From sadayan50@... Sun Oct 28 01:33:53 2001
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 0 1); 28 Oct 2001 09:33:53 -0000
Received: (qmail 56227 invoked from network); 28 Oct 2001 09:33:53 -0000
Received: from unknown (10.1.10.27) by m8.onelist.org with QMQP; 28 Oct 2001 09:33:53 -0000
Received: from unknown (HELO web13801.mail.yahoo.com) (216.136.175.11) by mta2 with SMTP; 28 Oct 2001 09:33:53 -0000
Message-ID: <20011028093353.94565.qmail@...>
Received: from [213.42.0.242] by web13801.mail.yahoo.com via HTTP; Sun, 28 Oct 2001 01:33:53 PST
Date: Sun, 28 Oct 2001 01:33:53 -0800 (PST)
Subject: Re: [agathiyar] silent anger
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <20011027144730.77823.qmail@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 12718


--- "era.murugan achwin" wrote:
> கன்னட இலக்கியத்தில் டாக்டர் சித்தலிங்கையாவின் இடம் முக்கியமானது.
> தலித் இலக்கியத்தின் வீறும் வீச்சும் எழுச்சியும் புலப்படும் இவர்
> எழுத்துக்களில் உள்ளடங்கி ஒலிக்கும் கோபக்குரல் வித்தியாசமானது.

நண்பரே..

கோபம் உங்களுக்கு மட்டுமா ? .. சித்தலிங்கையாவின் கவிதை,
மொழிபெயர்ப்பு உங்கள் நண்பர் பாவண்ணன்

கத்தாழை முட்கள் பாலில்லாக் கன்னிகள்
உடலைக் கிழிக்கும் கிளைநீண்ட மரங்கள்
இவற்றோடு கொஞ்சம் பேச வேண்டும்

இரவல் ஒளிதரும் நிலவுடன் சிற்சில
கேள்விகள் கேட்க வேண்டும்
அழகான ரோஜாக்களை முட்களிடமிருந்து
விடுதலை செய்ய வேண்டும்

நீரில்லாத கிணறுகள் வாயில்லாத அமைச்சர்கள்
சிகைக்காய் மரங்கள் நடமாடும் போலீசார்
உலகமே உன்னை நான் பார்க்க வேண்டும்
சொற்பொழிவுகள் போல் திரண்டெழும்
வெண்மேகங்களால் மழை பொழிவதுமில்லை
பயிர் விளைவதுமில்லை

காலம் காலமாக வராதபடி மழையைத் தடுத்துக்
கொண்டிருப்பவர்கள் யார் ?
காமனின் வில்லாலே நட்சத்திரங்களைக் குறிபார்த்து
வீழ்த்துபவர்கள் யார் ?

சூரியனை முந்தானையால் மறைத்துக் கொண்டு
பெருகும் இருளை இன்னும் பெருகச் செய்பவர்கள் யார்?
மா பலாவின் விளைச்சலைப் பிடுங்கிக் கொண்டு
பெண்ணுமில்லாத ஆணுமில்லாத
ஆன்மாக்களைத் தோற்றுவிப்பவர்கள் யார்?

உலகமே உன்னை நான் பார்க்க வேண்டும்
உன்னோடு பேச வேண்டும்

=====
அன்புடன்

சாபு

__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com