஆசை!
> >
> > ஹரி: 2-ஆவது பாடலின் ஈற்றடியில், 'தெளிவாய்' என்றிருந்தால்
> > முன்னடிகளில் காணும் முன்னிலை வினையோடு ஒக்கும் எனப்படுகிறது.
> 9-ஆவது
> > பாடலின் ஈற்றடியில் 'இறைவிப்பெருவாணிக்கழல் துயர்போக்கிடும்'
> என்பதன்
> > பொருள் எனக்கு முழுமையாக விளங்கவில்லை, விளக்கினால்
> > நன்றிசொல்வேன்.
> >
> >
> > --- naga_ganesan@... wrote:
> > >
> > > உண்மைதான்.
> > >
> > > கவிஞர் அரிகிருஷ்ணனிடம் தமிழ் எழில் நடனமிடுகிறாள்.
> > > இஇiலந்தையார், அனந்து, சந்திரா, சிவஞானம் ... கவிதைகள்
> > > அபாரம்-
> > >
> > > ரா. முருகுவின் நடைநயம் சொக்கவைக்கிறது.
> > >
> > > - அகத்தியக்குழுவின் படைப்பாளிகளின்
> > > அருமைத் தமிழின் ஒரு அடிமை.
> > >
> > > --- In agathiyar@y..., "Narayan Swaminathan"
> > > wrote:
> > > >
> > > > சரஸ்வதி பூஜை முடிந்து வந்து கணினியைத் திறந்தவுடன் கண்ணில்
> பட்டது
> > > > ஹரியின் புவனேஸ்வரி நவரத்ன மணிமாலை.
> > > >
> > > > சும்மா சொல்லக்கூடாது.
> > > >
> > > > ஹரிக்கு சரஸ்வதி கடாட்சம் பூரணமாகவே இருக்கிறது. கடைக்கண்
> > பார்வை
> > > > இல்லை, முழுப்பார்வையேதான்.
> > > >
> > > > என்னை மிகவும் கவர்ந்த வரிகள்:
> > > >
> > > >
> > > > மயிலாகி என்னுள் வளர்ந்தாடி வந்து
> > > > வடிவாகி நின்ற உமையே
> > > > வளமான சொல்லில் நடமாடி யென்றும்
> > > > மகிழ்வாகும் என்றன் மகளே
> > > > துயிலூடு வந்து தொடுவானில் சின்ன
> > > > சுடராகும் வாலை யமுதே
> > > > சுகமான வண்ணக் கவியாவி ளைந்து
> > > > துடியாட்ட மாடு மொளியே
> > > > பயில்கின்ற வேளை கிளியாக வந்து
> > > > பரிகாச மென்ன பெண்ணே
> > > > பண்ணோடு பாதம் கிண்ணென்று துள்ள
> > > > பறந்தோடி வாவென் மயிலே
> > > > அயலேயும் நின்று அருகாக வந்து
> > > > அழகாக நோக்கு மம்மே
> > > > அடிவாடி யென்றன் அபிராம வல்லி
> > > > அமுதூறு முத்து மொழியே.(5)
> > > >
> > > > அடேங்கப்பா,ஆற்றொழுக்கு போல என்ன துள்ளல், ஓட்டம் பாருங்கள் !
> > > >
> > > > பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
> > > >
> > > > சுவாமிநாதன்
> > > > லாஸ் ஏஞ்சலஸ்
> >
> >
> > __________________________________________________
> > Do You Yahoo!?
> > Make a great connection at Yahoo! Personals.
> > http://personals.yahoo.com
> >
> > ------------------------ Yahoo! Groups Sponsor
> >
> >
> >
> > Your use of Yahoo! Groups is subject to
> > http://docs.yahoo.com/info/terms/
> >
> >
>
>
> __________________________________________________
> Do You Yahoo!?
> Make a great connection at Yahoo! Personals.
> http://personals.yahoo.com
>
> ------------------------ Yahoo! Groups Sponsor
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to
> http://docs.yahoo.com/info/terms/
>
>


__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com