> இன்றோ, "மார்கரீட்டா..மார்க்கரீட்டா" என்று பஞ்சு போல் மெத்தென்று
> ஆண்குரல்..
>
> "கட்டிப் புடிடா" என்று கரகரப்பாகப் பெண்குரல்..
>
> சகாப்தங்கள் முடிந்து விட்டன..எச்ச சொச்சங்களின் வெற்றொலி தான்
> மிகுதியும். இப்போது
நான்கு வாரங்களுக்கு முன் சன் தொலைக்காட்சியில் ஞாயிறன்று ஒளிபரப்பாகும்
"பாட்டுக்குப் பாட்டு" நிகழ்ச்சியில் ஒரு சிறுமி தனது முதல் பாடலாக
"காற்றினிலே வரும் கீதம்" என்ற பாட்டைப்பாடி "திருமதி. எம்.எஸ்"
அவர்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினாள். மன்றத்தில் அனைவரும்
கைதட்டி பாராட்டினார்கள். தொகுப்பாளர் "அப்துல் ஹமீட்" ரொம்பவும்
அச்சிறுமியை சிலாகித்தார். அடுத்த சுற்று வரும்போது அச்சிறுமி பாடிய
பாட்டைக் கேட்டு அவர் முகம் சுளித்தது வெளிப்படையாக தெரிந்தது.
அச்சிறுமி பாடிய பாடல் "காணக் கருங்குயிலே கச்சேரிக்கு வரியா
வரியா?" நல்லவேளை அச்சிறுமி "மலெ மலெ மலெ மருதமலை"
பாடவில்லை, பாடினால் அடித்தே விட்டிருப்பார்.
=====
அன்புடன்
சாபு
__________________________________________________
Do You Yahoo!?
Make a great connection at Yahoo! Personals.
http://personals.yahoo.com